கேப்டனா இல்லனாலும் கிங்கு தான்.. முக்கிய பேட்ஸ்மேனை சிராஜ் அவுட்டாக்க.. விராட் கோலி போட்ட ஸ்கெட்ச்

Virat Kohli Siraj
- Advertisement -

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்று வரும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் தோல்வியை சந்தித்தது. அதனால் அந்நாட்டில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை வெல்லும் வாய்ப்பை இழந்த இந்தியா ஜனவரி 3ஆம் தேதி கேப் டவுன் நகரில் துவங்கிய 2வது போட்டியில் வென்று குறைந்தபட்சம் ஒய்ட் வாஷ் தோல்வியை தவிர்க்கும் முனைப்புடன் களமிறங்கியது.

அந்த நிலையில் அப்போட்டியில் டாஸ் அதிர்ஷ்டத்தை பெற்ற தென்னாபிரிக்கா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. ஆனால் ஆரம்பத்திலிருந்தே அனல் பறக்க பந்து வீசிய இந்திய வேகப்பந்து வீச்சாளர்களுக்கு தாக்குப் பிடிக்க முடியாத அந்த அணி சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்து வெறும் 55 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

- Advertisement -

கிங் கோலியின் ஸ்கெட்ச்:
அந்த அணிக்கு கடைசி போட்டியில் கேப்டனாக விளையாடும் டீன் ஏல்கர், ஐடன் மார்க்ரம் உட்பட அனைத்து முக்கிய வீரர்களும் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டான நிலையில் அதிகபட்சமாக கெய்ல் வேர்ரின் 15 ரன்கள் எடுத்தார். மறுபுறம் அனலாக பந்து வீசிய இந்தியா சார்பில் முகமது சிராஜ் 6 விக்கெட்டுகளையும் ஜஸ்ப்ரித் உம்ரா மற்றும் முகேஷ் குமார் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் எடுத்தனர்.

அதில் 9 ஓவரில் 3 மெய்டன் ஓவர்களை வீசிய முகமது சிராஜ் வெறும் 15 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்டுகளை எடுத்து டெஸ்ட் கிரிக்கெட்டில் தன்னுடைய சிறந்த பந்து வீச்சை பதிவு செய்தார். அந்த வகையில் எடுத்த 6 விக்கெட்டுகளில் கடந்த போட்டியில் 84* ரன்கள் குவித்து பெரிய சவாலை கொடுத்த மார்க்கோ யான்சன் விக்கெட்டை எடுப்பதற்கு முன்னாள் கேப்டன் விராட் கோலி முக்கிய திட்டத்தை வகுத்துக் கொடுத்தார் என்றே சொல்லலாம்.

- Advertisement -

அதாவது முகமது சிராஜ் வீசிய 16வது ஓவரை எதிர்கொண்ட மார்க்கோ யான்சன் முதல் 4 பந்துகளில் மிகவும் தடுமாற்றமாக செயல்பட்டதை முதல் ஸ்லிப் பகுதியில் நின்று விராட் கோலி கவனித்தார். அதனால் அடுத்த பந்தை பேட்ஸ்மேனிடமிருந்து சற்று வெளியே பேட்டில் உரசிக்கொண்டு வரும் அளவுக்கு வீசுமாறு சைகை செய்து மிகவும் சத்தமாக மார்கோ யான்சனுக்கு புரியாத வகையில் விராட் கோலி ஹிந்தியில் சிராஜிடம் கூறினார்.

இதையும் படிங்க: மிரட்டிய சிராஜ்.. 135 வருடம் கழித்து ஓடவிட்ட இந்தியா மாஸ் சாதனை.. தெ.ஆ மோசமான உலக சாதனை

அதைத்தொடர்ந்து விராட் கோலி சொன்னது போலவே முகமது சிராஜ் வீசியதை தவறாக கணித்த மார்க்கோ யான்சன் எட்ஜ் கொடுத்து அவுட்டாகி சென்றது ரசிகர்களுக்கு வியப்பை ஏற்படுத்தியது. 2014 – 2021 வரையிலான காலகட்டங்களில் இப்படி அபாரமாக கேப்டன்ஷிப் செய்து இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக வெற்றிகளை பதிவு செய்த கேப்டனாக விராட் கோலி சாதனை படைத்துள்ளார். அந்த வகையில் தற்போது கேப்டனாக இல்லாமல் போனாலும் அணியின் நலனுக்காக தன்னுடைய அனுபவத்தை காண்பித்த விராட் கோலியை எப்போவும் நீங்கள் கிங்கு தான் என ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

Advertisement