தெ.ஆ அணியில் அந்த பலவீனம் இருக்கு.. அதை அடிச்சா இந்திய அணி ஜெயிக்கலாம்.. ஆகாஷ் சோப்ரா ஓப்பன்டாக்

- Advertisement -

தென் ஆப்பிரிக்கா மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகள் மோதும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் 2வது போட்டி ஜனவரி 3ஆம் தேதி கேப் டவுன் நகரில் துவங்குகிறது. இத்தொடரின் முதல் போட்டியில் இன்னிங்ஸ் தோல்வியை சந்தித்த இந்தியா ஏற்கனவே தென்னாபிரிக்காவில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை வெல்லும் வாய்ப்பை தவற விட்டது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது.

எனவே குறைந்தபட்சம் ஒய்ட் வாஷ் தோல்வியை தவிர்த்து தங்களை நம்பர் ஒன் அணி என்பதை நிரூபிக்க இப்போட்டியில் இந்தியா வென்றாக வேண்டிய கட்டாயத்தில் விளையாடுகிறது. இருப்பினும் நம்பர் ஒன் அணியாக இருந்தும் முதல் போட்டியில் இந்தியாவை அசால்ட்டாக தோற்கடித்த தென்னாப்பிரிக்கா கேப் டவுன் நகரில் தோல்வியை சந்தித்ததே கிடையாது.

- Advertisement -

பலவீனம் இருக்கு:
அதனால் இந்த போட்டியிலும் அந்த அணி வெல்வதற்கு அதிகப்படியான வாய்ப்புகள் இருக்கிறது என்றே சொல்லலாம். இந்நிலையில் தென் ஆப்பிரிக்க அணியின் பேட்டிங்கில் இப்போதும் சில பலவீனம் இருப்பதாக தெரிவிக்கும் ஆகாஷ் சோப்ரா கடைசி போட்டியில் விளையாடும் அனுபவ வீரர் டீன் எல்கரை ஆரம்பத்திலேயே அவுட்டாக்கினால் இந்தியா வெற்றி பெறுவதற்கு பிரகாசமான வாய்ப்புகள் இருப்பதாக கூறியுள்ளார்.

இது பற்றி தன்னுடைய யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “தென் ஆப்பிரிக்கா அணியில் பவுமா இல்லை. அதனால் தம்முடைய இந்த கடைசி போட்டியில் விளையாடும் டீன் எல்கர் கேப்டனாக செயல்பட உள்ளார். மேலும் போட்டி துவங்குவதற்கு முன்பாகவே இப்போட்டியில் அடிக்கப் போகும் ரன்களை விட வெற்றி பெற்று கோப்பையை வெல்வதில் தான் தம்முடைய கவனம் இருப்பதாக அவர் கூறியுள்ளார்”

- Advertisement -

“எனவே இந்த போட்டியில் அவர் வெற்றிக்கு ஆர்வத்துடன் இருப்பார். ஆனால் இப்போதும் நான் தென்னாபிரிக்கா அணியின் பேட்டிங் பலவீனமாக இருப்பதாக கருதுகிறேன். ஒருவேளை நீங்கள் டீன் எல்கரை எடுத்து விட்டால் தென்னாபிரிக்காவின் பேட்டிங் சுமாராகவே இருக்கும். ஆனால் நீங்கள் அவரை எளிதில் அவுட்டாக்குவது மிகவும் கடினமாகும். அவரை அவ்வளவு சுலபமாக நீங்கள் வீழ்த்த முடியாது”

இதையும் படிங்க: 2009இல் சொன்னதை இப்போவும் சொல்றேன்.. அந்த ஃபார்மட் ரிட்டையர் ஆகாதீங்க.. வார்னருக்கு சேவாக் கோரிக்கை

“மறுபுறம் இந்த போட்டியில் இந்தியா சிறப்பாக செயல்படும் என்று நம்புகிறேன். அவர்கள் நன்றாக பேட்டிங் செய்து 5 செசன்களிலும் சிறப்பாக செயல்பட வேண்டும். ஆனாலும் கடந்த போட்டியில் இந்தியாவை விட தென்னாபிரிக்கா ஒரு இன்னிங்ஸ் குறைவாக பேட்டிங் செய்து வென்றது என்பதே உண்மையாகும்” என்று கூறினார். அந்த வகையில் இந்த போட்டியில் இந்தியா வென்று தொடரை சமன் செய்யுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடமும் காணப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement