IND vs WI : 2வது டெஸ்ட் நடைபெறும் குயின்ஸ் பார்க் மைதானம் எப்படி? பெரிய அச்சுறுத்தலை கொடுக்கும் மழை வருமா – புள்ளிவிவரம், பிட்ச் – வெதர் ரிப்போர்ட் இதோ

Queens Park Oval Trinidad Stadium Ground
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இன்னிங்ஸ் வெற்றி பெற்ற இந்தியா ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்று 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் பயணத்தை வெற்றியுடன் துவக்கியது. அந்த போட்டியில் தரவரிசையில் நம்பர் ஒன் அணியாக இருக்கும் இந்தியாவின் தரமான பந்து வீச்சுக்கு தாக்கு பிடிக்க முடியாத வெஸ்ட் இண்டீஸ் இரண்டரை நாட்களில் படுதோல்வியை சந்தித்தது. இதை தொடர்ந்து ஜூலை 20ஆம் தேதி இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு துவங்கும் இத்தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் 2வது போட்டியிலும் வென்று ஒய்ட் வாஷ் வெற்றியுடன் கோப்பையை வெல்ல இந்தியா தயாராகியுள்ளது.

மறுபுறம் குறைந்தபட்சம் சொந்த மண்ணில் ஒயிட் வாஷ் தோல்வியை தவிர்க்க வெஸ்ட் இண்டீஸ் போராட உள்ளது. அந்த வகையில் இப்போட்டி வெஸ்ட் இண்டீஸின் ட்ரினிடாட் நகரில் இருக்கும் குயின்ஸ் பார்க் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. கடந்த 1896இல் தோற்றுவிக்கப்பட்ட மிகவும் பழமையான இந்த மைதானத்தில் 1930 முதல் சர்வதேச போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

- Advertisement -

குயின்ஸ் பார்க்:
1. தற்போது 25,000 ரசிகர்கள் அமரும் வகையில் நவீன வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்டுள்ள இந்த மைதானத்தில் வரலாற்றில் மொத்தம் 61 டெஸ்ட் போட்டிகள் நடைபெற்றுள்ளன. அதில் வெஸ்ட் இண்டீஸ் 20 போட்டிகளில் வென்று வலுவாக செயல்பட்டு வரும் நிலையில் வெளிநாட்டு அணிகள் 18 போட்டிகளிலும் வென்றுள்ளன. 23 போட்டிகள் ட்ராவில் முடிந்தன.

2. இம்மைதானத்தில் வரலாற்றில் 13 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள இந்தியா 3 வெற்றிகளை பெற்றுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் 3 வெற்றிகளை பெற்றுள்ளது. 7 போட்டிகள் டிராவில் முடிந்தன.

- Advertisement -

3. இங்கு அதிக ரன்கள் (793) அடித்த இந்திய வீரராகவும் அதிக சதங்கள் அடித்த (4) இந்திய வீரராகவும் ஜாம்பவான் சுனில் காவாஸ்கர் சாதனை படைத்துள்ளார். மேலும் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த வீரராக ஆல் டைம் சாதனையையும் கவாஸ்கர் படைத்துள்ளார். 220, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக, 1971.

gavaskar 1

4. இம்மைதானத்தில் அதிக டெஸ்ட் விக்கெட்டுகளை எடுத்த இந்திய வீரர்களாக பிஷன் சிங் பேடி மற்றும் ஸ்ரீனிவாசன் வெங்கட்ரராகவன் ஆகியோர் தலா 19 விக்கெட்டுகளுடன் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர். இந்த மைதானத்தில் ஒரு இன்னிங்சில் அதிக முறை 5 விக்கெட் ஹால் (2) எடுத்து சிறந்த பந்து வீச்சை (7/164) பதிவு செய்த இந்தியராக சுபாஷ் குப்தே சாதனை படைத்துள்ளார்.

- Advertisement -

வெதர் ரிப்போர்ட்:
இப்போட்டி நடைபெறும் ட்ரினிடாட் நகரில் 5 நாட்களும் பல்வேறு வகைகளில் மழை செய்வதற்கான வாய்ப்புள்ளதாக அங்குள்ள வானிலை மையம் தெரிவிக்கிறது. குறிப்பாக முதல் நாளில் துவங்கி 4வது நாள் வரை உள்ளூர் நேரப்படி காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை சராசரியாக 30 – 50% மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது காலை மற்றும் மாலை வேலை தவிர்த்து மதிய நேரங்களில் மழை வந்து அவ்வப்போது போட்டியை நிறுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. போதாக்குறைக்கு அருகிலேயே மலை இருப்பதால் எப்போது வேண்டுமானாலும் சாரல் மழை வரலாம் என்றே சொல்லலாம். இருப்பினும் கடைசி நாளில் மட்டும் மழை பெய்வதற்கு மிகவும் குறைவான வாய்ப்புள்ளதால் தடைகளுக்கு மத்தியில் இந்த போட்டியின் முடிவு கிடைக்கும் என்று உறுதியாக நம்பலாம்.

- Advertisement -

பிட்ச் ரிப்போர்ட்:
குயின்ஸ் பார்க் மைதானத்தில் மேற்குறிப்பிட்டது போல் மழை பெயுவதற்கான வாய்ப்புகள் இருப்பதால் அதை பயன்படுத்தி ஸ்விங் செய்யும் வேகப்பந்து வீச்சாளர்கள் முதல் 2 – 3 நாட்கள் சவாலை கொடுத்து விக்கெட்டுகளை எடுப்பார்கள். அதற்கு நிகராக நிலைத்து நின்று சூழ்நிலைகளை புரிந்து வேகம், பவுன்ஸ், ஸ்விங் போன்றவற்றைக் கணித்து விளையாடினால் பேட்ஸ்மேன்களும் பெரிய ரன்களை குவிக்க முடியும்.

ஆனால் கடைசி 2 நாட்களில் ஸ்பின்னர்கள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வழக்கம் போல வெற்றியை தீர்மானிக்கக் கூடியவர்களாக இருப்பார்கள். மேலும் இங்கு வரலாற்றில் நடந்த போட்டிகளின் அடிப்படையில் 302, 314, 262, 168 என்பது சராசரி 4 இன்னிங்ஸ்களின் ஸ்கோராகும். எனவே இங்கு கடைசி இன்னிங்ஸில் சேசிங் செய்வது கடினம் என்ற நிலையில் வரலாற்றில் இதுவரை முதலில் பேட்டிங் செய்த அணிகள் 20 வெற்றிகளையும் 2வதாக பேட்டிங் செய்த அணிகள் 18 வெற்றிகளும் பெற்றுள்ளன.

இதையும் படிங்க:அவரு பானி பூரியும் விக்கல. இது அவங்க அப்பாவும் இல்ல. வதந்திகளை பரப்பாதீங்க ப்ளீஸ் – ஜெய்ஸ்வாலின் கோச் ஜ்வாலா சிங் பேட்டி

அதனால் அனைத்திற்கும் சாதகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படும் இந்த பிட்ச்சில் மழையையும் கருத்தில் கொண்டு டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பேட்டிங் செய்தால் வெற்றி கிடைக்கலாம்.

Advertisement