வீடியோ : என்னை மன்னிச்சுடுங்க, நியூஸிலாந்தை தனி ஒருவனாக மிரட்டிய பாக் வீரர் – ரசிகர்களிடம் சாரி கேட்ட நெகிழ்ச்சி

PAK vs NZ Iftikhar Ahmed
- Advertisement -

நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்ற பாகிஸ்தான் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. அந்த நிலைமையில் இத்தொடரை வெல்ல ஏப்ரல் 17ஆம் தேதி நிச்சயம் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் கஃடாபி மைதானத்தில் துவங்கிய 3வது போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பேட்டிங் செய்து 20 ஓவரில் 163/5 ரன்கள் எடுத்தது. அந்த அணிக்கு பௌஸ் 7, வில் எங் 17, ஜிம்மி நீசம் 10 என முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றினாலும் அதிகபட்சமாக கேப்டன் டாம் லாதம் 64 (49) ரன்களும் டார்ல் மிட்சேல் 33 (26) ரன்களும் எடுத்தனர்.

பாகிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக ஷாஹீன் அப்ரிடி மற்றும் ஹாரிஸ் ரவூப் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர். அதைத்தொடர்ந்து 164 ரன்களை துரத்திய பாகிஸ்தானுக்கு முகமது ரிஸ்வான் 6 (10), கேப்டன் பாபர் அசாம் 1 (6) என தொடக்க வீரர்கள் தடவலாக செயல்பட்டு ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். போதாக்குறைக்கு பக்கார் ஜமான் 17 (22) சாய்ம் ஆயுப் 10 (10) சடாப் கான் 16 (19) இமாத் வாசிம் 3 (5) என முக்கிய மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களும் நியூசிலாந்தின் தரமான பந்து வீச்சுக்கு ஈடு கொடுக்க முடியாமல் சொற்ப ரன்களில் அவுட்டாகி பெரிய பின்னடைவை ஏற்படுத்தினர்.

- Advertisement -

ரசிகர்களிடம் மன்னிப்பு:
அதனால் 88/7 என ஆரம்பத்திலேயே சரிந்த பாகிஸ்தானின் தோல்வியும் உறுதியான போது 8வது இடத்தில் களமிறங்கிய இப்திகார் அகமது யாருமே எதிர்பாராத வகையில் அதிரடியாக விளையாடி நியூசிலாந்து பவுலர்களை தெறிக்க விட்டு அரை சதமடித்து போராடினார். அவருக்கு கை கொடுத்த ஃபகீம் அஷ்ரப் 2 பவுண்டரி 2 சிக்சருடன் 27 (14) ரன்கள் குவித்து 8வது விக்கெட்டுக்கு 61 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து கடைசி நேரத்தில் ஆட்டமிழந்தார்.

ஆனாலும் மறுபுறம் இப்திகார் அகமது தொடர்ந்து அதிரடியாக போராடியதால் கடைசி ஓவரில் பாகிஸ்தானின் வெற்றிக்கு 2 விக்கெட்கள் மட்டுமே கையிருப்பு இருந்த நிலையில் 15 ரன்கள் தேவைப்பட்டது. ஜிம்மி நீசம் வீசிய அந்த கடைசி ஓவரில் முதல் பந்தில் சிக்சர் பறக்க விட்ட அவர் 2வது பந்தில் ரன் எடுக்க முடியாவிட்டாலும் 3வது பந்தில் பவுண்டரியை விளாசினார். ஆனால் 4வது பந்திலும் சிக்சர் அடிக்க முயற்சித்த அவர் துரதிஷ்டவசமாக 3 பவுண்டரி 6 சிக்சருடன் 60 (24) ரன்களை 250.00 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் விளாசி தனி ஒருவனாக போராடி ஆட்டமிழந்தார்.

- Advertisement -

இறுதியில் கடைசி பந்தில் 5 ரன்கள் தேவைப்பட்ட போது ஹர்ஷித் ரவூப் 0 (2) அவுட்டானதால் 20 ஓவர்களில் 159 ரன்கள் மட்டுமே எடுத்த பாகிஸ்தான் போராடி 4 ரன்கள் வித்தியாசத்தில் பரிதாபமாக தோற்றது. நியூசிலாந்து சார்பில் அதிகபட்சமாக ஜிம்மி நீசம் 3 விக்கெட்களும் ஆடம் மில்னே மற்றும் ரச்சின் ரவீந்திரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர். அதனால் திரில் வெற்றி பெற்ற நியூசிலாந்து 2 – 1* (5) என்ற என்ற கணக்கில் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்து கோப்பையை வெல்ல போராட துவங்கியுள்ளது.

இருப்பினும் 8வது இடத்தில் களமிறங்கி 250.00 ஸ்ட்ரைக் ரேட்டில் தனி ஒருவனாக போராடிய இப்திகார் அகமது பாகிஸ்தானை வெற்றி பெற வைப்பார் என்று அந்த அணியினரும் ரசிகர்களும் ஆவலுடன் காத்திருந்தனர். ஆனாலும் கடைசியில் அவுட்டானதால் பாகிஸ்தான் அணிக்கும் ரசிகர்களுக்கும் ஏமாற்றமாக அமைந்தது. அதை விட களத்தில் முழுமூச்சுடன் போராடியும் வெற்றியை பதிவு செய்ய முடியாத காரணத்தால் ஏமாற்றமடைந்த இப்திகார் அகமது போட்டியின் முடிவில் வெளிப்படையாகவே பாகிஸ்தான் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டார்.

இதையும் படிங்க:RCB vs CSK : இது ஒரு குத்தமாய்யா? வெறித்தனம் காட்டிய விராட் கோலிக்கு அம்பயர்கள் அதிரடி தண்டனை – நடந்தது என்ன

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “பாகிஸ்தானை சேர்ந்தவர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இது வெல்ல வேண்டிய போட்டி. இருப்பினும் அதற்காக எங்களுடைய முழுமூச்சையும் கொடுத்து போராடியும் தோற்று விட்டோம். ஆனாலும் எஞ்சிய போட்டிகளில் வென்று இத்தொடரை வெல்வோம்” என்று பேசியது அந்நாட்டு ரசிகர்களை நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது. இதையடுத்து இத்தொடரின் 4வது போட்டி ஏப்ரல் 20ஆம் தேதி ராவல்பிண்டி மைதானத்தில் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement