IPL 2023 : இது என்ன ஃபுட் பால் மேட்ச்சா? நண்பன் ஆஷிஷ் நெஹ்ராவை விமர்சித்த விரேந்தர் சேவாக் – நடந்தது என்ன

Virender Sehwag.jpeg
- Advertisement -

ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 16ஆம் தேதி நடைபெற்ற 23வது லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் குஜராத்தை 3 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த ராஜஸ்தான் புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது. அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் டேவிட் மில்லர் 46 (30) சுப்மன் கில் 45 (34) என முக்கிய வீரர்களின் ரன் குவிப்பால் 20 ஓவர்களில் 177/7 ரன்கள் எடுத்தது. அதை துரத்திய ராஜஸ்தானுக்கு ஜெய்ஸ்வால் 1, பட்லர் 0, தேவ்தூத் படிக்கல் 26, ரியன் பராக் 5 என டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர்.

இருப்பினும் மிடில் ஆர்டரில் கேப்டன் சஞ்சு சாம்சன் அதிரடியாக 3 பவுண்டரி 6 சிக்ஸருடன் 60 (32) ரன்களும் சிம்ரோன் ஹெட்மயர் 56* (26) ரன்களும் எடுத்து வெற்றி பெற வைத்தனர். மறுபுறம் பேட்டிங்கில் எக்ஸ்ட்ரா 20 ரன்கள் எடுக்க தவறிய குஜராத் பொதுவாகவே தரமான பந்து வீச்சு கூட்டணியை கொண்ட அணியாக இருந்தாலும் டெத் ஓவர்களில் ரன்களை வாரி வழங்கியதால் கையிலிருந்த வெற்றியை நழுவ விட்டது. மேலும் 2 ஓவரில் வெறும் 7 ரன்கள் மட்டும் கொடுத்த மோகித் சர்மாவுக்கு கேப்டன் ஹர்திக் பாண்டியா முழுமையாக 4 ஓவர்கள் கொடுக்காதது ரசிகர்களை அதிருப்தியடைய வைத்தது.

- Advertisement -

சேவாக் விளாசல்:
அதை விட குஜராத் அணியின் பயிற்சியாளராக இருக்கும் ஆஷிஷ் நெஹ்ரா வழக்கம் போல பெவிலியனில் அமர்ந்திருக்காமல் கடைசி 10 ஓவர்களில் மைதானத்தின் நாலாபுறங்களிலும் பவுண்டரி எல்லைக்குள் நின்று கொண்டு ஹர்டிக் பண்டியா, ஷமி உள்ளிட்ட முக்கிய வீரர்களுடன் அடிக்கடி பேசி ஆலோசனை கொடுத்தார். ஆனால் உண்மையாகவே பரபரப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் போட்டியில் திட்டங்களை வகுத்துக் கொடுக்கிறேன் என்ற பெயரில் அவர் கொடுத்த ஆலோசனைகள் பாண்டியா, ஷமி போன்றவர்களை பதற்றமடைய வைத்து தாங்கள் உருவாக்கிய திட்டத்தில் மாற்றத்தை செய்ய வைத்து சொதப்பலுக்கு காரணமாக அமைந்தது.

பொதுவாக கால்பந்து விளையாட்டில் தான் இது போல பயிற்சியாளர்கள் மொத்த போட்டியிலும் மைதானத்தின் ஓரத்தில் நின்று திட்டங்களை வகுத்துக் கொடுப்பார்கள். ஆனால் கிரிக்கெட்டுக்கு அது எந்த வகையிலும் செட்டாகாது என்பதால் அதிருப்தியடைந்த நிறைய ரசிகர்கள் இது என்ன கால்பந்து விளையாட்டா? என்று சமூக வலைதளங்களில் அவரை விமர்சித்தனர். இந்நிலையில் சிறுவயதிலிருந்தே தமக்கு நன்றாக தெரிந்த ஆஷிஸ் நெஹ்ரா பவுண்டரி எல்லை அருகே சென்று குஜராத் வீரர்களுருடன் போட்டி நடுவே பேசுவது எந்த வகையிலும் வெற்றிக்கு உதவாது என்று முன்னாள் வீரர் சேவாக் விமர்சித்துள்ளார்.

- Advertisement -

இது பற்றி பற்றி கிரிக்பஸ் இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “ஆஷிஷ் நெஹ்ரா எப்படிப்பட்டவர் என்பதை சிறுவயதிலிருந்தே நாம் அறிவோம். இருப்பினும் பவுண்டரி எல்லை அருகே நின்று கொண்டு தன்னுடைய கவலையை அவர் வீரர்களிடம் தெரிவிக்கிறார் என்று நினைக்கிறேன். ஆனால் உண்மை என்னவெனில் சில நேரங்களில் இது வீரர்களிடம் தேவையற்ற அழுத்தத்தை ஏற்படுத்தும். எடுத்துக்காட்டாக பவுண்டரி எல்லையின் அருகில் நின்று கொண்டு அவர் ஏதோ சொன்னதை கேட்டு விளையாடிய ஷமி கடைசி ஓவரில் சொதப்பி ரன்களை கொடுத்தார்”

“மேலும் கடந்த சீசனில் தோற்க வேண்டிய சில போட்டிகளில் குஜராத் வென்றது. ஆனால் இம்முறை அவர்கள் வெற்றி பெற வேண்டிய சில போட்டிகளில் தோற்றுள்ளனர். எனவே என்னைப் பொறுத்த வரை பவுண்டரி எல்லை அருகே நின்று கொண்டு வீரர்களிடம் ஆசிஷ் நெஹ்ரா பேசுவது அவர்களுக்கு தேவையற்ற பதற்றத்தை உருவாக்குவதாக நான் நினைக்கிறேன்” என்று கூறினார். மேலும் இந்த அதிரடியான வெற்றி கோப்பையை வெல்லும் அளவுக்கு ராஜஸ்தானுக்கு தன்னம்பிக்கையை கொடுக்கும் என்று பாராட்டியுள்ள அவர் இது பற்றி மேலும் பேசியது பின்வருமாறு.

இதையும் படிங்க:CSK vs RCB : அவரை மாதிரி ஒருத்தர் குடுக்குற சப்போர்ட் தான் என்னோட சிறப்பான ஆட்டத்திற்கு காரணம் – டேவான் கான்வே பேட்டி

“இந்த மாதிரியான வெற்றிகள் உங்களுடைய தன்னம்பிக்கையை அதிகரிக்கும். குறிப்பாக பட்லர் – ஜெய்ஸ்வால் கை கொடுக்க தவறிய போது ஹெட்மயர், சாம்சன், ஜுரேல் ஆகியோர் மிகச் சிறப்பாக செயல்பட்டனர். இந்தப் போராட்ட வெற்றி நிச்சயமாக பிளே ஆஃப் சுற்றுக்கு செல்வதற்கு மட்டுமல்லாமல் ஃபைனலில் கோப்பையை வெல்வதற்கான தன்னம்பிக்கையும் அவர்களுக்கு கொடுக்கும்”. என்று கூறினார்.

Advertisement