காட்டுக்கு ராஜாவான விராட் கோலியை.. 180 ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடவெச்சு வீணடிக்காதீங்க.. எச்சரித்த முன்னாள் வீரர்

Virat Kohli 2
- Advertisement -

ஜனவரி 14ஆம் தேதி இந்தூரில் நடைபெற்ற ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 2வது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. அந்தப் போட்டியில் ஆப்கானிஸ்தான் நிர்ணயித்த 173 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு ரோஹித் சர்மா டக் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார். அந்த நிலைமையில் வந்த விராட் கோலி அதிரடியாக 5 பவுண்டரியை பறக்க விட்டு 29 (16) ரன்களில் அவுட்டானார்.

இருப்பினும் மறுபுறம் அதிரடியாக விளையாடிய ஜெய்ஸ்வால் 68 ரன்களும் மிடில் ஆர்டரில் கடைசி வரை அவுட்டாகாமல் அசத்திய சிவம் துபே 63* ரன்களும் எடுத்து இந்தியாவை எளிதாக வெற்றி பெற வைத்தனர். இப்போட்டியில் 14 மாதங்கள் கழித்து டி20 கிரிக்கெட்டில் முதல் முறையாக விளையாடிய விராத் கோலி 181.25 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் வெளுத்து வாங்கி அபாரமான துவக்கத்தை பெற்ற போதிலும் அதிரடியாக விளையாடும் முனைப்புடன் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.

- Advertisement -

காட்டுக்கு ராஜா:
இந்நிலையில் பொதுவாகவே ஆரம்பத்தில் நிதானமாகவும் நேரம் செல்ல செல்ல அதிரடியாகவும் விளையாடக்கூடிய விராட் கோலியை முதல் பந்திலிருந்தே 180 – 200 ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாட வேண்டும் என்று நினைப்பது இந்தியாவுக்கு ஆபத்தை கொடுக்கும் என முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா எச்சரித்துள்ளார். இதற்கான காரணத்தைப் பற்றி தம்முடைய யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு.

“கடந்த டி20 உலகக் கோப்பைக்கு முன் அவர் இதை செய்தார் என்று நினைக்கிறேன். அதாவது முதல் பந்திலிருந்தே அவர் அதிரடியாக விளையாட முயற்சித்தார். அப்படி விளையாடுவதற்கு அவரிடம் திறமை இருக்கிறது. அப்படி விளையாட நினைத்தால் கண்டிப்பாக அவரால் எளிதாக அடிக்க முடியும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் விராட் கோலி எப்படி விளையாடினால் அணிக்கு பொருந்தும் என்பதை நீங்கள் சிந்திக்க வேண்டும்”

- Advertisement -

“குறிப்பாக வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறப் போகும் 2024 டி20 உலகக் கோப்பை மைதானங்களில் 150 – 160 ரன்கள் மட்டுமே சராசரியாக அடிக்க முடியும். அங்கே 200 – 220 ரன்கள் பிட்ச் இருக்காது. எனவே அங்கே உங்களில் ஒருவர் இன்னிங்ஸை பிடித்து விளையாட வேண்டும். ஆனால் அங்கே நீங்கள் விராட் கோலி 180 – 200 ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாட வேண்டுமென்று எதிர்பார்த்தால் அவரை நீங்கள் வீணடிக்கிறீர்கள் என்று அர்த்தம். எனவே நமக்கு 139 ஸ்ட்ரைக் ரேட்டில் அடிக்கக்கூடிய விராட் கோலி தேவை”

இதையும் படிங்க: 6, 6, 6.. தரமான நபியை வெளுத்த துபே.. கிங் கோலியின் சாதனையை சமன் செய்து.. ஆசிய வீரராக அசத்தல் சாதனை

“189 ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாட வேண்டும் என்று எதிர்பார்த்தால் அவரிடமிருந்து தொடர்ச்சியாக ரன்கள் வராது. காட்டுக்குள் சிங்கம் இருந்தால் நீங்கள் ஏன் அங்கே செல்ல பயப்பட வேண்டும்? சிங்கம் போல விளையாடக்கூடிய விராட் கோலி அங்கே கண்டிப்பாக இருப்பார். ஆனால் அவர் கடைசி வரை நின்றால் இந்தியா வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு அதிகமாகும் என்பது உங்களுக்கு தெரியும். எனவே காட்டுக்கு ராஜா போல விராட் கோலி போட்டியின் கடைசி வரை நிற்பது அவசியமாகும்” என்று கூறினார்.

Advertisement