இவங்க சரிப்பட்டு வரமாட்டாங்க, இந்தியா உ.கோ ஜெயிக்க நடராஜன் மாதிரி பிளேயர்ஸ் தான் கரெக்ட் – முன்னாள் பாக் வீரர் அதிரடி

Nattu-4
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் தொடரில் 2 – 1 (3) என்ற கணக்கில் தோல்வியை சந்தித்த இந்தியா 2019க்குப்பின் 4 வருடங்கள் கழித்து 26 தொடர்களுக்கு பின் முதல் முறையாக சொந்த மண்ணில் தோல்வியை பதிவு செய்துள்ளது. இந்த தொடரில் முதல் போட்டியில் பந்து வீச்சில் அசத்தலாக செயல்பட்ட இந்தியா வெறும் 188 ரன்களை சேசிங் செய்யும் போது டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களின் விக்கெட்டுகளை இழந்து ஆரம்பத்திலேயே திணறியது. நல்ல வேளையாக இலக்கு குறைவாக இருந்ததால் கேஎல் ராகுல் – ரவீந்திர ஜடேஜா ஆகியோர் போராடி வெற்றி பெற வைத்து முன்னிலையை பெற்றுக் கொடுத்தனர்.

MItchell Starc IND vs AUS

- Advertisement -

ஆனால் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற 2வது போட்டியில் வெறும் 117 ரன்களுக்கு ஆல் அவுட்டாகும் அளவுக்கு இந்திய பேட்ஸ்மேன்கள் மொத்தமாக ஏமாற்றிய நிலையில் ஒரு விக்கெட் கூட எடுக்க முடியாத அளவுக்கு சுமாராக செயல்பட்ட இந்திய பவுலர்களை அடித்து நொறுக்கிய ஆஸ்திரேலியா 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்று தொடரை சமன் செய்தது. அத்துடன் 2017 சாம்பியன்ஸ் ட்ராபி ஃபைனலில் முகமது அமீர், 2019 உலகக் கோப்பை செமி ஃபைனலில் ட்ரெண்ட் போல்ட் ஆகிய இடது கை வேகப்பந்து வீச்சாளர்களிடம் திணறிய இந்திய பேட்ஸ்மேன்கள் 4 வருடங்கள் கழித்து கொஞ்சமும் முன்னேறாமல் மிட்சேல் ஸ்டார்க்கிடம் பெட்டி பாம்பாக அடங்கியது இந்திய ரசிகர்களை கடுப்பாக வைத்தது.

இளம் வீரர்கள் வேணும்:
அந்த நிலையில் சென்னையில் நடைபெற்ற வெற்றியாளரை தீர்மானிக்கும் போட்டியில் ஆஸ்திரேலிய டெயில் எண்டர்கள் 34 ரன்கள் எடுக்கும் அளவுக்கு கடைசி நேரத்தில் இந்திய பவுலர்கள் சுமாராகவே செயல்பட்டனர். அதை விட பேட்டிங்கில் 270 ரன்களை துரத்தும் போது ரோஹித் தர்மா போன்ற முக்கிய பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்களை எடுக்காத நிலையில் வெற்றிக்கு போராடிய விராட் கோலி முக்கிய நேரத்தில் சுமாரான ஷாட் அடித்து அவுட்டானார். மேலும் ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா போன்றவர்கள் ஃபினிஷிங் செய்யாமல் இந்தியாவின் வெற்றியை தாரை வைத்தனர்.

Nattu

மொத்தத்தில் சமீபகால படு தோல்விகளில் எந்த முன்னேற்றத்தையும் காணாத இந்தியா உலக கோப்பை நடைபெறும் இந்த வருடத்தில் மோசமாக செயல்பட்டு நம்பர் ஒன் இடத்தை ஆஸ்திரேலியாவிடம் பறிகொடுத்துள்ளது இந்திய ரசிகர்களை கவலையடைய வைத்துள்ளது. இந்நிலையில் பும்ரா இல்லாத பொறுப்புடன் செயல்பட வேண்டிய தற்போதைய இந்திய பவுலர்கள் முக்கிய போட்டிகளில் ஏமாற்றத்தை கொடுப்பதாக தெரிவிக்கும் முன்னாள் பாகிஸ்தான் வீரர் டேனிஷ் கனேரியா சொந்த மண்ணில் நடைபெறும் உலகக் கோப்பையை வெல்ல நடராஜன், உம்ரான் மாலிக், அர்ஷிதீப் சிங் போன்ற திறமையும் வேகமும் துடிதுடிப்பும் கொண்ட இளம் பவுலர்களை தேர்வு செய்யுமாறு இந்திய அணி நிர்வாகத்திடம் நடக்காத கோரிக்கை வைத்துள்ளார்.

- Advertisement -

இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “இந்தியாவிடம் தோற்றுப் போன பந்து வீச்சு கூட்டணி இருக்கிறது. அவர்கள் உலகக் கோப்பையை வெல்வதற்கு சிறப்பான பவுலர்கள் தேவைப்படுகிறது. இந்த பவுலர்கள் நிச்சயமாக இந்தியாவுக்கு உலக கோப்பையை வென்று கொடுக்கப் போவதில்லை என்பதை சொல்வதில் நான் மன்னிப்பு கேட்கிறேன். ஆனால் இது அவருடைய சிறந்த அட்டாக் செய்யும் பந்து வீச்சு கூட்டணியாக இருக்கப் போவதில்லை. மேலும் பும்ராவின் காயம் பற்றிய தெளிவான அறிவிப்புகள் வெளியாகாத நிலையில் இந்திய அணி நிர்வாகம் உம்ரான் மாலிக், அர்ஷிதீப் சிங், டி நடராஜன் போன்றவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும்”

Danish Kaneria INDia

“அத்துடன் இந்திய பேட்ஸ்மேன்கள் தரமான சுழல் பந்து வீச்சை எதிர்கொள்ள தெரிந்தவர்கள் என்று சொல்கிறார்கள். இருப்பினும் இந்திய பேட்ஸ்மேன்கள் அக்சர் பட்டேல், ரவீந்திர ஜடேஜா, யுஸ்வென்ற சஹால் ஆகியோரை தான் வலைப்பயிற்சியில் எதிர்கொள்கிறார்கள்”

இதையும் படிங்க:அவருக்கு மட்டும் தொடர்ந்து சான்ஸ் கொடுத்தா நிச்சயமா உ.கோ ஜெயிச்சு கொடுப்பாரு – தடுமாறும் இந்திய வீரருக்கு யுவி மெகா ஆதரவு

“ஆனால் அவர்கள் வேகமாக வீசும் பவுலர்களே தவிர பந்தை எதிர்பாராத அளவுக்கு சுழற்றுபவர்கள் கிடையாது. மறுபுறம் ஆஸ்திரேலியா பந்தை சுழற்றினார்கள். அது தான் இந்தியாவுக்கு பெரிய கடினத்தை ஏற்படுத்தி தோல்வியை கொடுத்தது” என்று கூறினார்.

Advertisement