அஜித் அகார்கருடன் விளையாடி இன்று வரை ஓய்வுபெறாமல் இருக்கும் 3 இந்திய கிரிக்கெட் வீரர்கள் – லிஸ்ட் இதோ

Ajit-Agarkar
- Advertisement -

இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவரான அஜித் அகார்கர் கடந்த 2013-ஆம் ஆண்டு அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வினை அறிவித்து இருந்தார். அதன் பிறகு பயிற்சியாளர் மற்றும் அட்மினிஸ்ட்ரேஷன் பணிகளில் ஈடுபட்டு வந்த அவர் 2017-ஆம் ஆண்டு முதல் 2019-ஆம் ஆண்டு வரை மும்பை டொமெஸ்டிக் அணியின் தலைமை தேர்வுக்குழு தலைவராக பணியாற்றி வந்தார். அதன் பிறகு டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக கடந்த இரண்டு ஆண்டுகளாக பந்துவீச்சு பயிற்சியாளராகவும் இருந்து வந்தார்.

தற்போது 45 வயதான அவர் டெல்லி கேபிட்டல்ஸ் அணியில் இருந்து வெளியேறி இந்திய அணியின் தலைமை தேர்வுக்குழு தலைவராக பி.சி.சி.ஐ யின் மூலம் நியமிக்கப்பட்டார். அதனைத்தொடர்ந்து தற்போது ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்க இருக்கும் இந்திய அணியை கூட அஜித் அகார்கர் தலைமையிலான தேர்வுக்குழு தான் தேர்வு செய்து அறிவித்து இருந்தது.

- Advertisement -

இந்நிலையில் சர்வதேச போட்டிகளில் அஜித் அகார்கருடன் விளையாடிய ஒரு சில வீரர்கள் இன்றளவும் ஓய்வை அறிவிக்காமல் விளையாடி வருகின்றனர். அப்படி அகார்கருடன் விளையாடி இதுவரை ஓய்வை அறிவிக்காத மூன்று இந்திய வீரர்களை பற்றி இந்த பதிவில் காணலாம்.

1) ரோஹித் சர்மா : கடந்த 2007-ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக அறிமுகமாகிய ரோகித் சர்மா அஜித் அகார்கருடன் ஒரு ஒருநாள் போட்டியில் விளையாடியுள்ளார். கடந்த 2007-ஆம் ஆண்டு அயர்லாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் போட்டியில் அகார்கர் மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் இணைந்து விளையாடி இருந்தனர். அதேபோன்று 2007-ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை அணியிலும் இருவரும் ஒன்றாக விளையாடியிருந்தனர்.

- Advertisement -

2) தினேஷ் கார்த்திக் : கடந்த 2006 – 2007 ஆம் ஆண்டுகளில் அஜித் அகார்கர் தனது கரியரின் கடைசி கட்டத்தில் இருக்கும்போது தினேஷ் கார்த்திக் அவருடன் இணைந்து விளையாடியுள்ளார். குறிப்பாக 2004-ஆம் ஆண்டு அறிமுகமான தினேஷ் கார்த்திக் 2007-ம் ஆண்டு வரை 20 போட்டிகளில் அஜித் அகார்கருடன் இணைந்து விளையாடி இருக்கிறார்.

இதையும் படிங்க : ஒயிட் பால் கிரிக்கெட்டில் எனக்கு பிடிச்ச 3 பேட்ஸ்மேன்கள் இவங்க தான் – ஜாஸ் பட்லர் பேட்டி

3) பியூஸ் சாவ்லா : இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான பியூஷ் சாவ்லா கடந்த 2006-ஆம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமாக 2007-ஆம் ஆண்டு வரை அகார்கருடன் இணைந்து 9 போட்டிகளில் விளையாடியுள்ளார். அவரும் இன்றளவும் ஓய்வு அறிவிக்காதது குறிப்பிடத்தக்கது.

Advertisement