வெறித்தனமான பேட்ஸ்மேன், வெறித்தனமான சாதனைகள் – இந்திய ஸ்டார் வீரரை வியந்து பாராட்டும் ஷேன் வாட்சன்

Watson-1
- Advertisement -

வரலாற்றில் 8வது முறையாக ஆஸ்திரேலியாவில் பரபரப்பாக நடைபெற்று வரும் ஐசிசி டி20 உலக கோப்பையில் 2007க்குப்பின் 15 வருடங்கள் கழித்து 2வது கோப்பையை வெல்லும் முனைப்புடன் விளையாடி வரும் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா இதுவரை பங்கேற்ற 4 போட்டிகளில் 3 வெற்றிகளை பதிவு செய்து அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்துள்ளது. இந்தியாவின் இந்த வெற்றி நிலைக்கு நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி தான் முழுமுதற் காரணம் என்றே கூறலாம். குறிப்பாக கடந்த 15 வருடங்களில் 3 வகையான கிரிக்கெட்டிலும் ஏராளமான வெற்றிகளை பெற்றுக் கொடுத்த அவர் 2019க்குப்பின் பார்மை இழந்து சதமடிக்க முடியாமல் தவித்து வந்தார்.

Virat Kohli IND vs BAN

- Advertisement -

அதனால் இதே உலகக் கோப்பையில் அவருக்கு வாய்ப்பளிக்க கூடாது என நன்றியை மறந்து நிறைய இந்திய முன்னாள் வீரர்கள் கடுமையாக விமர்சித்தனர். ஆனால் அதற்கெல்லாம் கோபித்துக் கொள்ளாமல் கடுமையாக உழைத்து வந்த அவர் சமீபத்திய ஆசிய கோப்பையில் சதமடித்து விமர்சனங்களை அடித்து நொறுக்கி பார்முக்கு திரும்பினார். அதே புத்துணர்சியுடன் இந்த உலகக் கோப்பையில் பரம எதிரியான பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியிலேயே 31/4 என்ற மோசமான தொடக்கத்துடன் இந்தியா தடுமாறிய போது வரலாற்றின் மிகச் சிறந்த இன்னிங்ஸ் விளையாடிய அவர் 82* (53) ரன்கள் குவித்து அசாத்தியமான வெற்றியை பெற்றுக் கொடுத்தார்.

வெறித்தனமான பேட்ஸ்மேன்:
அதை தொடர்ந்து நெதர்லாந்துக்கு எதிரான போட்டியிலும் 62* ரன்கள் குவித்து மிரட்டிய அவர் துண்டு ஒரு தடவை தவறியதை போல் தென்னாப்பிரிக்க போட்டியில் 12 ரன்களில் அவுட்டானாலும் மீண்டும் வங்கதேசத்துக்கு எதிரான முக்கிய போட்டியில் 64* ரன்கள் குவித்து வெற்றி பெற வைத்தார். பொதுவாகவே இதே போல் அனைத்து போட்டிகளிலும் அனைத்து தொடர்களிலும் அசத்தக் கூடிய அவர் இந்த உலகக் கோப்பையில் இது வரை 220* ரன்களை விளாசி அதிக ரன்கள் குவித்த பேட்ஸ்மேனாக சாதனை படைத்துள்ளார். அதைவிட ஒட்டுமொத்தமாக 1060 ரன்களை குவித்துள்ள அவர் டி20 உலக கோப்பை வரலாற்றில் அதிக ரன்கள் குவித்த பேட்ஸ்மேன் என்ற ஜெயவர்தனேவின் (1012) சாதனையை தகர்த்து புதிய உலக சாதனை படைத்தார்.

அதுபோக ஏற்கனவே டி20 உலக கோப்பை வரலாற்றில் அதிக ஆட்டநாயகன் விருதுகள், அதிக அரை சதங்கள், அதிக பேட்டிங் சராசரியை கொண்ட பேட்ஸ்மேன் என்ற மிரள வைக்கும் உலக சாதனைகளையும் அவர் படைத்து டி20 உலக கோப்பையின் நாயகனாக ஜொலிக்கிறார். இந்நிலையில் வெறும் 23 இன்னிங்ஸ்களிலேயே 1000 ரன்களை குவித்து ஏராளமான சாதனைகளை படைத்துள்ள விராட் கோலி டி20 உலக கோப்பையின் வெறித்தனமான பேட்ஸ்மேன் என்று முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் ஷேன் வாட்சன் வியந்து பாராட்டியுள்ளார்.

- Advertisement -

இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “உலகக்கோப்பையில் அவர் 1000க்கும் மேற்பட்ட ரன்களை 80க்கும் மேற்பட்ட சராசரியில் குவித்துள்ளார் என்பதை பார்க்கும் போது என்னால் தலையை வேறு பக்கம் திருப்ப முடியவில்லை. ஏனெனில் டி20 கிரிக்கெட் மிகவும் ஆபத்தான போட்டியாகும். அதிலும் அவர் பேட்டிங் செய்யும் இடம் மிகவும் ஆபத்தானது. ஆனாலும் இந்த அழுத்தமான பெரிய தொடரில் அவர் எளிதாக செயல்பட்டு இவ்வளவு பெரிய பேட்டிங் சராசரியுடன் அவரது நாட்டுக்கு நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்து வருகிறார்”

Watson 1

“அந்த வகையில் அவர் வெறித்தனமானவர், அவருடைய புள்ளி விவரங்களும் சாதனைகளும் சூப்பர் வெறித்தனமானது. அதிலும் இந்த ஆபத்தான டி20 கிரிக்கெட்டில் ஆபத்தான இடத்தில் பேட்டிங் செய்யும் அவர் தொடர்ச்சியாக ரன்களை குவிப்பது அபாரமானது. அது அற்புதமானது” என்று கூறினார்.

இதையும் படிங்க : PAK vs SA : பாகிஸ்தானின் பரபரப்பான வெற்றி. இந்திய அணியின் அரையிறுதி வாய்ப்பை பாதிக்குமா? – ஒரு முழுஅலசல் இதோ

முன்னதாக ஏற்கனவே பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் வரலாற்றில் மிகச் சிறந்த டி20 இன்னிங்ஸ் விளையாடியதாக பாராட்டிய முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் கிரேக் சேப்பல் இந்திய கிரிக்கெட் வரலாற்றின் முழுமையான பேட்ஸ்மேன் என்றால் அது விராட் கோலி தான் என்று பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

Advertisement