இருப்பதிலேயே அவர் தான் எங்களுக்கு வெறித்தனமான போட்டியை கொடுக்கும் இந்திய வீரர் – ஐடன் மார்க்ரம் ஓப்பன்டாக்

Adien Markram
- Advertisement -

தென்னாப்பிரிக்கா மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகள் மோதும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் டிசம்பர் 26ஆம் தேதி சென்சூரியன் நகரில் துவங்குகிறது. இத்தொடரில் களமிறங்கும் ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா முதல் முறையாக தென்னாப்பிரிக்காவை அதனுடைய சொந்த மண்ணில் தோற்கடித்து தங்களை நம்பர் ஒன் அணி என்பதை நிரூபிக்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் காணப்படுகிறது.

குறிப்பாக பேட்டிங் துறையில் 2023 உலகக் கோப்பையில் பெரிய ரன்கள் குவித்து வெற்றிக்கு போராடிய கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் இத்தொடரிலும் தென்னாப்பிரிக்காவுக்கு சவாலை கொடுப்பார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். இந்நிலையில் இந்திய அணியின் பேட்டிங் துறையில் இருக்கும் வீரர்களில் விராட் கோலி தான் தங்களுக்கு பெரிய அச்சுறுத்தலை கொடுப்பார் என்று தென் ஆப்பிரிக்க கேப்டன் தெம்பா பவுமா கூறியுள்ளார்.

- Advertisement -

வெறித்தனமான போட்டியாளர்:
இது பற்றி ஸ்டார்ட் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “இந்திய பேட்டிங் வரிசையில் இருக்கும் வீரர்களில் எங்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலை கொடுப்பவராக விராட் கோலி இருப்பார் என்பதை சொல்லாமல் இருக்க முடியாது. இதற்கு முன் இங்கே நிறைய போட்டிகளில் விளையாடியுள்ள அவர் இங்குள்ள சூழ்நிலைகளை நன்றாக புரிந்து வைத்துள்ளார்” என்று கூறினார்.

அதே போல இந்திய அணியில் விராட் கோலி தான் தங்களுக்கு வெறித்தனமான போட்டியை கொடுப்பவர் என்று நட்சத்திர வீரர் ஐடன் மார்க்ரம் பேசியது பின்வருமாறு. “அவர் மிகவும் கடுமையான போட்டியை கொடுக்கக்கூடிய வெறித்தனமான போட்டியாளர். நாங்கள் அதிகப்படியான நுணுக்கங்கள் தெரிந்த வீரர்கள் கிடையாது என்றாலும் அவரைப் போன்ற வீரர்களுக்கு எதிராக போட்டியிடும் வழியை கண்டறிவோம்”

- Advertisement -

“குறிப்பாக எங்களுக்கு எதிராக விளையாடும் வீரர்களை விட வெற்றிக்காக அதிகமாக போராடும் பசியை நாங்கள் கொண்டுள்ளோம்” என்று கூறினார். அதே நிகழ்ச்சியில் தென்னாப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டர் மார்க்கோ யான்சன் பேசியது பின்வருமாறு. “விராட் கோலிக்கு எதிராக பந்து வீசுவது மிகவும் கடினமாகும். ஏனெனில் அதை எப்படி சமாளிக்க வேண்டும் என்பது அவருக்கு தெரியும். குறிப்பாக தம்முடைய பலம் பலவீனங்கள் என்ன என்பதை அவர் உணர்ந்து விளையாடுவார்” என்று கூறினார்.

இதையும் படிங்க: அவர் விஷயத்துல தப்பு கணக்கு போடாதீங்க.. பலத்தை ஃபாலோ பண்ணுங்க.. இந்திய அணியை எச்சரித்த ஹர்பஜன்

இவர்கள் இப்படி பேசுவதற்கான காரணம் என்னவெனில் மற்ற இந்திய பேட்ஸ்மேன்களை விட தென்னாப்பிரிக்க மண்ணில் விராட் கோலி தான் 7 டெஸ்ட் போட்டிகளில் 719 ரன்களை 51.35 என்ற அபாரமான சராசரியில் எடுத்துள்ளார். அந்த வகையில் இத்தொடரிலும் அவர் தென் ஆப்பிரிக்காவுக்கு சவாலை கொடுத்து இந்தியாவின் வெற்றிக்கு போராடுவார் என்று நம்பலாம்.

Advertisement