போற போக்கை பாத்தா.. ஃபைனலில் இந்தியாவுடன் அவங்க தான் மோதுவாங்க போல.. ஆகாஷ் சோப்ரா

Aakash Chopra 3
- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் அக்டோபர் 18ஆம் தேதி நடைபெற்ற போட்டியில் ஆப்கானிஸ்தானை 149 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து எளிதாக தோற்கடித்தது. அதனால் இதுவரை பங்கேற்ற தங்களுடைய முதல் 4 போட்டிகளில் தொடர்ந்து 4 வெற்றிகளை பதிவு செய்துள்ள அந்த அணி புள்ளி பட்டியலில் இந்தியாவைப் பின்னுக்கு தள்ளி நம்பர் ஒன் இடத்தை பிடித்து செமி ஃபைனல் வாய்ப்பை இப்போதே உறுதி செய்துள்ளது.

அதில் கேப்டன் கேன் வில்லியம்சன் காயம் காரணமாக 3 போட்டிகளில் விளையாடவில்லை. இருப்பினும் டாம் லாதம் தலைமையில் ட்ரெண்ட் போல்ட், டேவோன் கான்வே உள்ளிட்ட ஏனைய வீரர்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டு நியூசிலாந்துக்கு எவ்விதமான பின்னடைவும் ஏற்படாமல் தொடர்ந்து வெற்றி நடை போட உதவி வருகிறார்கள்.

- Advertisement -

ஃபைனலில் சந்திக்குமா:
அதனால் 2019 உலகக்கோப்பை ஃபைனலில் தோற்காக போதிலும் ஐசிசியின் முட்டாள்தனமான விதிமுறையால் இங்கிலாந்திடம் இழந்த கோப்பையை இம்முறை இந்திய மண்ணில் நியூஸிலாந்து முத்தமிடுமா என்ற எதிர்பார்ப்பு அந்நாட்டு ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது. ஆனால் ஒருவேளை அப்படி அந்த அணி ஃபைனலுக்கு வந்தால் நிச்சயமாக 2011 போல சொந்த மண்ணில் கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்படும் இந்திய அணியின் கனவு வெறும் கனவாகவே போவதற்கு அதிக வாய்ப்புள்ளது.

ஏனெனில் வரலாற்றில் நடைபெற்ற பெரும்பாலான ஐசிசி தொடர்களில் நியூசிலாந்திடம் தொடர்ந்து இந்தியா தோல்விகளை சந்தித்து வருகிறது. குறிப்பாக 2000 நாக் அவுட் டிராபி ஃபைனலிலும் சரி 2016 டி20 உலக கோப்பையில் சொந்த மண்ணிலும் சரி 2019 உலகக்கோப்பை செமி ஃபைனலிலும் சரி நியூசிலாந்திடம் தரமான வீரர்களை கொண்டிருந்தும் இந்தியா தோல்வியை சந்தித்தது.

- Advertisement -

சொல்லப்போனால் கடைசியாக கடந்த 2003 உலகக் கோப்பையில் கங்குலி தலைமையில் வென்றிருந்த இந்தியா அதன் பின் கடந்த 20 வருடங்களில் 2021 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் உட்பட அனைத்து வகையான ஐசிசி தொடர்களிலும் நியூசிலாந்திடம் தோல்விகளை சந்தித்து வருகிறது. இந்நிலையில் இத்தொடரில் வெளிப்படுத்தும் அபார செயல்பாடுகளை வைத்து பார்க்கும் போது இந்தியாவுடன் நவம்பர் 19ஆம் தேதி நடைபெறும் ஃபைனலில் மோதும் அணியாக நியூசிலாந்து இருக்கும் என்று ஆகாஷ் சோப்ரா கணித்துள்ளார்.

இதையும் படிங்க: உ.கோ 2023 பட்டியலில் ரூட், வார்னரை முந்திய கிங் கோலி.. ஐசிசி வெளியிட்ட மாஸ் புள்ளிவிவரம்

இது பற்றி தனது ட்விட்டரில் அவர் பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “நியூசிலாந்து என்ன ஒரு அபாரமான அணியாக இருக்கிறது. அதன் காரணமாக இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் ஃபைனலில் மோதினால் அதை பார்த்து ஆச்சரியப்படாதீர்கள். இப்படி சொல்வது முன்னதாகவே இருக்கலாம். இருப்பினும் அனைத்தும் எப்படி நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்” என்று கூறியுள்ளார். இந்த சூழ்நிலையில் அக்டோபர் 22ஆம் தேதி இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் தரம்சாலா மைதானத்தில் மோத உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement