அவருக்கு சப்போர்ட் கிடைக்கலன்னா என்ன செய்ய முடியும்.. 2வது மேட்ச்ல கம்பேக் கொடுப்போம்.. கேப்டன் ரோஹித் உறுதி

Rohit Sharma 4
- Advertisement -

சென்சூரியன் நகரில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. அந்த போட்டியில் தென் ஆப்பிரிக்கா 405 ரன்கள் குவித்த அதே பிட்ச்சில் சுமாரான பேட்டிங் செய்த இந்திய பேட்ஸ்மேன்கள் 245, 131 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தார்கள்.

அவர்களுக்கு நிகராக இந்திய பவுலர்களும் முதல் இன்னிங்சில் 405 ரன்கள் வாரி வழங்கி மீதி வெற்றியை எதிரணிக்கு தாரை வைத்தனர். அந்த வகையில் தரவரிசையில் நம்பர் ஒன் கிரிக்கெட் அணியாக இருந்தும் கொஞ்சம் கூட போராடாத இந்தியா வரலாற்றில் முதல் முறையாக தென்னாப்பிரிக்க மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரை வெல்ல வேண்டும் என்ற கனவை மீண்டும் நிஜமாக்க தவறியது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது.

- Advertisement -

கம்பேக் கொடுப்போம்:
இந்நிலையில் முதல் போட்டியில் பந்து வீச்சு துறையில் சிறப்பாக போராடிய பும்ராவுக்கு எஞ்சிய பவுலர்கள் கை கொடுக்காததே தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்ததாக கேப்டன் ரோஹித் சர்மா ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளார். அதே போல தென்னாபிரிக்க மண்ணில் அசத்துவதற்கு பேட்ஸ்மேன்கள் நல்ல திட்டத்துடன் களமிறங்குவது அவசியம் என்று தெரிவிக்கும் அவர் 2வது போட்டியில் கம்பேக் கொடுப்போம் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.

“அது 400 ரன்கள் குவிக்கக்கூடிய பிட்ச் கிடையாது. இருப்பினும் நாங்கள் நிறைய ரன்கள் கொடுத்தோம். நாங்கள் ஒரு பவுலரை மட்டும் வெற்றிக்கு சார்ந்திருக்க முடியாது. ஏனைய 3 பவுலர்களும் சிறப்பாக பந்து வீசுவது அவசியமாகும். குறிப்பாக எதிரணியில் அனைத்து பவுலர்களும் அசத்தியதை பார்த்து எங்களுடைய பவுலர்கள் கற்றுக்கொள்வதற்கு நிறைய இருக்கிறது”

- Advertisement -

“பும்ரா சிறப்பாக பந்து வீசினார். அவருக்கு எதிர்ப்புறம் உதவி மட்டுமே தேவைப்பட்டது. ஆனால் அது நடைபெறவில்லை. அதே சமயம் எஞ்சிய 3 பவுலர்களும் முதுகை வளைத்து போராடினார்கள். ஆனால் நாங்கள் விரும்பியது போல் எதுவும் நடைபெறவில்லை. எனவே பவுலர்கள் அணியாக சேர்ந்து விளையாட வேண்டும் என்பதை இது போன்ற போட்டிகள் பாடமாக கற்பிக்கிறது. இதை எங்கள் பவுலர்கள் உணர்ந்து அடுத்த போட்டியில் கம்பேக் கொடுப்பார்கள் என்று நம்புகிறேன்”+

இதையும் படிங்க: இதுக்கு ரவி சாஸ்திரியே பரவால்ல.. டிராவிட் தலைமையில் சேனாவில் திணறும் இந்தியா.. மோசமான புள்ளிவிவரம் இதோ

“அதே போல பேட்டிங்கில் ஒவ்வொரிடமும் நீங்கள் எப்படி விளையாட வேண்டும் என்பதை சொல்ல முடியாது. அனைவரிடமும் வித்தியாசமான டெக்னிக் இருக்கும். இருப்பினும் ஒவ்வொரு வீரர்களும் தனித்துவமான திட்டங்களுடன் வருவது அவசியமாகும். குறிப்பாக தனிநபர் டெக்னிக்கை விட இங்கே எதிரணி பவுலர்கள் எப்படி செயல்படுவார்கள், அவர்களின் பலம் என்ன என்பது போன்றவற்றை அறிந்து கொண்டு திட்டங்கள் வகுப்பது முக்கியம்” என கூறினார்.

Advertisement