- Advertisement -
இந்திய கிரிக்கெட்

14 வருஷம் நண்பா.. கலங்கிட்டேன் நீங்க இந்திய கிரிக்கெட்டின் லெஜெண்ட்.. அஸ்வினை வாழ்த்திய விராட் கோலி

இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 2010ஆம் ஆண்டு அறிமுகமான அவர் 3 வகையான கிரிக்கெட்டிலும் சேர்த்து 775 விக்கெட்டுகளை எடுத்து இந்தியாவின் நிறைய வெற்றிகளில் பங்காற்றியுள்ளார். குறிப்பாக 2012 – 2024 வரை சொந்த மண்ணில் இந்தியா ஒரு டெஸ்ட் தொடரில் கூட தோற்காமல் இருப்பதற்கு அவர் கருப்பு குதிரையாக செயல்பட்டார்.

2011 உலகக்கோப்பை மற்றும் 2013 சாம்பியன்ஸ் டிராபி வெற்றியாளரான அஸ்வின் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக தொடர்நாயகன் விருதுகள் என்ற வீரர் வென்ற முரளிதரன் உலக சாதனையையும் சமன் செய்துள்ளார். மேலும் 2017க்குப்பின் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் கழற்றி விடப்பட்டாலும் மனம் தளராத அவர் கம்பேக் கொடுத்து 2022 டி20 உலகக்கோப்பை, 2023 உலகக்கோப்பையில் இந்தியாவுக்காக விளையாடினார்கள்.

- Advertisement -

கலங்கிய கோலி:

தற்போது 38 வயதாகும் அஸ்வின் வருங்காலத்தை கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்துள்ளதாக அறிவித்துள்ளார். குறிப்பாக இவ்வளவு சாதனைகள் படைத்தும் வெளிநாடுகளில் அவருக்கு இந்திய அணி தொடர்ந்து வாய்ப்புகள் கொடுப்பதில்லை. அதன் காரணமாக இந்த முடிவை அஸ்வின் எடுத்திருப்பார் என்றே சொல்லலாம்.

முன்னதாக காபாவில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் கடைசி நாளில் ஓய்வு பெறும் முடிவை இந்திய வீரர்களிடம் அஸ்வின் தெரிவித்தார். அதை கேட்டு கலங்கிப்போன விராட் கோலி அவரது அருகே சென்று கட்டியணைத்து பாராட்டும் வாழ்த்தும் தெரிவித்தார். இந்நிலையில் அஸ்வின் இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான் என்று விராட் கோலி பாராட்டியுள்ளார்.

- Advertisement -

நண்பனுக்கு வாழ்த்து:

இது பற்றி தம்முடைய ட்விட்டரில் அவர் பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “உங்களுடன் 14 வருடங்கள் நான் விளையாடியுள்ளேன். ஆனால் இன்று ஓய்வு பெறுவதாக நீங்கள் என்னிடம் சொன்னது என்னை உணர்ச்சிவசப்படுத்தியது. அது இத்தனை வருடங்களாக நாம் ஒன்றாக விளையாடிய நினைவுகளை என் முன் கொண்டு வந்தது. உங்களுடன் எனது பயணத்தின் ஒவ்வொரு பகுதியையும் ரசித்தேன்”

இதையும் படிங்க: டெஸ்ட் கிரிக்கெட்டில் தல தோனியின் மாபெரும் சாதனையை சமன் செய்த ரிஷப் பண்ட் – விவரம் இதோ

“இந்திய கிரிக்கெட்டில் உங்களின் திறமை மற்றும் மேட்ச் வின்னிங் பங்களிப்புகள் எதற்கும் நிகராக இல்லை. நீங்கள் இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான் என்று எப்போதும் நினைவு கூறப்படுவீர்கள். உங்களது குடும்பம் மற்றும் உங்களுக்காக வெளிப்படும் மற்ற அனைத்தையும் சிறப்பாக இருக்க வாழ்த்துகிறேன். உங்கள் மீதும் உங்களுக்கு நெருக்கமானவர்கள் மீதும் மிகப்பெரிய மரியாதை மற்றும் அன்பு இருக்கிறது. எல்லாவற்றுக்கும் நன்றி நண்பா” என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

- Advertisement -