காலம் மாறிடுச்சு ராசா, அங்கயே இந்தியாவ சாய்ச்ச நாங்க இனி எங்க வேணாலும் தோற்கடிப்போம் – வக்கார் யூனிஸ் விடும் சவால் என்ன?

Waqar Younis
- Advertisement -

ஆசிய கிரிக்கெட்டின் பரம எதிரிகளான இந்தியா மற்றும் பாகிஸ்தான் கடந்த 10 வருடங்களாக எல்லை பிரச்சினை காரணமாக இருதரப்பு கிரிக்கெட் தொடர்களில் மோதுவதை தவிர்த்து விட்டு ஆசிய மற்றும் ஐசிசி உலகக் கோப்பைகளில் மட்டுமே விளையாடி வருகின்றன. அந்த வரிசையில் இந்த வருடம் 2023 ஆசிய மற்றும் 50 ஓவர் உலகக் கோப்பையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் மோதவிருப்பது அனைவரிடமும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக பெரிய சர்ச்சையாக இருந்து வந்த 2023 ஆசிய கோப்பை ஒரு வழியாக பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடத்துவதற்கு அனுமதித்துள்ள ஆசிய கவுன்சில் அதற்கான அட்டவணையும் வெளியிட்டுள்ளது.

- Advertisement -

அதில் குறைந்தது 2 முறை மோதும் என்று எதிர்பார்க்கப்படும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் அக்டோபர் மாதம் 15ஆம் தேதி அகமதாபாத் மைதானத்தில் நடைபெறும் 2023 ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பை போட்டியிலும் பலப்பரீட்சை நடத்துவதற்கு தயாராகியுள்ளது. இந்த 2 அணிகளை பொறுத்த வரை 90களில் சச்சின் அடித்தால் தான் வெல்ல முடியும் என்ற சூழ்நிலையால் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் நிறைய வெற்றிகளை பெற்றுள்ளதை இப்போதும் புள்ளி விவரங்கள் காட்டுகின்றன. ஆனாலும் 21ஆம் நூற்றாண்டில் தரமான அணியாக உருவெடுத்துள்ள இந்தியா கடந்த 20 வருடங்களில் பாகிஸ்தானை அதிகமாக தோற்கடித்து வெற்றி நடை போட்டு வருகிறது.

காலம் மாறிடுச்சு:
அந்த வரிசையில் 1992 முதல் 50 ஓவர் உலகக் கோப்பையில் இதுவரை சந்தித்த 7 போட்டிகளிலும் பாகிஸ்தானை தோற்கடித்த இந்தியா தொடர்ந்து போட்டு வரும் வெற்றி நடையை இம்முறை தங்களது சொந்த மண்ணில் நடைபெறும் 2023 உலகக்கோப்பையிலும் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் 2017 சாம்பியன்ஸ் டிராபியில் சவாலான இங்கிலாந்தில் லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற மாபெரும் இறுதிப் போட்டியில் இந்தியாவை தோற்கடித்து கோப்பையை வென்ற பாகிஸ்தான் 2021 டி20 உலகக் கோப்பையில் முதல் முறையாக சரித்திர வெற்றி பெற்றது.

INDvsPAK

மேலும் 2022 ஆசிய கோப்பையிலும் லீக் சுற்றில் தோல்வியை பரிசளித்த நடப்பு சாம்பியன் இந்தியாவை முக்கியமான சூப்பர் 4 சுற்றில் தோற்கடித்த பாகிஸ்தான் வீட்டுக்கு செல்ல முக்கிய காரணமாக இருந்தது. அந்த வகையில் தம்முடைய காலங்களில் பெரிய தொடர்களில் இந்தியாவுக்கு எதிராக தோல்விகளை சந்தித்தாலும் இப்போதைய பாகிஸ்தான் அணி அதை மாற்றி வெற்றிப் பாதையில் நடப்பதாக முன்னாள் வீரர் வக்கார் யூனிஸ் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

அதிலும் குறிப்பாக லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற 2017 சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் வென்ற பாகிஸ்தான் தற்போது இந்தியாவை அதன் சொந்த மண்ணில் மட்டுமல்லாமல் உலகில் எந்த ஒரு மைதானத்திலும் வீழ்த்தும் திறமை கொண்டிருப்பதாக அவர் வெளிப்படையாக பேசியுள்ளார். எனவே 2023 ஆசிய கோப்பையில் வெல்வதுடன் 2023 உலகக் கோப்பையில் வரலாற்றில் இந்தியாவுக்கு எதிராக சந்தித்து வரும் தொடர் தோல்விகளை நிறுத்தி பாகிஸ்தான் சரித்திரம் படைக்கும் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு.

Waqar-Younis

“அழுத்தத்தை எடுத்துக் கொள்ளாமல் மிகவும் எளிமையாக விளையாடுங்கள் என்பதே பாகிஸ்தான் அணிக்கு என்னுடைய அறிவுரையாகும். எங்களுடைய காலத்தில் இந்தியாவுக்கு எதிராக பெரிய தொடர்களில் நாங்கள் வெற்றி பெறவில்லை. ஆனால் தற்போதைய அணியில் உள்ள நமது வீரர்கள் இந்தியாவுக்கு எதிராக சமீப காலங்களில் நடைபெற்ற பெரிய தொடர்களில் வெற்றி பெற துவங்கியுள்ளனர் என்பது நல்ல அறிகுறியாகும். அந்த வகையில் வெற்றி எனும் குரங்கு தற்போது நமது பின் பக்கத்தில் வந்துள்ளது”

இதையும் படிங்க:IND vs WI : 2வது டெஸ்ட் நடைபெறும் குயின்ஸ் பார்க் மைதானம் எப்படி? பெரிய அச்சுறுத்தலை கொடுக்கும் மழை வருமா – புள்ளிவிவரம், பிட்ச் – வெதர் ரிப்போர்ட் இதோ

“எனவே நமது அணியில் தற்போதுள்ள திறமைக்கேற்றார் போல் விளையாடினால் இந்தியாவை இம்முறை ஏன் நம்மால் தோற்கடிக்க முடியாது என்பதற்காண காரணம் எனக்கு தெரியவில்லை. குறிப்பாக இலங்கையில் விளையாடினாலும் லண்டன் ஓவல் மைதானத்தில் விளையாடினாலும் நம்மால் அவர்களை நிச்சயமாக தோற்கடிக்க முடியும். ஏனெனில் அதற்கான நம்மிடம் திறமை இருக்கிறது. அதனால் பயமின்றி அழுத்தத்தை தூக்கி எறிந்து சிங்கத்தை போல் விளையாடினால் வெற்றி கிடைக்கும்” என்று கூறினார்.

Advertisement