இதுக்கே இவ்வளவு திணறலா.. 143 ரன்ஸ் வெச்சு டஃப் கொடுத்த ஜிம்பாப்வே.. போராடிய இலங்கை

SL vs ZIm 1
- Advertisement -

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி அங்கு முதலாவதாக நடைபெற்ற ஒருநாள் தொடரை 2 – 0 (3) என்ற கணக்கில் இழந்தது. மறுபுறம் 2023 உலகக் கோப்பையில் இந்தியாவிடம் படுதோல்வியை சந்தித்து சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடுவதற்கு தடை பெற்று மீண்டு வந்துள்ள இலங்கைக்கு அந்த வெற்றி ஆறுதலாகவும் உத்வேகத்தை கொடுப்பதாகவும் அமைந்தது.

அதைத் தொடர்ந்து 2024 டி20 உலகக் கோப்பைக்கு தயாராக இவ்விரு அணிகளும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகின்றன. அத்தொடரின் முதலாவது போட்டி ஜனவரி 14ஆம் தேதி இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு கொழும்புவில் நடைபெற்றது. அந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

- Advertisement -

போராடிய இலங்கை:
அதன் பின் களமிறங்கிய ஜிம்பாப்வே 20 ஓவர்களில் ஓரளவு நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தி முடிந்தளவுக்கு போராடி 20 ஓவரில் 143/5 ரன்கள் எடுத்தது. அந்த அணிக்கு அதிகபட்சமாக கேப்டன் சிக்கந்தர் ராசா அதிரடியாக 62 (42) ரன்கள் எடுக்க இலங்கை சார்பில் அதிகபட்சமாக கேப்டன் வணிந்து ஹசரங்கா மற்றும் மஹீஸ் தீக்சனா தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர்.

அதைத் தொடர்ந்து 144 என்ற சுலபமான இலக்கை துரத்திய இலங்கை எளிதாக வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பதும் நிசாங்கா 2, குசால் மெண்டிஸ் 17, குசால் பெரேரா 17, சமரவிக்ரமா 9 என முக்கிய பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டானதால் 51/4 என ஆரம்பத்திலேயே இலங்கை தடுமாறியது. அப்போது அனுபவ வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் நிதானமாக விளையாடிய போதிலும் எதிர்ப்புறம் கை கொடுக்க முயற்சித்த சமரவிக்ரமாவை 9 ரன்களில் கிளீன் போல்டாக்கிய சிக்கந்தர் ராசா அடுத்து வந்த ஹசரங்காவை டக் அவுட்டாக்கினார்.

- Advertisement -

இருப்பினும் அடுத்து வந்த சனாகா காட்டியதால் வெற்றியை நெருங்கிய இலங்கைக்கு கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்டது. முஸர்பானி வீசிய அந்த ஓவரின் முதல் 2 பந்துகளில் பவுண்டரி அடித்த மேத்யூஸ் 4வது பந்தில் 46 (38) ரன்களில் அவுட்டானதால் போட்டியில் பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும் புதிதாக வந்த துஷ்மந்தா சமீரா அடுத்த பந்தில் பவுண்டரி அடித்து கடைசி பந்தில் 2 ரன்கள் தேவைப்பட்ட போது அதையும் தில்லாக எடுத்தார்.

இதையும் படிங்க: ஆப்கானிஸ்தான் அணிக்கெதிராக அதிவேக இந்திய வீரராக யாஷஸ்வி ஜெய்ஸ்வால் படைத்த சாதனை – விவரம் இதோ

அதனால் தப்பிய இலங்கை சனாக்கா 26* (18) ரன்கள் எடுத்த உதவியுடன் 20 ஓவரில் சரியாக 144/7 ரன்கள் எடுத்து போராடி 3 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இருப்பினும் கத்துக்குட்டியான ஜிம்பாப்வேவுக்கு எதிராக வெறும் 144 ரன்களை துரத்த அந்த அணி கடைசி பந்து வரை திண்டாடியது. மறுபுறம் முக்கிய தருணத்தில் சொதப்பிய ஜிம்பாப்வே சார்பில் அதிகபட்சமாக கேப்டன் சிக்கந்தர் ராசா 3 விக்கெட்டுகள் எடுத்தும் தோல்வியை தவிர்க்க முடியவில்லை.

Advertisement