டி20 உலககோப்பைக்கு தயாராகும் வகையில் ரோஹித் சர்மாவிற்கு கிடைத்துள்ள வாய்ப்பு – அதுவும் வேறலெவல் கம்பேக்

Rohit
- Advertisement -

கடந்த 2022-ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற்ற டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதி சுற்றோடு இந்திய அணி வெளியேறியது. அதையடுத்து இந்திய அணியின் அனுபவ வீரர்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் அடுத்தடுத்து நடைபெற்ற டி20 தொடர்களில் விளையாடாமல் ஓய்வு எடுத்துக் கொண்டனர். மேலும் கடந்த ஓராண்டாகவே எவ்வித டி20 போட்டிகளிலும் அவர்கள் இருவரும் பங்கேற்கவில்லை.

இதன்காரணமாக அவர்கள் இருவரும் எதிர்வரும் 2024-ஆம் ஆண்டிற்கான டி20 உலக கோப்பை தொடரில் விளையாடுவார்களா? என்ற சந்தேகமும் எழுந்தது. ஆனால் பிசிசிஐ இதுகுறித்து அண்மையில் நடத்திய மீட்டிங்கில் : ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகிய இருவருமே எதிர்வரும் டி20 உலக கோப்பையில் விளையாட தயாராக இருப்பதாக விருப்பம் தெரிவித்துள்ளதனர்.

- Advertisement -

இதன் காரணமாக நிச்சயம் அவர்கள் இந்த டி20 உலக கோப்பை தொடர்கான இந்திய அணியில் சேர்க்கப்படுவார்களா? என்பதே பலரது கேள்வியாகவும் இருந்து வந்தது. இந்நிலையில் தென்னாப்ரிக்க நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியானது கடைசி டெஸ்ட் போட்டியை முடித்துக்கொண்டு நாடு திரும்ப இருக்கிறது.

இவ்வேளையில் ஜனவரி 11, 14 மற்றும் 17 ஆகிய தேதிகளில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக இந்திய அணி விளையாட இருக்கிறது. இந்த தொடருக்கான இந்திய அணியில் ஹார்டிக் பாண்டியா, சூரியகுமார் யாதவ் ஆகியோர் காயம் காரணமாக விலகியுள்ளனர்.

- Advertisement -

அதனால் இந்திய அணிக்கு யார் புதிய கேப்டனாக நியமிக்கப்படுவார்கள்? என்ற கேள்வி எழுந்துள்ளது. அதேபோன்று பும்ராவிற்கும், கே.எல் ராகுலுக்கு இந்த தொடரில் ஓய்வு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் மீண்டும் இந்திய அணிக்கு திரும்ப இருக்கும் ரோகித் சர்மா கேப்டனாகவே கம்பேக் கொடுக்க உள்ளார் என்று தெரிகிறது. அதோடு எதிர்வரும் டி20 உலக கோப்பை தொடரிலும் அவரே கேப்டனாக செயல்பட விருப்பம் தெரிவித்துள்ளதால் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான தொடரில் கேப்டனாக செயல்படும் வாய்ப்பு ரோகித் சர்மாவுக்கே வழங்கப்படும் என்று தெரிகிறது.

இதையும் படிங்க : தெ.ஆ 15/4.. தெறிக்க விடும் சிராஜ்.. கட்டம் கட்டி தூக்கிய ரோஹித்.. மிரட்டும் இந்திய அணி

அப்படி ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான தொடரில் அவர் கேப்டனாக செயல்பட்டால் டி20 உலகக்கோப்பை தொடரிலும் அவரே கேப்டனாக செயல்பட வாய்ப்பு இருப்பதாகவும், ரோகித் சர்மா உலக கோப்பைக்காக தயாராக இந்த தொடர் அவருக்கு போதுமானதாக இருக்கும் என்றும் பி.சி.சி.ஐ தரப்பிலிருந்து வெளியாகிய தகவல்கள் குறிப்பிடுகிறது.

Advertisement