எத்தனை விருது வாங்குனாலும் இதுக்கு ஈடாகுமா – வைரல் புகைப்படத்தை கொண்டாடும் விராட் கோலி ரசிகர்கள், விவரம் இதோ

- Advertisement -

நட்சத்திர வீரர் விராட் கோலி கடந்த 2018ஆம் ஆண்டு மலேசியாவில் நடைபெற்ற ஐசிசி அண்டர்-19 உலக கோப்பையை இந்தியாவுக்கு வென்று கொடுத்து சீனியர் கிரிக்கெட்டில் ஆரம்ப காலங்களில் தடுமாறினாலும் நாளடைவில் மிகச் சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தி நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்தார். குறிப்பாக சச்சின் டெண்டுல்கர் ஓய்வு பெற்ற 2013க்குப்பின் 3 வகையான கிரிக்கெட்டிலும் உலகின் அனைத்து இடங்களிலும் அனைத்து உலகத்தரம் வாய்ந்த பவுலர்களையும் சிறப்பாக எதிர்கொண்டு வரும் அவர் கிட்டத்தட்ட 50 என்ற சிறப்பான பேட்டிங் சராசரியில் 25000+ ரன்களையும் 75 சதங்களையும் விளாசி நவீன கிரிக்கெட்டின் ஜாம்பவானாக ரன் மெஷினாக அசத்தி வருகிறார்.

இருப்பினும் சிலர் நவீன கிரிக்கெட்டில் பேட்டிங்கு சாதகமான விதிமுறைகளால் இந்த ரன்களை விராட் கோலி எளிதாக அடிக்கிறார் என்று விமர்சிப்பதுடன் அந்த காலத்தில் இருந்த வாசிம் அக்ரம், கிளன் மெக்ராத், முரளிதரன், ஷேன் வார்னே போன்ற தரமான பவுலர்களை எதிர்கொண்டாரா? என்று விமர்சனத்துக்காக பேசுகிறார்கள். ஆனால் அதே நவீன கிரிக்கெட்டில் அதே விதிமுறைகளை பயன்படுத்தி உலகின் இதர பேட்ஸ்மேன்களில் ஏன் ஒருவர் கூட 45 சதங்களை அடிக்கவில்லை? என்பதே அவர்களது விமர்சனங்களுக்கு பதிலாகும். அத்துடன் இப்போதும் ஜேம்ஸ் ஆண்டர்சன், ட்ரெண்ட் போல்ட், மிட்சேல் ஸ்டார்க் என உலகம் முழுவதிலும் இருக்கும் தரமான பவுலர்களை சிறப்பாக எதிர்கொண்டு தான் அவர் இந்த ரன்களை அடித்துள்ளார்.

- Advertisement -

வேற என்ன வேணும்:
அப்படி மகத்தான வீரராக செயல்பட்டு வரும் அவர் சச்சின் டெண்டுல்கர் படைத்த பெரும்பாலான சாதனைகளை அதிவேகமாக உடைத்து தனக்கென்று தனி முத்திரையை பதித்து வருகிறார். மேலும் நவீன கிரிக்கெட்டில் அதிக ஆட்டநாயகன் விருதுகள் வென்ற வீரர், 3 வகையான கிரிக்கெட்டிலும் குறைந்தது தலா 10 ஆட்டநாயகன் விருதுகள் வென்ற ஒரே வீரர் போன்ற மலைக்க வைக்கும் சாதனைகளை ஏற்கனவே படைத்துள்ள அவர் உலகிலேயே அதிக ஐசிசி விருதுகளை வென்ற வீரராகவும் உலக சாதனை படைத்துள்ளார்.

இந்நிலையில் இந்தியாவில் இருக்கும் ஒரு பள்ளியில் 9வது வகுப்பின் ஆங்கில பாடத்திற்கான வினாத்தாளில் விராட் கோலியின் புகைப்படத்தை பதிவிட்டு இந்த புகைப்படத்தை பற்றி 100 முதல் 120 வார்த்தைகளில் சிறிய கட்டுரை எழுதுமாறு கேள்வி கேட்கப்பட்டுள்ளது. கடந்த 2019க்குப்பின் சதமடிக்காமல் இருந்து வந்த கதையை 2022 ஆசிய கோப்பையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக முதல் முறையாக டி20 கிரிக்கெட்டில் சதமடித்து உடைத்த போது புன்னகை மிகுந்த முகத்துடன் கொண்டாடிய விராட் கோலியின் அந்த புகைப்படத்தை மையப்படுத்தி அவரைப் பற்றி ஒரு சிறிய கட்டுரை எழுதுமாறு அந்த வினாத் தாளில் கேட்கப்பட்டுள்ளது.

- Advertisement -

அதை பார்த்த அவரது ரசிகர்கள் தனது கேரியரில் எத்தனையோ விருதுகளை வென்றிருந்தாலும் பள்ளி மாணவர்களின் தேர்வு வினாத்தாளில் புகைப்படத்துடன் இடம் பிடித்த இந்த கௌரவத்தை விட விராட் கோலிக்கு வேறு பெரிய விருது இருக்க முடியாது என்று சமூக வலைதளங்களில் அந்த புகைப்படத்தை ட்ரெண்டிங் செய்து வருகிறார்கள்.

அத்துடன் நாங்கள் படிக்கும் போது இது போன்ற கேள்வி கேட்டிருந்தால் 120 வார்த்தைகளில் என்ன மொத்த விடைத்தாளிலும் விராட் கோலியின் திறமை மற்றும் சாதனை பட்டியலை எழுதி 100 மதிப்பெண்கள் பெற்றிருப்போம் என்றும் அவரது ரசிகர்கள் கலகலப்பை வெளிப்படுத்துகிறார்கள். முன்னதாக ஆங்கில பாடத்தில் தடுமாறிய எத்தனையோ 90ஸ் கிட்ஸ் குழந்தைகளை ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் எஸ்ஸே காப்பாற்றியது யாராலும் மறக்க முடியாது.

இதையும் படிங்க: இவங்க சரிப்பட்டு வரமாட்டாங்க, இந்தியா உ.கோ ஜெயிக்க நடராஜன் மாதிரி பிளேயர்ஸ் தான் கரெக்ட் – முன்னாள் பாக் வீரர் அதிரடி

அதை வைத்து 10ஆம் வகுப்பு ஆங்கில பாடத்தில் தேர்வாகி இன்று பல்வேறு துறைகளில் பணிபுரிந்து வரும் 90ஸ் கிட்ஸ் ரசிகர்களைப் போல இந்த காலத்து குழந்தைகளுக்கு சச்சின் டெண்டுல்கருக்கு நிகராக சாதனை படைத்து வரும் விராட் கோலி பற்றி எழுதி தேர்வில் வெற்றி பெறும் வாய்ப்பு கிடைத்துள்ளது உண்மையாகவே கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைக்கிறது.

Advertisement