பாகிஸ்தான் அணி வீரர்களை தனது வீட்டிற்கு அழைத்து பார்ட்டி கொடுக்கப்போகிறாரா? விராட் கோலி – உண்மை விவரம் இதோ

Kohli-PAK
- Advertisement -

அக்டோபர் 5-ஆம் தேதி இந்தியாவில் ஐசிசி-யின் 13-வது 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரானது கோலாகலமாக துவங்கியது. இந்த தொடரில் இதுவரை நான்கு போட்டிகள் முடிவடைந்த வேளையில் இன்று அக்டோபர் 8-ஆம் தேதி இந்திய அணி தங்களது முதலாவது போட்டியில் ஆஸ்திரேலிய அணியை எதிர்த்து சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் விளையாட இருக்கிறது. இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் உச்சத்தை தொட்டுள்ளது.

இந்நிலையில் 6 ஆண்டுகளுக்கு பின்னர் இந்தியா வந்துள்ள பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி பயிற்சி போட்டியில் தோல்வியை சந்தித்து இருந்தாலும் தங்களது முதல் போட்டியிலேயே வெற்றியுடன் இந்த உலககோப்பை பயணத்தை துவங்கியுள்ளது.

- Advertisement -

அதோடு மட்டுமின்றி பாகிஸ்தான் அணி அடுத்தடுத்த வெற்றிகளுக்காகவும் தற்போது தீவிரமாக தயாராகி வருகிறது. இந்நிலையில் இந்திய அணியின் முன்னணி வீரரான விராட் கோலி தனது டிவிட்டர் பக்கத்தின் மூலம் பாகிஸ்தான் அணியை தனது வீட்டிற்கு பார்ட்டிக்கு வரும்படி அழைப்பு விடுத்துள்ளதாக ஒரு தகவல் தற்போது இணையத்தில் அதிகளவு வைரலாகி வருகிறது.

அந்த வகையில் விராட் கோலி வெளியிட்டதாக பரவி வரும் அந்த ட்விட்டர் பதிவில் : பாகிஸ்தான் அணி ஏழு ஆண்டுகள் கழித்து இந்தியா வந்ததில் மகிழ்ச்சி. நான் பாகிஸ்தான் அணி வீரர்கள் அனைவருக்கும் எனது வீட்டில் பார்ட்டி கொடுக்க விரும்புகிறேன். குறிப்பாக சதாப் கான் என் வீட்டிற்கு வர வேண்டும். அன்பை பரப்புவோம் என ஒரு பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

ஆனால் இதன் உண்மை தன்மையை குறித்து ஆராயும் போது : யாரோ விராட் கோலி போன்றே ஒரு போலியான ட்விட்டர் கணக்கை துவங்கி அதன் மூலமாக இந்த பதிவை வெளியிட்டுள்ளனர். அந்த பதிவே தற்போது இணையத்தில் வைரலாகி வருவது தெரியவந்துள்ளது. இது முற்றிலும் பொய்யான தகவல் என்பது இதன்மூலம் உறுதியாகி உள்ளது.

இதையும் படிங்க : IND vs AUS : ஆஸி போட்டியில் அஸ்வின் விளையாடுவாரா? கேப்டன் ரோஹித் சர்மா கொடுத்த நேரடி பதில் இதோ

அதேவேளையில் உலகக் கோப்பை தொடர் ஆரம்பித்ததிலிருந்து இந்திய வீரர்கள் அனைவரும் சமூகவலைதளத்தில் இருந்து தள்ளியே இருப்பார்கள் என்பதால் கட்டாயம் விராட் கோலி இப்படி ஒரு ட்வீட்டை செய்திருக்க மாட்டார் என்பது உறுதியாகியுள்ளது. இப்படி இந்திய ரசிகர் ஒருவர் போலி அக்கவுண்ட்டின் மூலம் இந்த தவறான கருத்தை பகிர்ந்துள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் அக்டோபர் 14-ஆம் தேதி அகமதாபாத் நகரில் பலப்பரீட்சை நடத்த இருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement