2024 புத்தாண்டின் முதல் போட்டியிலேயே.. 146 வருடத்தில் நிகழாத விசித்திர சாதனையை செய்த பாகிஸ்தான்

PAK Duck Outs
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்த பாகிஸ்தான் ஆரம்பத்திலேயே தொடரை வெல்லும் வாய்ப்பை கோட்டை விட்டது. குறிப்பாக 1998க்குப்பின் கடந்த 28 வருடமாக தொடர்ந்து 16வது போட்டியில் ஆஸ்திரேலிய மண்ணில் தோல்வியை சந்தித்தது பாகிஸ்தான் ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது.

இதைத் தொடர்ந்து குறைந்தபட்சம் ஒயிட் வாஷ் தோல்வியை தவிர்க்க ஜனவரி 3ஆம் தேதி சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் துவங்கிய 3வது மற்றும் கடைசி போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் பாகிஸ்தான் களமிறங்கியது. அப்போட்டியில் டாஸ் அதிர்ஷ்டத்தை பெற்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து கடுமையாக போராடி முதல் இன்னிங்ஸில் 313 ரன்கள் சேர்த்து ஆல் அவுட்டானது.

- Advertisement -

விசித்திர சாதனை:
அந்த அணிக்கு அதிகபட்சமாக முகமது ரிஸ்வான் 88 ரன்கள் 82 ரன்கள் எடுக்க ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக கேப்டன் பட் கமின்ஸ் 5 விக்கெட்டுகள் எடுத்தார். அதைத் தொடர்ந்து விளையாடும் ஆஸ்திரேலியா முதல் நாள் முடிவில் 6/0 ரன்கள் எடுத்துள்ளது. களத்தில் தனது கடைசி போட்டியில் விளையாடும் டேவிட் வார்னர் 6*, கவாஜா ரன்களுடன் உள்ளனர். முன்னதாக கோலாகலமாக துவங்கியுள்ள 2024 புத்தாண்டில் ஒட்டுமொத்த உலகிலேயே இந்த போட்டி தான் முதல் சர்வதேச போட்டியாக நடைபெறுகிறது.

அந்த வகையில் புத்துணர்ச்சியுடன் துவங்கிய 2024 புத்தாண்டில் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற்ற இந்த முதல் போட்டியில் முதலாவதாக பேட்டிங் செய்த பாகிஸ்தானுக்கு மிட்சேல் ஸ்டார்க் வீசிய முதல் ஓவரின் 2வது பந்திலேயே துவக்க வீரர் அப்துல்லா சபிக் கேட்ச் கொடுத்து டக் அவுட்டானார். அடுத்த ஓவரின் 2வது பந்திலேயே ஜோஸ் ஹேசல்வுட் வேகத்துக்கு தாக்கு பிடிக்க முடியாத மற்றொரு துவக்க வீரர் சாய்ம் ஆயுப்பும் கேட்ச் கொடுத்து டக் அவுட்டாகி சென்றார்.

- Advertisement -

இப்படி ஒரு வருடத்தின் முதல் டெஸ்ட் போட்டியிலேயே ஒரு அணியின் துவக்க வீரர்கள் அடுத்தடுத்து டக் அவுட்டாவது இதுவே முதல் முறையாகும். இதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டின் வரலாற்றில் ஒரு காலண்டர் வருடத்தின் முதல் போட்டியிலேயே ஒரு ரன் கூட அடிக்காமல் 2 டக் அவுட்டை பதிவு செய்த முதல் அணி என்ற விசித்திரமான சாதனையை பாகிஸ்தான் படைத்துள்ளது.

இதையும் படிங்க: 2வது டெஸ்டில் அஷ்வினை கழற்றி விட்ட ரோஹித் சர்மா.. பிளேயிங் லெவனில் நிகழ்ந்த 2 மாற்றங்கள்

கடந்த 1877 முதல் நடைபெற்று வரும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இதற்கு முன் எந்த வருடத்திலும் முதல் போட்டியிலேயே இப்படி ஒரு அணி முதல் ரன் அடிப்பதற்கு முன்பாக 2 விக்கெட்டுகளை இழந்தது கிடையாது. அந்த வகையில் மோசமான சாதனை படைத்த பாகிஸ்தான் இந்த போட்டியிலாவது வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு அந்த அணி ரசிகர்களிடம் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement