2வது டெஸ்டில் அஷ்வினை கழற்றி விட்ட ரோஹித் சர்மா.. பிளேயிங் லெவனில் நிகழ்ந்த 2 மாற்றங்கள்

Rohit Sharma Ashwin
- Advertisement -

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் நடைபெறும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. அதனால் தென்னாபிரிக்காவில் முதல் முறையாக தொடரை வெல்ல வேண்டும் என்ற கனவை நிஜமாக்க தவறிய இந்தியா 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலிலும் 6வது இடத்திற்கு சரிந்தது.

எனவே அதிலிருந்து மீண்டு குறைந்தபட்சம் ஒய்ட் வாஷ் தோல்வியை தவிர்த்து தங்களை நம்பர் ஒன் அணி என்பதை நிரூபிக்க ஜனவரி 3ஆம் தேதி துவங்கிய இரண்டாவது போட்டியில் கண்டிப்பாக வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இந்தியா களமிறங்கியது. இந்திய நேரப்படி மதியம் 1.30 மணிக்கு கேப் டவுன் நகரில் துவங்கிய அந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாபிரிக்கா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

- Advertisement -

2 மாற்றங்கள்:
தம்முடைய கடைசி போட்டியில் தென்னாப்பிரிக்காவை கேப்டனாக வழி நடத்தும் டீன் எல்கர் தங்களுடைய அணியில் காயத்தை சந்தித்த ஜெரால்ட் கோட்சிக்கு பதிலாக லுங்கி நிகிடி விளையாடுவார் என்று அறிவித்துள்ளார். இந்திய அணியில் நிறைய எதிர்பார்ப்புக்கு மத்தியில் தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் அதிரடியாக நீக்கப்பட்டார்.

குறிப்பாக கடந்த போட்டியில் காயமடைந்த ரவீந்திர ஜடேஜாவுக்கு பதிலாக கடைசி நேரத்தில் வாய்ப்பு பெற்ற அவர் 1 விக்கெட் மட்டுமே எடுத்து பேட்டிங்கிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த தவறினார். அதன் காரணமாக இப்போட்டியில் நீக்கப்பட்டுள்ள அவருக்கு பதிலாக காயத்திலிருந்து குணமடைந்துள்ள ரவீந்திர ஜடேஜா விளையாடுவார் என்று கேப்டன் ரோகித் சர்மா அறிவித்துள்ளார்.

- Advertisement -

அதை விட முதல் போட்டியில் பொறுப்புடன் செயல்பட வேண்டிய அனுபவம் மிகுந்த சர்துல் தாக்கூர் ரன்களை வாரி வழங்கி தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தர். அதனால் எதிர்பார்த்ததை போலவே இந்த போட்டியில் அவரையும் நீக்கியுள்ள ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி நிர்வாகம் மற்றொரு இளம் வீரர் முகேஷ் குமாருக்கு கொடுத்துள்ளது.

இதையும் படிங்க: 96/5 என சரிந்த பாகிஸ்தானை.. 9 ஃபோர்ஸ் 4 சிக்ஸருடன்.. 9வதாக வந்து ஆஸியை பொளந்து தூக்கிய டெயில் எண்டர்

மேலும் முதல் போட்டியில் அறிமுகமாக களமிறங்கி ரன்களை வாரி வழங்கி சுமாராக செயல்பட்ட பிரசித் கிருஷ்ணாவுக்கு மீண்டும் 2வது முறையாக நம்பி இந்த போட்டியில் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. மற்ற படி பேட்டிங்கில் சொதப்பிய சுப்மன் கில் போன்ற எஞ்சிய அனைத்து வீரர்களுக்கும் இந்த போட்டியில் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

Advertisement