96/5 என சரிந்த பாகிஸ்தானை.. 9 ஃபோர்ஸ் 4 சிக்ஸருடன்.. 9வதாக வந்து ஆஸியை பொளந்து தூக்கிய டெயில் எண்டர்

AUS vs PAK Amer Jamal
- Advertisement -

ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் மோதும் 3வது டெஸ்ட் போட்டி ஜனவரி 3ஆம் தேதி சிட்னி நகரில் துவங்கியது. அதில் முதலிரண்டு போட்டிகளில் ஏற்கனவே வென்று ஆரம்பத்திலேயே கோப்பையை கைப்பற்றிய ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒயிட் வாஷ் தோல்வியை தவிர்க்க நிச்சயம் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கிய பாகிஸ்தான் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

அதைத் தொடர்ந்து களமிறங்கிய பாகிஸ்தானுக்கு அப்துல்லா ஷபிக், சாய்ம் ஆயுப் என துவக்க வீரர்கள் ஆரம்பத்திலேயே டக் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். போதாக்குறைக்கு பாபர் அசாம் 26, சௌத் ஷாக்கீல் 26, கேப்டன் ஷான் மசூட் 35 என அடுத்ததாக வந்த முக்கிய பேட்ஸ்மேன்களும் ஆஸ்திரேலியாவின் தரமான பந்து வீச்சில் சொற்ப ரன்களில் அவுட்டாகி பெரிய ஏமாற்றத்தை கொடுத்தனர்.

- Advertisement -

அதிரடி டெயில் எண்டர்:
அதனால் 96/5 என பெரிய வீழ்ச்சியை சந்தித்த பாகிஸ்தான் 200 ரன்களை தாண்டாத என்று எதிர்பார்க்கப்பட்ட போது அடுத்ததாக ஜோடி சேர்ந்த முகமது ரிஸ்வான் மற்றும் ஆகா சல்மான் ஆகியோர் சரிவை சரி செய்ய போராடினார்கள். அந்த வகையில் 6வது விக்கெட்டுக்கு 94 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த இந்த ஜோடியில் முகமது ரிஸ்வான் 10 பவுண்டரி 2 சிக்சருடன் 88 (103) ரன்களும் ஆகா சல்மான் 53 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

இருப்பினும் அடுத்ததாக வந்த சஜித் கான் 15, ஹசன் அலி 0 ரன்களில் அவுட்டானதால் 227/9 என தடுமாறிய பாகிஸ்தான் கண்டிப்பாக 250 ரன்கள் தாண்டாது என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்போது எதிர்புறம் 9வதாக களமிறங்கியிருந்த இளம் வீரர் அமீர் ஜமால் அதிரடியாக விளையாடி ஆஸ்திரேலியாவுக்கு சவாலை கொடுத்தார். அவருக்கு 11வது இடத்தில் களமிறங்கிய மிர் ஹம்சா சிங்கிள் எடுத்து கை கொடுத்தார்.

- Advertisement -

அதை பயன்படுத்திய ஜமால் உண்மையாகவே தரமான ஆஸ்திரேலியா பவுலர்களை அசால்டாக எதிர்கொண்டு பாராட்ட தகுந்த பேட்டிங்கை வெளிப்படுத்தி 9 பவுண்டரி 4 சிக்ஸருடன் 82 (97) ரன்கள் குவித்து பாகிஸ்தானை ஓரளவு காப்பாற்றி அவுட்டானார். குறிப்பாக நேதன் லயன் பந்தில் ரிவர்ஸ் ஸ்வீப் ஷாட்டால் சிக்ஸரை விளாசிய அவர் கேப்டன் கமின்ஸ் வீசிய பந்தில் அதிரடியான சிக்ஸர் அடித்தது அனைவரது பாராட்டுகளை பெற்றது.

இதையும் படிங்க: ஆப்கானிஸ்தான் டி20 தொடருக்கு முன்னதாக தேர்வாளர்களுக்கு ஏற்பட்டுள்ள குழுப்பம் – அணித்தேர்வில் ஏற்படவுள்ள மாற்றம்

இறுதியில் ஹம்சா 7* ரன்கள் எடுத்த உதவியுடன் முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் 313 ரன்கள் குவித்து ஓரளவு தப்பித்தது. ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக கேப்டன் பட் கமின்ஸ் 5, மிட்சேல் ஸ்டார்க் 2 விக்கெட்களை எடுத்தனர். அதைத்தொடர்ந்து விளையாடும் ஆஸ்திரேலியா முதல் நாள் முடிவில் 6/0 ரன்கள் எடுத்துள்ளது களத்தில் தன்னுடைய கடைசி போட்டியில் விளையாடும் டேவிட் வார்னர் 6*, கவாஜா 0* ரன்களுடன் உள்ளனர்.

Advertisement