வீடியோ : ஆர்சிபி கோசத்தை அடக்கி விண்ணதிர வைத்த சிஎஸ்கே ரசிகர்கள், தோனியை கொண்டாடிய பெங்களூரு – அனுஷ்கா வியப்பு

- Advertisement -

கோடைகாலத்தில் இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்து படைத்து வரும் ஐபிஎல் 2023 டி20 தொடரில் ஏப்ரல் 17ஆம் தேதி நடைபெற்ற 24வது லீக் போட்டியில் தென்னிந்தியாவின் மிகப்பெரிய ரசிக பட்டாளத்தைக் கொண்ட அணிகளான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை 20 ஓவர்களில் அதிரடியாக செயல்பட்டு 226/6 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக டேவோன் கான்வே 83 (45) சிவம் துபே 52 (27) ரகானே 37 (20) என முக்கிய பேட்ஸ்மேன்கள் அதிரடியான ரன்களை எடுத்தனர்.

அதை தொடர்ந்து 227 ரன்களை துரத்திய பெங்களூருவுக்கு முதல் ஓவரிலேயே விராட் கோலி 6 (4) ரன்னில் அவுட்டாக அடுத்து வந்த மஹிப்பால் லோம்ரர் டக் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார். இருப்பினும் 2வது வீட்டுக்கு அதிரடியாக 126 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து சென்னை ரசிகர்களை கதிகலங்க வைத்த கேப்டன் டு பிளேஸிஸ் 62 (33) கிளன் மேக்ஸ்வெல் 76 (36) ரன்களும் எடுத்து வெற்றிக்கு போராடி ஆட்டமிழந்தனர். ஆனால் அதை பயன்படுத்திய சென்னை டெத் ஓவரின் சிறப்பாக செயல்பட்டு தினேஷ் கார்த்திக் 28 (14) சபாஷ் அகமது 12 என லோயர் ஆர்டர் பேட்ஸ்மேன்களை அதிரடி காட்ட விடாமல் குறைவான ரன்களில் அவுட்டாக்கி வெற்றி கண்டது.

- Advertisement -

விண்ணதிர்ந்த சிஎஸ்கே முழக்கம்:
முன்னதாக ஐபிஎல் வரலாற்றில் 5 கோப்பைகளை வென்ற மும்பை 4 கோப்பைகளை வென்ற சென்னை ஆகிய அணிகளுக்கு நிகராக கோப்பையை வெல்லாமலேயே அதிக ரசிக்கப்பட்டாளத்தை கொண்ட அணி என்றால் அது பெங்களூரு என்றே சொல்லலாம். குறிப்பாக தங்களுடைய அணி பங்கேற்கும் போட்டிகளில் முழுக்க முழுக்க சிவப்பு நிற உடையுடன் அணிந்து “ஆர்சிபி ஆர்சிபி” என சின்னசாமி மைதானம் முழுவதும் அதிரும் அளவுக்கு அவர்கள் ஆதரவு கொடுப்பது அனைவருமே அறிவோம்.

ஆனால் நேற்றைய போட்டியில் தோனி தலைமையிலான சென்னை அணிக்காக சிவப்பு நிற உடைகளை அணிந்த பெங்களூரு ரசிகர்களை மிஞ்சும் அளவுக்கு ஏராளமான ரசிகர்கள் மஞ்சள் உடை அணிந்து ஆதரவு கொடுத்தது ஆச்சரியமாக அமைந்தது. ஏனெனில் இதர அணிகள் பங்கேற்கும் போட்டிகளில் முழுக்க முழுக்க சிவப்பு மையமாக காட்சியளித்த பெங்களூரு சின்னசாமி மைதானம் நேற்றைய போட்டியில் பெரும்பாலும் மஞ்சள் மையமாக காட்சியளித்தது.

- Advertisement -

அதை விட ஓவர் மாற்றும் போது கிடைக்கும் ஓரிரு நிமிட இடைவெளியில் சின்னசாமி மைதானத்தில் இருக்கும் இசை குழுவினர் வழக்கம் போல “ஆர்சிபி ஆர்சிபி” என்று ஆரவாரம் செய்யுமாறு பெங்களூரு ரசிகர்களை உற்சாகப்படுத்தினர். இருப்பினும் அப்போது “ஆர்சிபி ஆர்சிபி” என்ற சத்தம் குறைவாக மட்டுமே வந்த நிலைமையில் அதை அடக்கும் அளவுக்கு “சிஎஸ்கே சிஎஸ்கே” என்று சென்னை ரசிகர்கள் விண்ணதிர முழங்கி ஆதரவு கொடுத்தனர்.

அப்படி சின்னசாமி மைதானத்தில் பெங்களூரு ரசிகர்களை மிஞ்சி சென்னை ரசிகர்கள் ராஜாங்கம் நடத்திய வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதை விட 15 ஓவர்களிலிருந்தே தோனி பேட்டிங் செய்வதை பார்க்க விரும்பிய சின்னசாமி மைதான ரசிகர்கள் “வீ வாண்ட் தோனி வீ வாண்ட் தோனி” என ஆரவாரம் செய்து முழங்கினார்கள்.

- Advertisement -

ஆனாலும் ஏற்கனவே முழங்கால் காயத்தால் தடுமாறி வருவதால் ராயுடு, மொய்ன் அலி, ஜடேஜா என முக்கிய வீரர்கள் அவுட்டான பின்பு கடைசி ஓவரின் 5வது பந்தில் தான் களமிறங்கினார். அதனால் ஒரு பந்தை மட்டுமே எதிர்கொண்ட அவர் சிங்கிள் மட்டுமே எடுத்தார். ஆனால் அவர் களமிறங்கிய போது விண்ணதிர ஆரவாரம் செய்த பெங்களூரு ரசிகர்கள் அனைவரும் கையில் வைத்திருந்த மொபைல் போனில் டார்ச் லைட் அடித்து பாசத்துடன் பிரம்மாண்ட வரவேற்பு கொடுத்தனர்.

இதையும் படிங்கவீடியோ : என்னை மன்னிச்சுடுங்க, நியூஸிலாந்தை தனி ஒருவனாக மிரட்டிய பாக் வீரர் – ரசிகர்களிடம் சாரி கேட்ட நெகிழ்ச்சி

குறிப்பாக தங்களுக்கு விளையாடும் விராட் கோலியை மிஞ்சும் அளவுக்கு அந்த தருணத்தில் ரசிகர்கள் தோனிக்கு ஆதரவு கொடுத்தது அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தது. அதை பெவிலியிலிருந்து பார்த்த விராட் கோலியின் மனைவி அனுஷ்கா சர்மா அருகிலிருந்த தனது நண்பர்களிடம் “பெங்களூரு ரசிகர்கள் அவரை விரும்புகிறார்கள்” என்று சிரித்த முகத்துடன் தெரிவித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

Advertisement