6, 6, 6.. தரமான நபியை வெளுத்த துபே.. கிங் கோலியின் சாதனையை சமன் செய்து.. ஆசிய வீரராக அசத்தல் சாதனை

Shivam Dube Sixes
- Advertisement -

ஆப்கானிஸ்தானுக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் நடைபெறும் 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் இந்தியா அடுத்தடுத்த வெற்றிகளை பெற்றது. அதனால் 2 – 0* என்ற கணக்கில் இந்தியா ஆரம்பத்திலேயே கோப்பையை வென்றுள்ளது. இத்தொடரின் முதல் போட்டியில் ஆப்கானிஸ்தானை 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த இந்தியா நேற்று இந்தூரில் நடந்த 2வது போட்டியிலும் 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் குல்பதின் நைப் 57 ரன்கள் எடுத்த உதவியுடன் 173 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது. அதை துரத்திய இந்தியாவுக்கு துவக்க வீரர் ஜெய்ஸ்வால் அதிரடியாக 68 ரன்களும் மிடில் ஆர்டரில் மிரட்டிய சிவம் துபே 63* ரன்களும் விளாசி 15.3 ஓவரிலேயே வெற்றி பெற வைத்தனர்.

- Advertisement -

ஹாட்ரிக் சிக்ஸர்கள்:
முன்னதாக இப்போட்டியில் முகமது நபி வீசிய 9வது ஓவரின் 2, 3, 4வது பந்துகளில் 6, 6, 6 என அடுத்தடுத்த ஹாட்ரிக் சிகார்களை பறக்க விட்ட துபே ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தினார். நவீன கிரிக்கெட்டில் முகமது நபி ஆப்கானிஸ்தானின் அனுபவம் மிகுந்த தரமான ஸ்பின்னராக பார்க்கப்படுகிறார்.

அப்படிப்பட்ட அவரின் ஓவரில் விராட் கோலி வியந்து பார்க்கும் அளவுக்கு ஹாட்ரிக் சிக்ஸர்களை பறக்க விட்டு தன்னுடைய திறமையை காண்பித்த துபே வெறும் 22 பந்துகளில் 50 ரன்கள் கடந்தார். அதன் வாயிலாக டி20 கிரிக்கெட்டில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக அதிவேகமாக அரை சதமடித்த ஆசிய வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. பால் ஸ்டெர்லிங் (அயலர்ந்து) :17 பந்துகள், துபாய், 2012
2. சீன் வில்லியம்ஸ் (ஜிம்பாப்வே) : 21 பந்துகள், புலவாயோ, 2015
3. சிவம் துவே (இந்தியா) : 22 பந்துகள், இந்தூர், 2024*

- Advertisement -

மேலும் இத்தொடரில் முதல் போட்டியில் 60* ரன்களும் 1 விக்கெட்டும் எடுத்து வெற்றியில் பங்காற்றிய சிவம் துபே இப்போட்டியில் 68* ரன்கள் 1 விக்கெட் எடுத்து ஆல் ரவுண்டராக இந்தியாவின் வெற்றிக்கு உதவினார். இதன் வாயிலாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக முறை ஒரு போட்டியில் குறைந்தபட்சம் 50 ரன்கள் மற்றும் 1 விக்கெட் எடுத்த 2வது இந்திய வீரர் என்ற விராட் கோலியின் (இருவரும் தலா 2 முறை) தனித்துவமான சாதனையை துபே சமன் செய்துள்ளார்.

இதையும் படிங்க: ஒரு பிளான் வெச்சு 2 வழியில் அடிச்சேன்.. எப்படியோ அவரை சந்தோஷப்படுத்திட்டேன்.. துபே பேட்டி

இதற்கு முன் 2012இல் பாகிஸ்தானுக்கு எதிராகவும் 2016இல் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராகவும் விராட் கோலி இந்த சாதனையை செய்துள்ளார். இந்த பட்டியலில் 2009இல் நியூசிலாந்துக்கு எதிராக, 2009இல் இலங்கைக்கு எதிராக, 2012இல் பாகிஸ்தானுக்கு எதிராக குறைந்தது 50 ரன்கள் 1 விக்கெட் எடுத்து யுவராஜ் சிங் (3 முறை) முதலிடத்தில் உள்ளார்.

Advertisement