எதிரணியா இருந்தாலும் அவர் தான் நமக்கெல்லாம் ரோல் மாடல் – இந்திய வீரர் பற்றி இமாம் உல் ஹக் நெகிழ்ச்சி பேட்டி

Imam Ul Haq
- Advertisement -

நட்சத்திர இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி நவீன கிரிக்கெட்டில் உலக அளவில் மகத்தான பேட்ஸ்மேன்களில் முதன்மையானவராக செயல்பட்டு வருகிறார். கடந்த 2018 ஐசிசி அண்டர்-19 உலக கோப்பையை கேப்டனாக வென்று சர்வதேச அரங்கில் அறிமுகமான அவர் குறுகிய காலத்திலேயே நிலையான இடத்தை பிடித்து நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்தார். குறிப்பாக ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் ஓய்வு பெற்ற 2013க்குப்பின் அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் உலகின் அனைத்து டாப் பவுலர்களையும் மிகச் சிறப்பாக எதிர்கொண்டு அவர் 25000க்கும் மேற்பட்ட ரன்களையும் 75 சதங்களையும் அடித்து இந்தியாவுக்கு நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்து நவீன கிரிக்கெட்டில் நாயகனாக ஜொலித்து வருகிறார்.

குறிப்பாக இந்த உலகில் ஸ்டீவ் ஸ்மித் போன்ற நிறைய பேட்ஸ்மேன்கள் ஏதேனும் ஒரு வகையான கிரிக்கெட்டில் மட்டுமே அசத்தும் நிலையில் டெஸ்ட், ஒருநாள், டி20 என 3 வகையான கிரிக்கெட்டிலும் தன்னை உட்படுத்தி சிறப்பாக செயல்படும் அவர் 49க்கும் மேற்பட்ட சராசரியை கொண்ட ஒரே பேட்ஸ்மேனாக சாதனை படைத்துள்ளார். அதை விட ரசல், பொல்லார்ட் போன்ற காட்டடி பேட்ஸ்மேன்களை போல் சிக்சர்களை முரட்டுத்தனமாக அடிக்கும் ஸ்டைலை கொண்டிராத அவர் தரையோடு தரையாக ஃபீல்டர்கள் நிற்கும் இடைவெளிகளை பார்த்து கவுண்டர்கள் அடிக்கும் ஸ்டைலை கொண்டவர்.

- Advertisement -

ரோல் மாடல்:
அந்த ஸ்டைலை பின்பற்றியே ரசல், பொல்லார்ட் போன்றவர்களை காட்டிலும் வெற்றிகரமாக செயல்பட்டு நவீன சர்வதேச கிரிக்கெட்டிலும் ஐபிஎல் தொடரிலும் அதிக ரன்கள் அடித்த வீரராக சாதனை படைத்துள்ளது அவருடைய ஸ்பெஷலாகும். அத்துடன் ஒருவேளை எதுவுமே வேலைக்காகவில்லை என்றாலும் சிங்கிள், டபுள் எடுத்து அணியின் வெற்றிக்காக பாடுபடும் அளவுக்கு அற்புதமான ஃபிட்னஸை கடைபிடிக்கும் அவர் உலகில் இருக்கும் மற்ற வீரர்களுக்கு ஃபிட்னஸ் எனும் வார்த்தைக்கு எடுத்துக்காட்டாக திகழ்கிறார்.

அதே போல கேப்டனாக உலகக் கோப்பையை வென்று கொடுக்காவிட்டாலும் வெளிநாடுகளில் வெற்றிகரமாக செயல்பட்ட அவர் ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்ற முதல் ஆசிய கேப்டன் என்ற சரித்திரத்தைப் படைத்து 2016 – 2021 தொடர்ந்து 5 வருடங்களாக இந்தியாவை உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் அணியாக ஜொலிக்க வைத்தார். இந்நிலையில் நவீன கிரிக்கெட்டில் அபாரமாக செயல்படும் விராட் கோலி எதிரணியில் இருந்தாலும் அனைவருக்கும் ரோல் மாடலாக திகழ்வதாக பாகிஸ்தான் தொடக்க வீரர் இமாம்-உல்-ஹக் கூறியுள்ளார்.

- Advertisement -

இது பற்றி சமீபத்திய யூடியூப் நிகழ்ச்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “விராட் கோலி ஒரு சிறந்த ரோல் மாடல். எங்களைப் போன்ற கிரிக்கெட்டர்களுக்கு சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்பவர். குறிப்பாக செயல்பாடுகள், ஃபிட்னஸ், அணுகுமுறை மற்றும் பிராண்டிங் போன்றவற்றில் அவர் அனைவருக்கும் எடுத்துக்காட்டாக இருக்கிறார். எனவே கிரிக்கெட்டுக்கு விராட் கோலி மிகவும் கச்சிதமானவர்” என்று பாராட்டினார்.

இதையும் படிங்க:ஜிம்பாபர்ன்னு ரசிகர்கள் கலாய்ப்பது கரெக்ட் தான் போல – ஒருநாள் போட்டிகளில் பாபர் அசாமின் புள்ளிவிவரம் கூறுவது என்ன?

அதே போலவே பாகிஸ்தானில் விராட் கோலிக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பதையும் இங்கே சொல்லி தெரிய வேண்டியதில்லை எனலாம். இதைத் தொடர்ந்து வரும் செப்டம்பர் 2ஆம் தேதி பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெறும் ஆசிய கோப்பை போட்டியில் விளையாடுவதற்காக விராட் கோலி தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement