உலகக் கோப்பை தோல்வியால் அவரோட கேரியர் முடிய போறதில்ல.. இன்னும் நிறைய சாதிப்பாரு.. சச்சின் பாராட்டு

- Advertisement -

மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற்று முடிந்த ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் 10 தொடர்ச்சியான வெற்றிகளை பெற்று அட்டகாசமாக செயல்பட்ட இந்திய மாபெரும் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் கோப்பையை கோட்டை விட்டது. அதனால் 2011 போல சொந்த மண்ணில் புதிய சாம்பியனாக சாதனை படைக்கும் பொன்னான வாய்ப்பை தவறவிட்ட இந்தியா 2013க்குப்பின் தொடர்ந்து 10வது வருடமாக ஐசிசி தொடரில் தோல்வியை சந்தித்தது.

அதே போல இத்தொடரில் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் மிகச் சிறப்பாக செயல்பட்டும் கோப்பையை வெல்ல முடியாமல் கண்கலங்கி நின்றது ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக அமைந்தது. குறிப்பாக ரோகித் சர்மாவை விட உச்சகட்டமாக 765 ரன்களை விளாசிய விராட் கோலி ஒரு உலகக்கோப்பையில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்று சச்சின் டெண்டுல்கரின் சாதனையை உடைத்தார்.

- Advertisement -

சச்சின் பாராட்டு:
மேலும் சச்சினை முந்தி ஒருநாள் கிரிக்கெட்டில் 50 சதங்கள் எடுத்த முதல் வீரர் என்ற சாதனை படைத்த அவர் கடைசியில் கோப்பையை வெல்ல முடியாமல் ஏமாற்றத்தை சந்தித்தார். இந்த சூழ்நிலையில் 35 வயதை கடந்து விட்ட விராட் கோலி 2024 டி20 உலகக் கோப்பையில் விளையாடுவாரா அல்லது 2027 உலகக் கோப்பையில் விளையாட முடியுமா என்பது போன்ற நிறைய கேள்விகள் காணப்படுகின்றன.

இந்நிலையில் தம்முடைய உலக சாதனைகளை உடைத்த விராட் கோலியிடம் இன்னும் கிரிக்கெட்டில் சாதிப்பதற்கு நிறைய திறமைகள் இருப்பதாக சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார். எனவே 2023 உலகக்கோப்பை தோல்வியை வைத்து அவருடைய கேரியரை யாரும் முடிவு செய்ய வேண்டியதில்லை என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“அந்த சாதனையை அவர் செய்ய முடிந்ததற்காக நான் மகிழ்ச்சியடைகிறேன். இந்த சமயத்தில் அவருடைய பயணம் இத்துடன் நின்று விடாது என்று நான் உறுதியாக நம்புகிறேன். இன்னும் அவருக்குள் நிறைய கிரிக்கெட்டும் ரன்களும் இருக்கிறது. அவரிடம் நாட்டுக்காக இன்னும் சிறப்பாக விளையாடி நிறைய சாதனை செய்து வெற்றிகளை பெற்றுக் கொடுப்பதற்கான பசி அதிகமாக இருக்கிறது. அந்த சாதனையை தொடர்ந்து இந்தியாவிடம் இருப்பதை நினைத்து நான் மகிழ்ச்சியடைகிறேன்”

இதையும் படிங்க: 52/6 என சரிந்த தமிழகம்.. அதிரடியாக காப்பாற்றிய டிகே.. பரோடாவை நடராஜன் முடித்தது எப்படி?

“மேலும் இந்தியாவுக்கு சொந்தமான சாதனை எப்போதும் இந்தியாவிடம் தொடர்ந்து இருக்க வேண்டும் என்று நான் சொல்லி வருகிறேன்” என கூறினார். இதை தொடர்ந்து ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்று வரும் டி20 தொடரில் ஓய்வெடுத்து வரும் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் அடுத்ததாக தென்னாப்பிரிக்க தொடரில் விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement