டெஸ்ட் கிரிக்கெட்டில் தல தோனியின் மாபெரும் சாதனையை சமன் செய்த ரிஷப் பண்ட் – விவரம் இதோ

Dhoni-and-Pant
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியானது டிராவில் நடைபெற்று முடிவடைந்துள்ள வேளையில் அடுத்ததாக நடைபெற இருக்கும் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று இந்த தொடரை கைப்பற்றப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதோடு இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறுமா? என்பதும் இந்த கடைசி இரண்டு போட்டிகளில் முடிவில் தான் தெரியும்.

தோனியின் சாதனையை சமன் செய்த ரிஷப் பண்ட் :

இந்நிலையில் நடைபெற்று முடிந்த ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் போது முதல் இன்னிங்ஸில் நான்கு கேட்ச்களை பிடித்த ரிஷப் பண்ட் இரண்டாவது இன்னிங்ஸில் ஐந்து கேட்ச்களை பிடித்து அசத்தினார்.

- Advertisement -

இதன்மூலம் இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பரான எம்.எஸ் தோனியின் மாபெரும் சாதனை ஒன்றினை ரிஷப் பண்ட் டெஸ்ட் கிரிக்கெட்டில் சமன் செய்துள்ள தகவல் ஒன்று வெளியாகி அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.

அந்த வகையில் இதுவரை இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக முறை 5 மற்றும் அதற்கு மேற்பட்ட கேட்ச்களை பிடித்த விக்கெட் கீப்பராக தோனி முதலிடத்தில் உள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் நான்கு முறை ஒரு இன்னிங்ஸில் 5 அல்லது அதற்கு மேற்பட்ட கேட்ச்களை பிடித்துள்ளார். இந்நிலையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியின் :

- Advertisement -

இரண்டாவது இன்னிங்ஸில் மெக்ஸ்வீனி, லாபுஷேன், மிட்சல் மார்ஷ், டிராவிஸ் ஹெட் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோரது கேட்ச்களை பிடித்த ரிஷப் பண்ட் இந்த இரண்டாவது இன்னிங்சில் ஐந்து கேட்ச்களை பிடித்துள்ளார். இதன் மூலம் அவரும் டெஸ்ட் கிரிக்கெட்டில் நான்காவது முறையாக 5 அல்லது அதற்கு மேற்பட்ட கேட்ச்களை பிடித்துள்ளார்.

இதையும் படிங்க : நாங்க ஜெயிக்க வேண்டிய இந்த போட்டி டிராவனதுக்கு காரணம் இதுதான் – பேட் கம்மின்ஸ் வருத்தம்

இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டின் ஒரே இன்னிங்ஸ்சில் அதிக முறை 5 அல்லது அதற்கு மேற்பட்ட கேட்ச்களை பிடித்த வீரர் என்ற பட்டியலில் முதலிடத்தில் இருந்த தோனியின் சாதனையை ரிஷப் பண்ட் சமன் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே டெஸ்ட் கிரிக்கெட்டில் பேட்டிங்கில் அசத்தி வரும் ரிஷப் பண்ட் தற்போது விக்கெட் கீப்பிங்கில் சாதித்துள்ள விடயம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

Advertisement