ஒரு பிளான் வெச்சு 2 வழியில் அடிச்சேன்.. எப்படியோ அவரை சந்தோஷப்படுத்திட்டேன்.. துபே பேட்டி

Shivam Dube 6
- Advertisement -

ஆப்கானிஸ்தானுக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் விளையாடி வரும் 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதல் 2 போட்டிகளில் இந்தியா அடுத்தடுத்த வெற்றிகளை பதிவு செய்துள்ளது. அதனால் 2 – 0* என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே கோப்பையை கைப்பற்றியுள்ள இந்தியா ஜனவரி 14ஆம் தேதி இந்தூரில் நடைபெற்ற 2வது போட்டியில் ஆப்கானிஸ்தானை 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது.

அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் குல்பதின் நைப் 57 ரன்கள் எடுத்த உதவியுடன் 173 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. அதை துரத்திய இந்தியாவுக்கு ரோகித் சர்மா டக் அவுட்டாகி ஏமாற்ற விராட் கோலி 29 ரன்களில் ஆட்டமிழந்தார். இருப்பினும் துவக்க வீரர் ஜெய்ஸ்வால் அதிரடியாக 68 ரன்களும் மிடில் ஆர்டரில் மிரட்டிய சிவம் துபே 63* ரன்களும் அடித்து எளிதான வெற்றியை பெற்றுக் கொடுத்தனர்.

- Advertisement -

துபேவின் திட்டம்:
இந்த வெற்றிக்கு அக்சர் பட்டேல் ஆட்டநாயகன் விருதை வென்றாலும் 68* ரன்கள் மற்றும் 1 விக்கெட் எடுத்த சிவம் துபே அறிவிக்கப்படாத ஆட்டநாயகனாக அசத்தினார் என்றே சொல்லலாம். முதல் போட்டியில் 60* ரன்கள் 1 விக்கெட் எடுத்து வெற்றியில் பங்காற்றி ஆட்டநாயகன் விருது வென்ற அவர் தற்போது இந்திய அணியில் சிறப்பான கம்பேக் கொடுத்து பாராட்டுகளை பெற்று வருகிறார்.

இந்நிலையில் தம்முடைய செயல்பாடுகளால் கேப்டன் ரோகித் சர்மா மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவிக்கும் துபே இப்போட்டியில் 2 முக்கிய திட்டத்துடன் விளையாடியதாக கூறியுள்ளார். இது பற்றி போட்டியின் முடிவில் அவர் பேசியது பின்வருமாறு. “கேப்டன் என்னுடைய செயல்பாடுகளால் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளார். அவர் நான் சிறப்பாக விளையாடியதாக சொன்னார்”

- Advertisement -

“நானும் ஜெய்ஸ்வாலும் அதிரடியாக விளையாடக் கூடியவர்கள் என்பதால் எங்களுடைய ஆட்டத்தை அறிவோம். என்னுடைய வேலை ஸ்பின்னர்களை அதிரடியாக எதிர்கொள்வதாகும். ஆனால் இந்த போட்டியில் எதிரணியை அட்டாக் செய்து முன்கூட்டியே ஃபினிஷிங் செய்வதே எங்களுடைய திட்டமாக இருந்தது. இலக்கு என்னுடைய மனதில் இல்லை. ஆனால் போட்டியை முன்கூட்டியே நாங்கள் முடிக்க விரும்பினோம்”

இதையும் படிங்க: இதுக்கே இவ்வளவு திணறலா.. 143 ரன்ஸ் வெச்சு டஃப் கொடுத்த ஜிம்பாப்வே.. போராடிய இலங்கை

“தற்போது நிறைய நுணுக்கங்களை கற்றுக் கொள்ள வேலை செய்து வரும் நான் டி20 கிரிக்கெட்டில் மனதளவில் தயாராக இருப்பதற்கும் முயற்சித்து வருகிறேன். குறிப்பாக அழுத்தத்தை எப்படி கையாள்வது, எந்த பவுலரை அடிப்பது போன்றவற்றில் பாடங்களை கற்று வருகிறேன். ஒவ்வொரு பந்தையும் அடிப்பது முக்கியமல்ல. தற்போது என்னுடைய பந்து வீச்சிலும் நான் வேலை செய்து வருகிறேன். கடந்த போட்டியில் அது நன்றாக இருந்தாலும் இந்த போட்டியில் சரியாக அமையவில்லை. அது தான் டி20 போட்டியாகும்” என்று கூறினார்.

Advertisement