நானே தல ரசிகன் தான் – சிஎஸ்கே ஆர்சிபி எல்லாம் ஓரினம் தான், விராட் கோலியின் பதிவால் இந்திய ரசிகர்கள் நெகிழ்ச்சி

- Advertisement -

இந்தியாவின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஐபிஎல் தொடரில் ஏப்ரல் 17ஆம் தேதி நடைபெற்ற 24வது லீக் போட்டியில் தென்னிந்தியாவின் டாப் அணிகளான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை டேவோன் கான்வே 83, சிவம் துபே 52, ரகானே 37 என முக்கிய பேட்ஸ்மேன்களின் அதிரடியான ரன் குவிப்பால் 226/6 ரன்கள் எடுத்தது. அதை துரத்திய பெங்களூருவுக்கு விராட் கோலி 6, லோம்ரர் 0 என முக்கிய பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி ஆரம்பத்திலேயே பின்னடைவை கொடுத்தனர்.

இருப்பினும் கேப்டன் டு பிளேஸிஸ் அதிரடியாக 62 ரன்களும் கிளன் மேக்ஸ்வெல் 76 ரன்களும் எடுத்து வெற்றிக்கு போராடி ஆட்டமிழந்தனர். அப்போது வரை கையில் வைத்திருந்த பெங்களூருவின் வெற்றியை கடைசி நேரத்தில் கச்சிதமாக பந்து வீசிய சென்னை தினேஷ் கார்த்திக் 28 (14), சபாஷ் அஹமத் 12 (10) என லோயர் ஆர்டர் பேட்ஸ்மேன்களை குறைந்த ரன்களில் அவுட்டாக்கி 8 ரன்கள் வித்தியாசத்தில் தன்வசமாக்கியது. அதனால் 5 போட்டிகளில் 3வது வெற்றியை பதிவு செய்த சென்னை புள்ளி பட்டியலிலும் டாப் 4 இடத்திற்குள் நுழைந்து அசத்தியது.

- Advertisement -

எல்லாம் ஓரினம் தான்:
முன்னதாக இப்போட்டி நடைபெற்ற சின்னசாமி மைதானம் முழுக்க சிவப்பு மயமாக காட்சியளிக்கும் வகையில் பெங்களூரு அணிக்கு தான் அதிக ஆதரவு இருக்கும். ஆனால் அதை மிஞ்சும் வகையில் மஞ்சள் உடை அணிந்து வந்த ஏராளமான ரசிகர்கள் இந்தியாவுக்காக 3 விதமான உலக கோப்பைகளை வென்று மகத்தான கேப்டனாக சாதனை படைத்துள்ள தோனி தலைமையிலான சென்னைக்கு ஆதரவு கொடுத்தனர். மேலும் தோனி பேட்டிங் செய்ய களமிறங்கிய போது ஏராளமான பெங்களூரு ரசிகர்களே அவருக்கு ஆதரவு கொடுத்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

அந்த நிலையில் போட்டியின் முடிவில் வழக்கம் போல இரு அணி வீரர்களும் கைகொடுத்துக் கொண்ட போது தோனியை நேரடியாக சந்தித்த விராட் கோலி கை கொடுத்து கட்டிப்பிடித்து சிரித்த முகத்துடன் மனம் விட்டு பேசினார். இந்தியாவின் மிகப்பெரிய நட்சத்திரங்களான அந்த இருவரும் மிகுந்த மகிழ்ச்சியுடன் மனம் விட்டு பேசியது இரு அணிகளைச் சேர்ந்த ரசிகர்கள் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களின் நெஞ்சங்களை தொட்டது. குறிப்பாக போட்டி முடிந்த பின்பு தோனியை கட்டிப்பிடிப்பது போன்ற புகைப்படத்தை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள விராட் கோலி சிவப்பு நிற பெங்களூரு இதயத்தையும் மஞ்சள் நிற சென்னை இதயத்தையும் ஒன்றாக இணைத்து இந்தியாவின் கொடியை சேர்த்து பதிவிட்டுள்ளார்.

- Advertisement -

அதாவது சென்னை – பெங்களூரு இவை அனைத்தையும் தாண்டி நாம் அனைவருமே இந்தியாவை சேர்ந்த ஓரினம் என்பதை குறிப்பிட்டுள்ள அவர் இந்தியாவுக்காக விளையாடியதை நினைத்து நாங்கள் பெருமைப்படுகிறோம் என்ற வகையில் பதிவிட்டது இந்திய ரசிகர்களை மிகவும் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது. மேலும் ஆரம்ப காலங்களில் தடுமாறிய விராட் கோலிக்கு விமர்சனங்களையும் தாண்டி கேப்டனாக தோனி தொடர்ந்து வாய்ப்பு கொடுத்தார். அதை வீணடிக்காமல் குறுகிய காலத்திலேயே சிறப்பாக செயல்பட்ட விராட் கோலி கேப்டனின் பெயரைக் காப்பாற்றும் அளவுக்கு இன்று 25000+ ரன்களையும் 75 சதங்களை விளாசி இந்தியாவுக்கு நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்து நவீன கிரிக்கெட்டின் நாயகனாக ஜொலித்து வருகிறார்.

அத்துடன் இந்தியாவுக்கு 3 விதமான உலக கோப்பைகளை வென்ற தோனி தமக்கு அடுத்ததாக விராட் கோலி தான் இந்தியாவை வழி நடத்துவதற்கு சரியானவர் என்பதை உணர்ந்து 2014இல் டெஸ்ட் கேப்டன்ஷிப் பதவியையும் 2017 முதல் அனைத்து விதமான கேப்டன்ஷிப் பதவிகளையும் ஒப்படைத்து அவரது தலைமை சாதாரண வீரராக விளையாடினார்.

இதையும் படிங்க: CSK vs RCB : அவரை மாதிரி ஒருத்தர் குடுக்குற சப்போர்ட் தான் என்னோட சிறப்பான ஆட்டத்திற்கு காரணம் – டேவான் கான்வே பேட்டி

அத்துடன் 2019க்குப்பின் சதமடிக்காமல் இருந்த போது பெரும்பாலான முன்னாள் வீரர்கள் விமர்சித்த போது தோனி மட்டுமே தமக்கு மெசேஜ் செய்து ஆதரவு கொடுத்ததாக விராட் கோலி தெரிவித்திருந்தார். அப்படி தம்முடைய குருவாகவும் நண்பராகவும் இருக்கும் தல தோனிக்கு நான் தான் உங்கள் அனைவரையும் விட முதல் ரசிகன் என்பதை நிரூபிக்கும் வகையில் விராட் கோலி ட்விட்டரில் பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement