ஆப்கானிஸ்தான் டி20 தொடருக்கு முன்னதாக தேர்வாளர்களுக்கு ஏற்பட்டுள்ள குழுப்பம் – அணித்தேர்வில் ஏற்படவுள்ள மாற்றம்

IND-vs-AFG
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது தென்னாப்பிரிக்கா நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு நடைபெற்று வரும் மூன்று வகையான கிரிக்கெட் தொடரிலும் பங்கேற்று விளையாடி வருகிறது. அந்த வகையில் ஏற்கனவே இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான டி20 மற்றும் ஒருநாள் தொடர்கள் முடிவடைந்த வேளையில் தற்போது இந்திய அணி டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது.

இந்த தொடரை முடித்த கையோடு நாடு திரும்பும் இந்திய அணியானது அடுத்ததாக ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது.

- Advertisement -

இந்த தொடரானது ஜனவரி 11-ஆம் தேதி முதல் 17-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த டி20 தொடருக்கான இந்திய அணியின் வீரர்களை தேர்வு செய்வதில் தான் தற்போது தேர்வுக்குழுவினருக்கு மிகப்பெரிய குழப்பம் ஏற்பட்டுள்ளது.

ஏனெனில் ஆஸ்திரேலியாவில் கடந்த 2022-ஆம் ஆண்டு 20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது நடைபெற்ற வேளையில் அந்த தொடரில் பங்கேற்றிருந்த ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி அதற்கு அடுத்து இதுவரை எந்த வித டி20 போட்டிகளிலும் இந்திய அணிக்காக பங்கேற்று விளையாடாமல் இருந்தனர்.

- Advertisement -

அதன்காரணமாக எதிர்வரும் 2024-ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை தொடரில் அவர்கள் இடம்பிடிப்பார்களா? என்ற கேள்வி எழுந்தது. ஆனால் எதிர்வரும் டி20 உலககோப்பையில் விளையாட இருவருமே விருப்பம் தெரிவித்துள்ளதால் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடரில் அவர்களை அணியில் சேர்க்க வேண்டிய நிலை தேர்வாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது. ஒருவேளை அவர்கள் இருவரும் சேர்க்கப்படாமல் போனால் நிச்சயம் அது அவர்களுக்கு பெரிய ஏமாற்றத்தை அளிக்கும்.

இதையும் படிங்க : தெ.ஆ அணியில் அந்த பலவீனம் இருக்கு.. அதை அடிச்சா இந்திய அணி ஜெயிக்கலாம்.. ஆகாஷ் சோப்ரா ஓப்பன்டாக்

எனவே ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான இந்த டி20 தொடருக்கான இந்திய அணியில் சில மாற்றங்கள் நிகழலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு ரோகித் சர்மா டி20 அணிக்கு திரும்பும் பட்சத்தில் அவர் கேப்டனாக செயல்படுவாரா? அல்லது வேறு ஏதேனும் வீரர் கேப்டனாக தேர்வு செய்யப்படுவார்களா? என்பது போன்ற பல்வேறு குழப்பங்கள் தற்போது தேர்வாளர்களுக்கு மத்தியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement