3 கேப்டன்கள் வந்தும் ஜெயிக்க முடியலையே.. அது தான் கிங் கோலி.. முக்கிய புள்ளிவிவரம் இதோ

Virat Kohli 3
- Advertisement -

தென்னாபிரிக்காவில் சென்சூரியன் நகரில் துவங்கிய 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. 2023 உலகக் கோப்பை ஃபைனலில் சந்தித்த தோல்விக்கு பின் ரோகித் சர்மா தலைமையில் முதன்மை வீரர்கள் கொண்ட வலுவான அணி இத்தொடரில் களமிறங்கியதால் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு அதிகரித்தது.

குறிப்பாக 1992 முதல் சந்தித்து வரும் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து இம்முறை தென்னாப்பிரிக்க மண்ணில் முதல் முறையாக இந்தியா டெஸ்ட் தொடரை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு காணப்பட்டது. ஆனால் முதல் போட்டியில் மோசமாக விளையாடிய இந்தியா இன்னிங்ஸ் படுதோல்வியை சந்தித்து அந்த கனவை மீண்டும் நிஜமாக்க தவறியது.

- Advertisement -

3 கேப்டன் வந்தும்:
அதை விட இந்தப் போட்டியில் ரோகித் சர்மாவின் கேப்டன்ஷிப்பை பார்த்த ரசிகர்கள் மிகவும் ஏமாற்றமடைந்து விராட் கோலி இருந்திருந்தால் குறைந்தபட்சம் இந்தியா இன்னிங்ஸ் தோல்வியை சந்தித்திருக்காது என்ற ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். ஏனெனில் 2014இல் பொறுப்பேற்ற போது 7வது இடத்தில் திண்டாடிய இந்தியாவை அவர் தம்முடைய ஆக்ரோசமான கேப்டன்ஷிப் வாயிலாக 2016 – 2021 வரை தொடர்ந்து 5 வருடங்கள் நம்பர் ஒன் அணியாக ஜொலிக்க வைத்தார்.

அத்துடன் ஆஸ்திரேலிய மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை வென்று சாதனை படைத்த அவர் இங்கிலாந்து மண்ணில் நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 4 போட்டிகளின் முடிவில் 2 – 1 என்ற கணக்கில் இந்தியாவுக்கு முன்னிலையும் பெற்று கொடுத்தார். அதை தொடர்ந்து இதே தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக கடந்த 2021 டிசம்பர் மாதம் இதே சென்சூரியன் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் விராட் கோலி தலைமையில் இந்தியா 113 ரன்கள் வித்தியாசத்தில் மிரட்டலான வெற்றி பெற்றது.

- Advertisement -

ஆனால் அது தான் தென்னாபிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா எனப்படும் ஆசிய கண்டத்திற்கு வெளியே உள்ள சாவலானா சேனா நாடுகளில் இந்தியா பதிவு செய்த கடைசி வெற்றியாகும். ஆம் அந்த வெற்றிக்குப் பின் 2வது போட்டியில் காயமடைந்து விலகிய விராட் கோலிக்கு பதிலாக கேஎல் ராகுல் தலைமை தாங்கிய இந்திய அணியை தென்னாப்பிரிக்கா தோற்கடித்தது. அதன் பின் 3வது போட்டியில் விராட் கோலி வந்தும் இந்தியாவை தோற்கடித்த தென்னாபிரிக்கா கோப்பையை வென்றது.

இதையும் படிங்க: அவருக்கு சப்போர்ட் கிடைக்கலன்னா என்ன செய்ய முடியும்.. 2வது மேட்ச்ல கம்பேக் கொடுப்போம்.. கேப்டன் ரோஹித் உறுதி

அதைத் தொடர்ந்து சர்ச்சைக்குரிய முறையில் விராட் கோலி கேப்டன்ஷிப் பதவியிலிருந்து விலகிய பின் 2022 ஜூலை மாதம் இங்கிலாந்து மண்ணில் நடைபெற்ற ரத்து செய்யப்பட்ட 5வது போட்டியில் பும்ரா தலைமையில் தோற்ற இந்தியா லண்டனில் நடந்த 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் ரோஹித் தலைமையில் ஆஸ்திரேலியாவிடம் தோற்றது. அந்த வகையில் ராகுல், பும்ரா, ரோஹித் ஆகிய 3 வெவ்வேறு வீரர்கள் கேப்டன்களாக வந்தும் விராட் கோலி தலைமையில் தான் கடைசியாக சேனா நாடுகளில் இந்தியா வெற்றியை பதிவு செய்தது என்பதே அவருடைய தரத்திற்கு சான்றாகும்.

Advertisement