டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய வீரராக முதல் இடத்தில் விராட் கோலி வைத்திருக்கும் சாதனை பற்றி தெரியுமா? – விவரம் இதோ

Kohli
- Advertisement -

இந்திய அணிக்காக 19 வயதுக்குட்பட்டோர் அணியின் கேப்டனாக தனது வெற்றி பயணத்தை துவங்கிய விராட் கோலி கடந்த 2008-ஆம் ஆண்டு இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமாகி இதுவரை 274 ஒருநாள் போட்டிகள், 110 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 115 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். அதோடு இன்று இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்க்காக இருக்கும் அவர் சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக 500-ஆவது போட்டியில் விளையாட உள்ளார்.

Kohli

- Advertisement -

இதன்மூலம் இந்திய அணிக்காக 500-போட்டிகளில் விளையாடும் வீரராகவும் விராட் கோலி சாதனை படைக்க உள்ளார். இந்நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் படைத்திருக்கும் ஒரு தனித்துவமான சாதனையை பற்றி இந்த பதிவில் காணலாம்.

அந்த வகையில் இந்திய அணிக்காக கடந்த 2011-ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான விராத் கோலி இதுவரை 110 போட்டியில் பங்கேற்று 8,555 ரன்கள் குவித்துள்ளார். இதில் 28 சதங்களும், 29 அரை சதங்களும் அடங்கும்.

Virat Kohli

டெஸ்ட் கிரிக்கெட்டை பொருத்தவரை விராட் கோலி ஏகப்பட்ட சாதனைகளை நிகழ்த்தி இருந்தாலும் முதல் இந்திய வீரராக அவர் படைத்துள்ள சாதனை யாதனையில் : இதுவரை இந்திய அணிக்காக அதிக இரட்டை சதங்கள் அடித்த வீரர் என்ற படியலில் அவர் முதலிடத்தில் உள்ளார்.

- Advertisement -

இந்த பட்டியலில் விரேந்திர சேவாக் மற்றும் சச்சின் ஆகியோர் தங்களது டெஸ்ட் கெரியரில் தலா ஆறுமுறை இரட்டை சதம் அடித்து உள்ள வேளையில் விராட் கோலி ஏழுமுறை இரட்டை சதத்தை விளாசியுள்ளார்.

இதையும் படிங்க : காலம் மாறிடுச்சு ராசா, அங்கயே இந்தியாவ சாய்ச்ச நாங்க இனி எங்க வேணாலும் தோற்கடிப்போம் – வக்கார் யூனிஸ் விடும் சவால் என்ன?

கடந்த 2016 ஆம் ஆண்டு மூன்று இரட்டை சதங்களையும், 2017 ஆம் ஆண்டு மூன்று இரட்டை சதங்களையும், 2019 ஆம் ஆண்டு கடைசியாக ஒரு இரட்டை சதமும் அடித்து மொத்தம் ஏழு இரட்டை சதங்களுடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக இரட்டை சதம் அடித்த இந்திய வீரர் என்ற பட்டியலில் முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement