ஆப்கானிஸ்தான் அணிக்கெதிராக அதிவேக இந்திய வீரராக யாஷஸ்வி ஜெய்ஸ்வால் படைத்த சாதனை – விவரம் இதோ

Jaiswal
- Advertisement -

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக நேற்று ஜனவரி 14-ஆம் தேதி இந்தூரில் நடைபெற்ற இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது 6 விக்கெட் வித்தியாசத்தில் மீண்டும் ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி இந்த மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.

அந்த வகையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் விளையாடிய ஆப்கானிஸ்தான் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 172 ரன்களை குறித்தது. பின்னர் 173 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாட துவங்கிய இந்திய அணி முதல் ஓவரிலேயே சறுக்கலை சந்தித்தது.

- Advertisement -

கேப்டன் ரோகித் சர்மா முதல் பந்தை சந்தித்த வேளையிலேயே ரன் எதுவும் எடுக்காமல் கிளீன் போல்ட்டாகி ஆட்டமிழந்து வெளியேறினார். பின்னர் விராட் கோலியும் 29 ரன்களில் வெளியேற இந்திய அணி 62 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்து சற்று சறுக்கியது.

இருப்பினும் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ஷிவம் துபே ஆகியோரது அசத்தலான ஆட்டம் காரணமாக இந்திய அணி எளிதாக வெற்றியை நோக்கி நகர்ந்தது. அதிலும் குறிப்பாக துவக்க வீரரான யாஷஸ்வி ஜெய்ஸ்வால் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 34 பந்துகளில் 68 ரன்களை குவித்து ஆட்டமிழந்து வெளியேறினார்.

- Advertisement -

அவர் அடித்த இந்த அரை சதத்தின் மூலம் அவர் ஆப்கானிஸ்தான் அணிக்கெதிராக ஒரு புதிய சாதனையையும் நிகழ்த்தியுள்ளார். அந்த வகையில் அவர் படைத்த சாதனை யாதெனில் : ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக அதிவேகமாக அரைசதம் அடித்த இந்திய வீரர் என்ற சாதனையை ஜெயிஸ்வால் நிகழ்த்தியுள்ளார். இந்த போட்டியில் 27 பந்துகளை சந்தித்திருந்த போது அவர் 4 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர்கள் என 50 ரன்களை கடந்து இந்த சாதனையை நிகழ்த்தி இருந்தார்.

இதையும் படிங்க : 14 மாத கம்பேக்கில் பரிதாபம்.. சாதனை போட்டியில் ஆசிய வீரராக மோசமான சாதனை படைத்த ரோஹித் சர்மா

அதோடு இறுதியில் 34 பந்துகளை எதிர் கொண்ட அவர் 5 பவுண்டரி மற்றும் 6 சிக்ஸர் என 68 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது குறிப்பிடத்தக்கது. அவரது இந்த சிறப்பான ஆட்டம் காரணமாக இனிவரும் டி20 போட்டிகளில் அவர் இந்திய அணியில் நிரந்தர இடத்தையும் பிடித்து விட்டதாகவே தெரிகிறது.

Advertisement