2009இல் சொன்னதை இப்போவும் சொல்றேன்.. அந்த ஃபார்மட் ரிட்டையர் ஆகாதீங்க.. வார்னருக்கு சேவாக் கோரிக்கை

- Advertisement -

பாகிஸ்தானுக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் ஆஸ்திரேலியா விளையாடும் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் 3வது போட்டி சிட்னி நகரில் ஜனவரி 3ஆம் தேதி துவங்கியது. இந்த போட்டியுடன் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறும் ஆஸ்திரேலியாவை சேர்ந்த நட்சத்திர துவக்க வீரர் டேவிட் வார்னருக்கு அந்நாட்டு ரசிகர்கள் பிரியாத மனதுடன் விடை கொடுத்து வருகின்றனர்.

மேலும் 2024 புத்தாண்டு தினத்தன்று ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அவர் அறிவித்தது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. ஏனெனில் 2009இல் அறிமுகமான அவர் கடந்த 10 வருடங்களுக்கு மேலாக 3 வகையான கிரிக்கெட்டிலும் அதிரடியாக விளையாடி ஆஸ்திரேலியாவுக்கு நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்துள்ளார்.

- Advertisement -

சேவாக் கோரிக்கை:
குறிப்பாக 2015, 2023 உலகக் கோப்பையை வெல்வதற்கு முக்கிய பங்காற்றிய அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் கிட்டத்தட்ட 9000 ரன்கள் அடித்து நிறைய சாதனைகளையும் படைத்துள்ளார். இந்நிலையில் ஒருநாள் கிரிக்கெட்டில் வேண்டுமானாலும் விடைபெறுங்கள் ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாடுங்கள் என்று டேவிட் வார்னருக்கு முன்னாள் இந்திய வீரர் வீரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார்.

இது பற்றி இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “2009 ஐபிஎல் தொடரில் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக டேவிட் வார்னர் விளையாட வந்தார். அப்போது அவர் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் மட்டுமே அறிமுகமாகியிருந்தார். ஆனால் அவர் பந்தை அடித்த விதத்தை பார்த்த எனக்கு இவரிடம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அசத்துவதற்கான திறமையும் கட்டுப்பாடும் இருப்பதாக தெரிந்தது. ஆனால் அவரைப் போன்ற இளம் வீரர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவதற்கான தன்னம்பிக்கையை அந்த வயதில் கொண்டிருக்க மாட்டார்கள்”

- Advertisement -

“இருப்பினும் நான் அவரால் டி20 கிரிக்கெட்டை விட டெஸ்ட் போட்டிகளில் அசத்த முடியும் என்று கருதினேன். இது பற்றி நேரடியாகவே சொன்ன போது வாய்விட்டு சிரித்த அவர் ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியில் வாய்ப்பு கிடைப்பது கடினம் என்று சொன்னார். ஆனாலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் நாள் முழுவதும் பவர் பிளே போல் இருக்கும் என்பதால் நீங்கள் டெஸ்டில் விளையாட வேண்டும் என்று நான் சொன்னேன்”

இதையும் படிங்க: இந்தியாவும் இல்ல.. ஆஸ்திரேலியாவும் இல்ல.. டி20 உலகக்கோப்பையை ஜெயிக்கப்போறது அவங்கதான் – நாசர் ஹுசேன் கருத்து

“அதற்கு அப்படியானால் நான் கண்டிப்பாக விளையாடுவேன் என்று அவர் சிரித்துக் கொண்டே சொன்னார். பின்னர் ஆஸ்திரேலியாவுக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான அவர் நான் அப்படி சொன்னதற்காக மகிழ்ச்சியடைந்து மெசேஜ் செய்தார். தற்போது அவர் பேட்டிங் செய்யும் விதத்திற்கு டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓய்வு பெறக்கூடாது என்பது என்னுடைய சொந்த கருத்தாகும். இருப்பினும் 35 – 36 வயதில் நீங்கள் குடும்பத்தை பற்றி சிந்திப்பீர்கள் என்பது எனக்கு தெரியும். தற்போது ஃபிட்னஸ் அளவில் எந்த குறையுமில்லாத அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் விடை பெற மனதளவில் முடிவெடுத்துள்ளார் என்று நினைக்கிறேன். அவர் டி20 கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாடுவார் என நம்புகிறேன்” என்று கூறினார்.

Advertisement