ஜிம்பாபர்ன்னு ரசிகர்கள் கலாய்ப்பது கரெக்ட் தானோ – ஒருநாள் போட்டிகளில் பாபர் அசாமின் புள்ளிவிவரம் கூறுவது என்ன?

- Advertisement -

இந்திய கிரிக்கெட்டில் சுனில் கவாஸ்கரை மிஞ்சிய சச்சின் டெண்டுல்கருக்கு நிகராக தற்போது அசத்தி வரும் விராட் கோலி 25000க்கும் மேற்பட்ட ரன்களையும் 75 சதங்களையும் அடித்து இந்தியாவுக்கு நிறை வெற்றிகளை பெற்றுக் கொடுத்து வருகிறார். ஆனால் இடையிடையே விராட் கோலியை விட தங்களுடைய பாபர் அசாம் தான் உலகிலேயே தற்சமயத்தில் நம்பர் ஒன் பேட்ஸ்மேன் என அந்நாட்டை சேர்ந்த முன்னாள் வீரர்கள் அடிக்கடி மார் தட்டும் பேட்டிகளை வெளியிடுவது வழக்கமாகும். இருப்பினும் அந்த ஒப்பீடுகள் மிகவும் நியாயமற்றது என்று சொல்லலாம்.

ஏனெனில் விராட் கோலி கடந்த 15 வருடங்களாக இந்தியாவிலும் ஆசிய கண்டதிலும் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா போன்ற சவாலான வெளிநாடுகளிலும் சதங்களை அடித்து நிறைய ரன்களை குவித்து நவீன கிரிக்கெட்டின் நாயகனாக செயல்பட்டு வருகிறார். மறுபுறம் 2017இல் அறிமுகமாகி 2019க்குப்பின் 3 வகையான கிரிக்கெட்டிலும் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தி வரும் பாபர் அசாம் பாகிஸ்தானின் வெற்றிகளில் முக்கிய பங்காற்றி நவீன கிரிக்கெட்டில் மற்ற பாகிஸ்தான் வீரர்களை விட தரமான பேட்ஸ்மேனாக அசத்திய வருகிறார்கள் என்பதில் சந்தேகமில்லை.

- Advertisement -

உண்மையான புள்ளிவிவரம்:
இருப்பினும் வெறும் 5 வருடங்கள் மட்டுமே அசத்தி வரும் ஒருவரை 15 வருடங்களாக சிறப்பாக செயல்பட்டு வருபருடன் ஒப்பிடுவது மிகவும் தவறானதாகும். மேலும் அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் அசத்துப்பவரையே உலகின் சிறந்த பேட்ஸ்மேன் என்று சொல்வார்கள். அந்த வகையில் டெஸ்ட் ஒருநாள், டி20 என 3 வகையான கிரிக்கெட்டிலும் உலக அளவில் தற்சமயத்தில் தலா 49க்கும் மேற்பட்ட பேட்டிங் சராசரி கொண்ட ஒரே வீரராக விராட் கோலி திகழ்கிறார்.

மறுபுறம் ஒருநாள் கிரிக்கெட்டில் 58 என்ற அபாரமான சராசரியுடன் தரவரிசையில் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாகவும் இருக்கும் பாபர் அசாம் டெஸ்ட் மற்றும் டி20 கிரிக்கெட்டில் முறையே 47.75, 41.49 என்ற 48க்கும் குறைவான சராசரியையே கொண்டுள்ளார். இது ஒருபுறம் இருக்க பொதுவாகவே பாபர் அசாம் பெரும்பாலும் ஜிம்பாப்வே போன்ற கத்துக்குட்டிகளுக்கு எதிராகவே சிறப்பாக செயல்பட்டு நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக திகழ்கிறார் என்று விமர்சிக்கும் ஒரு தரப்பு ரசிகர்கள் அவரை ஜிம்பாபர் என்று கலாய்ப்பது வழக்கமாகும்.

- Advertisement -

அதன் உண்மை தன்மையை பார்க்கும் போது ஒருநாள் போட்டிகளில் தற்சமயத்தில் டாப் 4 அணிகளாக பார்க்கப்படும் இங்கிலாந்து இந்தியா நியூசிலாந்துக்கு எதிராக அவருடைய பேட்டிங் சராசரி 50க்கும் குறைவாகவே இருக்கிறது. மேலும் டாப் 4 கிரிக்கெட் அணிகளில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மட்டுமே 50க்கும் மேல் இருக்கிறது. மற்றபடி தற்சமயத்தில் கத்துக்குட்டியாக மாறியுள்ள இலங்கை, வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக 50க்கும் மேற்பட்ட சராசரி கொண்டுள்ள அவர் ரசிகர்கள் சொல்வது போல் தன்னுடைய கேரியரில் உச்சகட்டமாக ஜிம்பாப்வேவுக்கு எதிராக மட்டுமே 100க்கும் ஏற்பட்ட சராசரியை கொண்டுள்ளார். அந்த பட்டியல்:

1. ஆப்கானிஸ்தான் : 41.00 (4 இன்னிங்ஸ்)
2. ஆஸ்திரேலியா : 73.50 (9 இன்னிங்ஸ்)
3. வங்கதேசம் : 48.50 (2 இன்னிங்ஸ்)
4. இங்கிலாந்து : 48.00 (19 இன்னிங்ஸ்)
5. ஹாங்காங் : 33.00 (1 இன்னிங்ஸ்)
6. இந்தியா : 31.60 (5 இன்னிங்ஸ்)
7. அயர்லாந்து : 29.00 (1 இன்னிங்ஸ்)

இதையும் படிங்க:உலகக்கோப்பை 2023 : துவக்க விழாவில் என்னனென்ன நிகழ்வுகள் எல்லாம் நடக்கப்போகிறது தெரியுமா? – வேறலெவல் ஏற்பாடு

8. நெதர்லாந்து : 74.00 (3 இன்னிங்ஸ்)
9. நியூசிலாந்து : 46.67 (19 இன்னிங்ஸ்)
10. தென்னாப்பிரிக்கா : 65.37 (10 இன்னிங்ஸ்)
11. இலங்கை : 62.00 (9 இன்னிங்ஸ்)
12. வெஸ்ட் இண்டீஸ் : 79.67 (10 இன்னிங்ஸ்)
13. ஜிம்பாப்வே : 114.75 (9 இன்னிங்ஸ்)

Advertisement