உலகக்கோப்பை 2023 : துவக்க விழாவில் என்னனென்ன நிகழ்வுகள் எல்லாம் நடக்கப்போகிறது தெரியுமா? – வேறலெவல் ஏற்பாடு

BCCI-and-Worldcup
- Advertisement -

கடந்த 2011-ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற 50 ஓவர் உலககோப்பை கிரிக்கெட் தொடரில் தோனி தலைமையிலான இந்திய அணியானது சங்கக்காரா தலைமையிலான இலங்கை அணியை வீழ்த்தி 28 ஆண்டுகளுக்கு பிறகு 50 ஓவர் உலகக் கோப்பையை கைப்பற்றி வரலாறு படைத்தது. கபில் தேவிற்கு பிறகு 50 ஓவர் உலக கோப்பையை வென்ற கேப்டனாகவும் தோனி சாதனை படைத்தார். அதனைத்தொடர்ந்து தோனிக்கு பிறகு எந்த ஒரு வீரரின் தலைமையிலும் இந்திய அணியால் ஐசிசி கோப்பையை கைப்பற்ற முடியவில்லை.

அந்த குறையை போக்க இந்த ஆண்டு இந்திய அணிக்கு மிகச் சிறப்பான வாய்ப்பு கைகளில் கிடைத்திருக்கிறது. அந்த வகையில் 2023-ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை தொடரானது முழுக்க முழுக்க இந்தியாவில் மட்டுமே நடைபெற இருப்பதால் இந்த தொடரில் இந்திய அணி வெற்றி பெறுவதற்கான சாத்தியங்கள் அதிகம் இருப்பதாக பல்வேறு கிரிக்கெட் விமர்சகர்களும், நிபுணர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -

இந்த உலகக் கோப்பை தொடரானது துவங்க நாட்கள் குறைந்து கொண்டே வரும் வேளையில் அக்டோபர் 5-ஆம் தேதி நரேந்திர மோடி மைதானத்தில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் போட்டி மிகப் பிரமாண்டமாக நடைபெற உள்ளது. அதற்கு முன்னதாக பிசிசிஐ சார்பில் இந்த உலகக் கோப்பைக்கு பிரம்மாண்டமான துவக்க விழாவும் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அந்த வகையில் என்னென்ன நிகழ்வுகள் எல்லாம் இந்த உலகக் கோப்பை தொடரின் துவக்க விழாவில் நடைபெறும் என்பது குறித்த சில தகவல்கள் கிடைத்துள்ளன.

அந்த வகையில் அக்டோபர் 4-ஆம் தேதியே அதாவது போட்டி துவங்கும் ஒரு நாளுக்கு முன்னதாகவே அனைத்து அணிகளை சேர்ந்த கேப்டன்களும் அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி மைதானத்திற்கு அழைக்கப்பட உள்ளனர். அவர்களது மத்தியில் கோப்பை வைக்கப்பட்டு போட்டோ சூட் நிகழ்வு நடைபெறவுள்ளது. அதோடு அந்த நிகழ்விற்கு முன்னதாக கோப்பை அறிமுக விழாவும் நடைபெறவுள்ளது.

- Advertisement -

அதன் பின்னர் பாலிவுட் நட்சத்திரங்களின் இசை நிகழ்ச்சிகள், வெளிநாட்டு கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட இருக்கின்றன. மிகப் பிரமாண்டமாக நடைபெறப்போகும் இந்த நிகழ்வு தொலைக்காட்சிகளில் நேரடியாக ஒளிபரப்பாகும் என்று கூறப்பட்டுள்ளது. இது தவிர்த்து பெரிய அளவில் பிசிசிஐ சார்பில் எந்த ஒரு தகவலும் வெளியாகாத வேளையில் நிச்சயம் முன்பு எப்போதும் போதும் இல்லாத அளவு இம்முறை பிரமாண்டமான துவக்க விழா நடைபெறும் என்று தெரிகிறது.

இதையும் படிங்க : அஜித் அகார்கருடன் விளையாடி இன்று வரை ஓய்வுபெறாமல் இருக்கும் 3 இந்திய கிரிக்கெட் வீரர்கள் – லிஸ்ட் இதோ

அக்டோபர் மூன்றாம் தேதி வரை அனைத்து அணிகளுமே பயிற்சி போட்டிகளில் விளையாடும் என்பதனால் அக்டோபர் 4-ஆம் தேதி அனைத்து அணிகளை சேர்ந்த கேப்டன்களும் அகமதாபாத் வருவார்கள் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவும் நெதர்லாந்து அணிக்கு எதிரான பயிற்சி போட்டிக்கு பிறகு நேரடியாக திருவனந்தபுரத்தில் இருந்து அகமதாபாத் வருவார் என்று கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement