CSK vs RCB : அவரை மாதிரி ஒருத்தர் குடுக்குற சப்போர்ட் தான் என்னோட சிறப்பான ஆட்டத்திற்கு காரணம் – டேவான் கான்வே பேட்டி

Devon Conway
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 24-ஆவது லீக் போட்டியானது நேற்று பெங்களூரில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டூபிளெஸ்ஸிஸ் தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதின. அதன்படி இந்த ஆட்டத்தில் டாசில் வெற்றி பெற்ற பெங்களூரு அணியானது தங்களது அணி முதலில் பந்துவீசும் என்று அறிவித்தது. அதன்படி முதலில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் ஆறு விக்கெட்டுகளை இழந்து 226 ரன்கள் குவித்தது.

CSK vs RCB

- Advertisement -

சென்னை அணி சார்பாக துவக்க வீரர் டேவான் கான்வே 45 பந்துகளை சந்தித்து 6 பவுண்டரி மற்றும் 6 சிக்ஸர்கள் 83 ரன்கள் குவித்து அசத்தினார். பின்னர் 227 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது 20 ஓவர்களின் முடிவில் எட்டு விக்கெட்டுகளை இழந்து 218 ரன்கள் குவித்தது. இதன் காரணமாக சென்னை அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை பதிவு செய்திருந்தது.

இந்நிலையில் இந்த போட்டியில் சென்னை அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக திகழ்ந்த டேவான் கான்வே ஆட்டநாயகன் விருதினை பெற்றிருந்தார். இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தனது சிறப்பான ஆட்டம் குறித்து பேசிய டேவான் கான்வே கூறுகையில் : இந்த போட்டியில் நடந்த விடயங்கள் அனைத்தையும் நினைத்து மகிழ்ச்சியாக இருக்கிறது. ஏனெனில் முதல் சில போட்டிகளில் நான் சிறப்பாக விளையாடவில்லை. ஆனால் இந்த போட்டியில் நான் அற்புதமாக விளையாடி சென்னை அணி வெற்றி பெற்றதில் மகிழ்ச்சி.

Conway

என்னுடைய ஆட்டம் எல்லாம் மிகவும் சிம்பிளாகவே நான் தகவமைத்துக் கொண்டேன். அந்த வகையில் என்னுடைய சிறப்பான கிரிக்கெட் ஷாட்களை விளையாட முயற்சித்தேன். கடந்த சில போட்டிகளாக நான் சரியாக விளையாடாததால் என் மீது அழுத்தம் இருந்தது. ஆனாலும் என்னுடைய சிறப்பான ஆட்டத்தை இந்த போட்டியில் வெளிப்படுத்த முயற்சித்தேன். இன்றைய போட்டியில் எதிரணியின் பந்துவீச்சாளர்களின் மனநிலையை உணர்ந்து என்னுடைய விக்கெட்டை எளிதாக விட்டுக் கொடுக்கக் கூடாது என்று நினைத்தேன்.

- Advertisement -

அந்த வகையில் பெங்களூரு அணிக்கு எதிராக என்னுடைய திட்டங்களை சரியாக வகுத்தேன். சி.எஸ்.கே ஒரு சிறந்த அணி அவர்களுடன் நான் இரண்டாவது ஆண்டாக தற்போது பயணித்து வருகிறேன். அவர்களுடைய ஆதரவு என்பது அளப்பரியது. அதிலும் குறிப்பாக தோனி எனக்கு அளிக்கும் ஆதரவு அளவிட முடியாதது.

இதையும் படிங்க : RCB vs CSK : அவங்க 200 ரன் அடிச்சது கூட தப்பில்ல. நாங்க பண்ண இந்த தப்பு தான் தோல்விக்கு காரணம் – டூபிளெஸ்ஸிஸ் வருத்தம்

உங்களது அணியில் தோனி போன்ற ஒரு வீரரின் ஆதரவு இருந்தால் அதுவே உங்களுக்கு பெரிய பலத்தை அளிக்கும். அந்த வகையில் நான் இன்றைய போட்டியில் சிறப்பாக விளையாடியதற்கு காரணம் சென்னை அணியின் கேப்டனும், நிர்வாகமும் எனக்கு அளித்த சுதந்திரமும் தான் என டேவான் கான்வே கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement