தெ.ஆ 15/4.. தெறிக்க விடும் சிராஜ்.. கட்டம் கட்டி தூக்கிய ரோஹித்.. மிரட்டும் இந்திய அணி

IND vs RSA 2nd Test 4
- Advertisement -

தென் ஆப்பிரிக்கா மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகள் மோதிய 2வது டெஸ்ட் போட்டி ஜனவரி 3ஆம் தேதி கேப் டவுன் நகரில் துவங்கியது. முதல் போட்டியில் இன்னிங்ஸ் தோல்வியை சந்தித்து தென் ஆப்பிரிக்காவில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை வெல்லும் வாய்ப்பை ஏற்கனவே நழுவ விட்ட இந்தியா குறைந்தபட்சம் இத்தொடரை சமன் செய்வதற்கு இப்போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கியது.

அந்த நிலைமையில் துவங்கிய போட்டியில் டாஸ் வென்ற தென்னாபிரிக்கா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. இந்திய அணியில் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் சர்துல் தாகூர் ஆகியோருக்கு பதிலாக முகேஷ் குமார் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் விளையாடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது.

- Advertisement -

மிரட்டிய சிராஜ்:
அதைத் தொடர்ந்து களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணிக்கு 4வது ஓவரில் ஐடன் மார்க்ரமை 2 ரன்களில் அவுட்டாக்கிய முகமது சிராஜ் கடந்த போட்டியில் 185 ரன்கள் குவித்து தோல்வியை கொடுத்த கேப்டன் டீன் எல்கரை இன்சைட் எட்ஜ் முறையில் 4 ரன்களில் போல்ட்டாக்கி தெறிக்க விட்டார். இப்போட்டியுடன் ஓய்வு பெறும் அவரை இம்முறை பெரிய ரன்கள் அடிக்க விடாமல் முகமது சிராஜ் ஆரம்பத்திலேயே பெவிலியன் அனுப்பியது இந்திய ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்தது.

அந்த நிலைமையில் தன்னுடைய அறிமுக போட்டியில் களமிறங்கிய ட்ரிஷன் ஸ்டப்ஸ் நிதானமாக விளையாடி சவாலை கொடுத்தார். ஆனால் அப்போது ஷார்ட் லெக் பகுதியில் சென்று ஹெல்மெட் போட்டுக்கொண்டு நின்ற கேப்டன் ரோகித் சர்மா அதற்கு தகுந்தாற்போல் பும்ராவை லெஃக் சைட் திசையில் வீசுமாறு கேட்டுக்கொண்டார்.

- Advertisement -

அதை பும்ரா கச்சிதமாக செயல்படுத்திய வலையில் சிக்கிய ஸ்டப்ஸ் 3 ரன்களில் கேப்டன் ரோகித் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். அந்த வகையில் ரோகித் சர்மா திட்டம் போட்டு அவரை அவுட் செய்து தன்னுடைய கேப்டன்ஷிப் மீதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்தார். அதை தொடர்ந்து மறுபுறம் சவாலை கொடுக்க முயற்சித்த டோனி டீ ஜோர்சியை 2 ரன்களில் மீண்டும் முகமது சிராஜ் அவுட்டாக்கி மிரட்டினார்.

இதையும் படிங்க: டி20ல வெறித்தனம் காட்டும் அவருக்கு.. அதுல ஒன்னுமே தெரியாது.. இந்திய வீரருக்கு நாசர் ஹுசைன் பாராட்டு

அதனால் 15/4 என்ற மோசமான துவக்கத்தை பெற்ற தென்னாபிரிக்கா அதிலிருந்து மீண்டு வருவதற்காக தற்போது கடுமையாக போராடி வருகிறது. அந்த அணிக்கு களத்தில் வெரின் மற்றும் பேடிங்கம் ஆகிய இளம் வீரர்கள் போராடி வருகிறார்கள். எனவே முதல் போட்டியில் படுதோல்வியை பரிசளித்த தென்னாப்பிரிக்காவை இம்முறை விடாமல் விரைவில் ஆல் அவுட் செய்யும் முனைப்புடன் தொடர்ந்து இந்திய பவுலர்கள் பந்து வீசி வருகிறார்கள்.

Advertisement