மிரட்டிய சிராஜ்.. 135 வருடம் கழித்து ஓடவிட்ட இந்தியா மாஸ் சாதனை.. தெ.ஆ மோசமான உலக சாதனை

IND vs RSA Capte Town
- Advertisement -

தென்னாபிரிக்கா மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகள் மோதிய 2வது டெஸ்ட் போட்டி ஜனவரி 3ஆம் தேதி கேப் டவுன் நகரில் துவங்கியது. அதில் ஏற்கனவே முதல் போட்டியில் இன்னிங்ஸ் தோல்வியை சந்தித்த இந்தியா தொடரை சமன் செய்ய வென்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கியது. அந்த நிலையில் இந்திய நேரப்படி மதியம் 1.30 மணிக்கு துவங்கிய அப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

இந்திய அணியில் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் சர்துள் தாக்கூர் ஆகியோருக்கு பதிலாக ரவீந்திர ஜடேஜா மற்றும் முகேஷ் குமார் ஆகியோர் தேர்வானார்கள். அதை தொடர்ந்து பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்காவுக்கு ஐடன் மார்க்ரமை 2 ரன்களில் அவுட்டாக்கிய முகமது சிராஜ் கடந்த போட்டியில் 185 ரன்கள் அடித்து தோல்வியை கொடுத்த கேப்டன் டீன் எல்கரை 4 ரன்களில் போல்டாக்கினார்.

- Advertisement -

மாஸ் சாதனை:
அடுத்து வந்த ட்ரிஷன் ஸ்டப்ஸ் 3 ரன்களில் பும்ரா வேகத்தில் பெவிலியின் திரும்பியதால் 15/4 என சரிந்த தென்னாப்பிரிக்கா மோசமான துவக்கத்தை பெற்றது. அப்போது நிதானமாக விளையாடி காப்பாற்ற முயற்சித்த டேவிட் பேடீங்கம் 12, கெயில் வேரின் 15 ரன்களில் மீண்டும் சிராஜ் வேகத்துக்கு தாக்கு பிடிக்க முடியாமல் அவுட்டானார்கள்.

அடுத்து வந்த வீரர்களும் இந்திய பவுலர்களின் அனல் பறந்த வேகப்பந்து வீச்சுக்கு பதில் சொல்ல முடியாமல் வந்த வாக்கிலேயே திரும்பியதால் தென் ஆப்பிரிக்கா முதல் நாள் உணவு இடைவெளிக்குள் முதல் இன்னிங்ஸில் வெறும் 55 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் தென்னாபிரிக்கா தங்களின் சொந்த மண்ணில் க்டந்த 135 வருடங்களில் மிகவும் குறைந்தபட்ச ஸ்கோரை பதிவு செய்து மோசமான சாதனை படைத்துள்ளது. இதற்கு முன் கடந்த 1889ஆம் ஆண்டு இதே கேப் டவுனில் இங்கிலாந்துக்கு எதிராக 47 ரன்களுக்கு ஆல் அவுட்டானதே முந்தைய சாதனையாகும்.

- Advertisement -

அது மட்டுமில்லாமல் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு எதிராக குறைந்தபட்ச ஸ்கோர் பதிவு செய்த அணி என்ற மோசமான உலக சாதனையையும் தென்னாப்பிரிக்கா படைத்துள்ளது. இதற்கு முன் 2021இல் வான்கடே மைதானத்தில் இந்தியாவுக்கு எதிராக நியூசிலாந்து 62 ரன்களுக்கு சுருண்டதே முந்தைய சாதனையாகும். அப்படி இத்தனை மோசமான சாதனைகளையும் தென்னாப்பிரிக்கா படைப்பதற்கு முக்கிய காரணமாக முகமது சிராஜ் 6 விக்கெட்களை எடுத்து நெருப்பாக செயல்பட்டார். அவருடன் பும்ரா, முகேஷ் குமார் ஆகியோரும் தலா 2 விக்கெட்டுகள் எடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: டி20 உலககோப்பைக்கு தயாராகும் வகையில் ரோஹித் சர்மாவிற்கு கிடைத்துள்ள வாய்ப்பு – அதுவும் வேறலெவல் கம்பேக்

மறுபுறம் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடுவதற்கு தடை பெற்று மீண்டு வந்த 1992க்குப்பின் டெஸ்ட் கிரிக்கெட்டில் தென்னாபிரிக்காவை குறைந்தபட்ச ஸ்கோருக்கு ஆல் அவுட் செய்த அணி என்ற மாஸ் சாதனையை இந்தியா படைத்துள்ளது. கடைசியாக கடந்த 2018ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவை 78 ரன்களுக்கு இலங்கை சுருட்டியதே முந்தைய சாதனையாகும்.

Advertisement