டி20ல வெறித்தனம் காட்டும் அவருக்கு.. அதுல ஒன்னுமே தெரியாது.. இந்திய வீரருக்கு நாசர் ஹுசைன் பாராட்டு

Nasser Hussain 3
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டில் நிறைவு பெற்ற 2023 காலண்டர் வருடத்தில் டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் உலகக் கோப்பையை வெல்லா விட்டாலும் இந்திய கிரிக்கெட் அணிக்காக நிறைய வீரர்கள் சிறப்பாக விளையாடி வெற்றிக்கு போராடினார்கள். அதில் உச்சகட்டமாக சுப்மன் கில் 2154 ரன்கள் குவித்து 2023 சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த வீரராக உலக சாதனை படைத்தார்.

அவருக்கு நிகராக 2023 உலகக் கோப்பையில் மட்டும் 765 ரன்கள் குவித்து சச்சினை முந்தி உலக சாதனை படைத்த விராட் கோலி மொத்தம் 2048 ரன்கள் குவித்து அசத்தினார். அப்படி அசத்தலாக செயல்பட்ட இந்திய பேட்ஸ்மேன்களில் சூரியகுமார் யாதவ் டி20 கிரிக்கெட்டில் அந்நியனாகவும் ஒருநாள் கிரிக்கெட்டில் அம்பியாகவும் செயல்பட்டார் என்றால் மிகையாகாது.

- Advertisement -

டி20யில் வெறித்தனம்:
ஏனெனில் டி20 கிரிக்கெட்டில் விசாகப்பட்டினத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 80 ரன்கள் அடித்து வெற்றி பெற வைத்த அவர் ஜோஹன்ஸ்பர்க் நகரில் தென்னாபிரிக்காவுக்கு எதிராக சதமடித்து கேப்டனாக இந்தியாவை வெற்றி பெற வைத்தார். அந்த வகையில் டி20 கிரிக்கெட்டில் உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேன் என்பதற்கு அடையாளமாக அசத்திய அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் ஹாட்ரிக் கோல்டன் டக் அவுட்டாகி மோசமான சாதனை படைத்தார்.

அதை விட 2023 உலகக் கோப்பை ஃபைனலில் சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் தோல்விக்கு காரணமாக அமைந்ததால் ஒருநாள் கிரிக்கெட்டுக்கு செட்டாக மாட்டார் என்று ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் டி20 கிரிக்கெட்டில் வெறித்தனமாக விளையாடும் சூரியகுமார் யாதவுக்கு ஒருநாள் கிரிக்கெட்டில் என்ன செய்ய வேண்டும் என்று தெரியாமல் தவிப்பதாக முன்னாள் இங்கிலாந்து கேப்டன் நாசர் ஹுசைன் வேடிக்கையான பாராட்டை கொடுத்துள்ளார்.

- Advertisement -

2024இல் டி20 கிரிக்கெட்டில் அசத்தப் போகும் வீரர் யார் என்று ஐசிசி இணையத்தில் பேசும் போது அவர் சூர்யாகுமார் பற்றி தெரிவித்தது பின்வருமாறு. “இந்த உலகிலேயே டி20 கிரிக்கெட்டில் தற்போது பார்க்கப்பட வேண்டிய வீரர் சூரியகுமார் யாதவ். டி20 கிரிக்கெட்டில் அவர் வெறித்தனமானவர். மிஸ்டர் 360 டிகிரி என்பதை தாண்டி அவர் விளையாடும் சில ஷாட்டுகள் வெறித்தனமாக இருக்கிறது”

இதையும் படிங்க: 2024 புத்தாண்டின் முதல் போட்டியிலேயே.. 146 வருடத்தில் நிகழாத விசித்திர சாதனையை செய்த பாகிஸ்தான்

“இருப்பினும் ஒருநாள் கிரிக்கெட்டில் அவருக்கு எப்போது அடிக்க வேண்டும், எப்போது அதிரடியாக அடிக்கக்கூடாது, என்ன செய்ய வேண்டும் என்பது தெரியவில்லை. ஆனால் டி20 கிரிக்கெட்டில் ஒவ்வொரு முறையும் அவர் வேடிக்கையாக விளையாடுகிறார். டி20 கிரிக்கெட்டில் சூரியகுமார் விளையாடுவதை பார்ப்பது மிகவும் வேடிக்கையானதாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கும்” என்று கூறினார்.

Advertisement