அவரெல்லாம் எனக்கு தூசி மாதிரி.. நட்சத்திர இந்திய வீரர் பற்றி.. இந்திய ரசிகரிடம் ஜான்சன் பதிலடி

Mitchell Johnson 2
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்ற 2023 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் 6வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற ஆஸ்திரேலியா அடுத்ததாக பாகிஸ்தானுக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. அந்த தொடரில் சொந்த மண்ணில் வலுவான அணியாக திகழும் ஆஸ்திரேலியா இம்முறையும் பாகிஸ்தானை தோற்கடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதை விட இத்தொடரின் முதல் போட்டியுடன் நட்சத்திர துவக்க வீரர் டேவிட் வார்னர் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ஆனால் 2018இல் பந்து சேதப்படுத்தப்பட்ட வழக்கில் நாட்டுக்கு அவப்பெயரை கொடுத்த அவரை ஹீரோவை போல வழி அனுப்புவதற்கான ஏற்பாடுகளை செய்வது ஏன் என்று ஆஸ்திரேலியா வாரியத்தை முன்னாள் வீரர் மிட்சேல் ஜான்சன் கடுமையாக விமர்சித்தார்.

- Advertisement -

ஈஸியான விக்கெட்:
ஆனால் அவருக்கு மைக்கேல் கிளார்க், உஸ்மான் கவாஜா உள்ளிட்ட ஏராளமான முன்னாள் முன்னாள் வீரர்கள் தக்க பதிலடி கொடுத்தனர். இந்த சூழ்நிலையில் விராட் கோலி பற்றி மிட்சேல் ஜான்சன் கடந்த வாரம் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கொடுத்த பதில்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதாவது “விராட் கோலியை நினைத்து பாருங்கள்” என்று இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு இந்திய ரசிகர் ஜான்சன் பதிவிட்ட புகைப்படத்தின் கீழே கருத்து தெரிவித்துள்ளார்.

கடந்த 2014 சுற்றுப்பயணத்தில் முதல் பந்திலேயே விராட் கோலிக்கு எதிராக பவுன்சரை வீசிய மிட்சேல் ஜான்சன் தரையில் விழ வைத்தார். இருப்பினும் அதற்கு அசராத விராட் கோலி மேற்கொண்டு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அபாரமான சதமடித்து ஜான்சனுக்கு காற்றில் முத்தத்தை கொடுத்து மாஸ் பதிலடி கொடுத்தார். எனவே அதையெல்லாம் மறந்து தேவையின்றி பேசாதீர்கள் என்ற வகையில் அந்த இந்திய ரசிகர் ஜான்சனின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிலளித்திருந்தார்.

- Advertisement -

அதற்கு “விராட் கோலி யார்” என்று அந்த ரசிகருக்கு மிட்சேல் ஜான்சன் பதிலளித்து பதிலடி கொடுத்தார். அதை பார்த்த மற்றொரு இந்திய ரசிகர் “நீங்கள் விராட் கோலிக்கு மிகவும் பிடித்த பவுலர்” என்று அவருக்கு மீண்டும் பதிலளித்தார். ஆனால் அதை ஏற்றுக் கொள்ளாத மிட்சேல் ஜான்சன் “விராட் கோலியை அவுட்டாக்குவது எனக்கு மிகவும் எளிதானது” என்று அந்த இந்திய ரசிகருக்கு பதிலளித்தது வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க: அவரெல்லாம் எனக்கு தூசி மாதிரி.. நட்சத்திர இந்திய வீரர் பற்றி.. இந்திய ரசிகரிடம் ஜான்சன் பதிலடி

அதாவது மகத்தான வீரராக போற்றப்படும் விராட் கோலியை தூசி போல மிகவும் எளிதாக அவுட் செய்வேன் என்று மிட்சேல் ஜான்சன் கூறியுள்ளார். முன்னதாக அந்த இருவரும் 14 சர்வதேச போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளனர். அதில் ஜான்சன் 4 முறை மட்டுமே விராட் கோலியை அவுட்டாக்கியுள்ளார். அவருக்கு எதிராக விராட் கோலி அதிக ரன்கள் குவித்து வெற்றிகரமாக செயல்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement