14 மாத கம்பேக்கில் பரிதாபம்.. சாதனை போட்டியில் ஆசிய வீரராக மோசமான சாதனை படைத்த ரோஹித் சர்மா

Rohit Sharma DUCK
- Advertisement -

ஆப்கானிஸ்தானுக்கு எதிராக நடைபெற்று வரும் 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்ற இந்தியா ஆரம்பத்திலேயே கோப்பையை கைப்பற்றியுள்ளது. அதனால் தங்களை சொந்த மண்ணில் வலுவான அணி என்பதை நிரூபித்துள்ள இந்தியா 2024 டி20 உலகக் கோப்பையை வெல்லும் பயணத்தில் வெற்றி நடை போட்டு வருகிறது.

இந்தூரில் ஜனவரி 14ஆம் தேதி நடைபெற்ற அத்தொடரின் 2வது போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் குல்பதின் நைப் 57 ரன்கள் எடுத்த உதவியுடன் 173 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. அதை சேசிங் செய்த இந்தியாவுக்கு கேப்டன் ரோஹித் சர்மா 0, விராட் கோலி 29 ரன்களில் அவுட்டாகி ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்தனர்.

- Advertisement -

ரோஹித்தின் பரிதாபம்:
இருப்பினும் ஜெய்ஸ்வால் அதிரடியாக 68 (34) ரன்களும் மிடில் ஆர்டரில் மிரட்டிய சிவம் துபே 63* (32) ரன்களும் எடுத்து 15.4 ஓவரிலேயே எளிதான வெற்றியை பெற்றுக் கொடுத்தனர். அதனால் அதிகபட்சமாக கரீம் ஜானத் 2 விக்கெட்டுகள் எடுத்தும் தோல்வியை தவிர்க்க முடியாத ஆப்கானிஸ்தான் கோப்பையை வெல்லும் வாய்ப்பையும் நழுவ விட்டது.

முன்னதாக இந்தப் போட்டி இந்திய கேப்டன் ரோகித் சர்மாவுக்கு 150வது டி20 போட்டியாக அமைந்தது. சொல்லப்போனால் இதன் வாயிலாக உலகிலேயே சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 150 போட்டிகளில் விளையாடிய முதல் வீரர் என்ற சிறப்பான உலக சாதனையும் அவர் படைத்தார். அவருக்கு அடுத்தபடியாக அயர்லாந்து வீரர் பால் ஸ்டெர்லிங் 134 போட்டிகளில் விளையாடி அந்த பட்டியலில் 2வது இடத்தில் இருக்கிறார்.

- Advertisement -

ஆனால் அந்த சாதனை போட்டியில் கோல்டன் டக் அவுட்டாகி ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்த அவர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக முறை டக் அவுட்டான 2வது வீரர் என்ற பரிதாபமான சாதனையை சமன் செய்துள்ளார். அத்துடன் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக முறை டக் அவுட்டான ஆசிய வீரர் என்ற வங்கதேசத்தின் சௌமியா சர்க்கார் சாதனையை உடைத்துள்ள ரோஹித் சர்மா மற்றுமொரு மோசமான சாதனையை படைத்துள்ளார். அந்த பட்டியல் (முழு உறுப்பு நாடுகள்):
1. பால் ஸ்டெர்லிங் (அயர்லாந்து) : 13
2. ரோகித் சர்மா (இந்தியா) : 12*
3. கெவின் ஓ’ப்ராயன் (அயர்லாந்து) : 12
4. சௌமியா சர்க்கார் (வங்கதேசம்) : 11
5. ரிகிஸ் சக்கப்வா (ஜிம்பாப்பே) : 11

இதையும் படிங்க: தல தோனியின் வாழ்நாள் சாதனை சமன்.. கேப்டனாக டி20 கிரிக்கெட்டில் சாதனை படைத்த ரோஹித் சர்மா

இத்தனைக்கும் கடந்த 2022 டி20 உலகக் கோப்பையில் கடைசியாக விளையாடியிருந்த அவர் 14 மாதங்கள் கழித்து இந்த தொடரில் மீண்டும் 20 ஓவர் போட்டிகளில் விளையாடத் தேர்வானார். இருப்பினும் அந்த வாய்ப்பில் முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்து டக் அவுட்டாகி மோசமான சாதனை படைத்துள்ள ரோஹித் சர்மாவுக்கு இது மோசமான கம்பேக் போல் அமைந்துள்ளது என்றால் மிகையாகாது.

Advertisement