RCB vs CSK : அவங்க 200 ரன் அடிச்சது கூட தப்பில்ல. நாங்க பண்ண இந்த தப்பு தான் தோல்விக்கு காரணம் – டூபிளெஸ்ஸிஸ் வருத்தம்

Faf
- Advertisement -

பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 24-ஆவது லீக் ஆட்டத்தில் டூபிளெஸ்ஸிஸ் தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சென்னை சூப்பர் கிங்ஸ் 8 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணியை வீழ்த்தியது.

CSK vs RCB

- Advertisement -

அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற பெங்களூரு அணி தங்களது அணி முதலில் பந்துவீசும் என்று அறிவித்தது. அதன்படி முதலில் விளையாடிய சென்னை அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 226 ரன்கள் குவித்தது.

பின்னர் 227 ரன்கள் அடித்தால் வெற்றி என்று இலக்குடன் விளையாடிய சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 218 ரன்களை மட்டுமே குவித்ததால் 8 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்நிலையில் இந்த போட்டியில் தோல்வியை சந்தித்த பெங்களூரு அணியின் கேப்டன் டூபிளெஸ்ஸிஸ் கூறுகையில் : இந்த போட்டியின் ஆரம்பத்திலேயே நான் டைவ் அடித்ததன் காரணமாகவே பேட்டிங் செய்யும்போது என்னுடைய இடுப்பு பகுதியில் அசவுகரியத்தை உணர்ந்தேன். அதன் காரணமாகவே வயிற்றில் டேப் அணிந்து விளையாடினேன்.

Maxwell

இந்த போட்டியில் நாங்கள் மிகச் சிறப்பாகவே விளையாடினோம். கடைசி ஐந்து ஓவர்களில் போட்டியை வெற்றிகரமாக முடிப்போம் என்று நினைத்தோம். ஏனெனில் தினேஷ் கார்த்திக் கடைசி 5 ஓவர்களில் மிகச் சிறப்பான பினிஷிங்கை தொடர்ச்சியாக எங்களுக்கு கொடுத்து வருகிறார். அதேபோன்று போட்டியை முடித்துக் கொடுப்பது அவருக்கு எப்பொழுதும் வழக்கமான ஒன்று.

- Advertisement -

இந்த போட்டியில் அது அவரால் முடியாமல் போனது. 200 ரன்கள் வரை இந்த மைதானத்தில் எளிதாக அடிக்கலாம் என்று நினைத்தோம். ஆனால் நாங்கள் 200 ரன்களுக்கு மேல் வழங்கிய ரன்களே இந்த போட்டியில் எங்களுக்கு பாதகமாக அமைந்தது. கடைசி நான்கு ஓவர்கள் இந்த போட்டியில் நாங்கள் சிறப்பாக விளையாடி முடித்திருக்க வேண்டிய தருணம். ஆனால் அந்த சமயத்தில் நாங்கள் விக்கெட்டுகளை இழந்து விட்டோம். அதுவே சென்னை அணியின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது.

இதையும் படிங்க : வீடியோ : ஆர்சிபி கோசத்தை அடக்கி விண்ணதிர வைத்த சிஎஸ்கே ரசிகர்கள், தோனியை கொண்டாடிய பெங்களூரு – அனுஷ்கா வியப்பு

பந்துவீச்சை பொருத்தவரை எங்களது அணியில் முகமது சிராஜ் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அதேபோன்று அவருடன் இணைந்து மற்ற பந்து வீச்சாளர்களும் இறுதி நேரத்தில் சிறப்பாக பந்துவீச வேண்டும் என டூபிளெஸ்ஸிஸ் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement