இந்திய அணிக்கு எதிராக சொந்த மண்ணில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வரும் ஆஸ்திரேலிய அணியானது பெர்த் நகரில் நடைபெற்ற முதல் போட்டியில் தோல்வியை சந்தித்தது. அதனை தொடர்ந்து அடிலெய்டு நகரில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் வெற்றிபெற்று இந்திய அணியை பழி தீர்த்து இந்த தொடரில் ஒன்றுக்கு ஒன்று (1-1) என்ற கணக்கில் சமநிலை வகித்தது.
நாங்க ஜெயிக்க வேண்டிய போட்டி டிரா ஆகிடுச்சு :
அதற்கடுத்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியானது கடந்த டிசம்பர் 14-ஆம் தேதி துவங்கி இன்று நடைபெற்ற கடைசி நாள் ஆட்டத்துடன் முடிவுக்கு வந்தது. பிரிஸ்பேன் நகரில் பெய்த மழை காரணமாக இந்த போட்டியில் இரு அணிகளுக்குமே வெற்றி தோல்வி என்று டிராவில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது.
ஆனால் இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் 445 ரன்கள் அடித்த ஆஸ்திரேலியா அணி இந்திய அணியை 260 ரன்களுக்கு சுருட்டியதால் நிச்சயம் ஆஸ்திரேலிய அணியே இந்த போட்டியில் வெற்றி பெற வாய்ப்பு இருந்தது. ஆனால் போட்டியின் ஐந்து நாட்களுமே மழை பெய்ததால் இந்த போட்டி தற்போது டிராவாகியுள்ளது.
இந்நிலையில் இந்த போட்டியின் முடிவு குறித்து பேசியுள்ள ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் கூறுகையில் : நிச்சயம் இந்த போட்டியின் முடிவுக்கு பின்னர் நாங்கள் இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் முன்னிலை பெற்று இருக்க வேண்டும். ஆனால் மழை பெய்து விட்டது. அதைத்தவிர வேறு என்ன சொல்ல முடியும்? இயற்கையே நம்மால் தடுக்க முடியாது.
முதல் இன்னிங்சில் மிகப்பெரிய ரன் குவிப்பை வழங்கியபோதே நாங்கள் போட்டிக்குள் முழுவதுமாக வந்துவிட்டோம் என்று நினைத்தோம். ஆனாலும் மழை காரணமாக இந்த போட்டி டிராவானது வருத்தம் அளிக்கிறது. ஸ்டார்க் இந்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஸ்மித் மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகியோர் முதல் இன்னிங்சில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அதேபோன்று அலெக்ஸ் கேரியம் தனது பங்களிப்பை சிறப்பாக வழங்கியிருந்தார்.
இதையும் படிங்க : உண்மையிலேயே இந்த முடிவு ஹேப்பி தான்.. 3 ஆவது போட்டி டிராவானதற்கு பின்னர் பேசிய – ரோஹித் சர்மா
நாதன் லயன் சிறப்பாக கன்ட்ரோல் செய்திருந்தார். ஸ்டார்க் விக்கெட்டுகளை தேவையான நேரத்தில் எடுத்துக் கொடுத்தார். இப்படி எல்லா வகையிலுமே எங்களது வீரர்கள் பங்களிப்பை வழங்கியுள்ளனர். அடுத்ததாக நடைபெறவிருக்கும் பாக்சிங் டே டெஸ்ட் போட்டி மிகவும் அற்புதமான ஒன்றாக இருக்கும். நிச்சயம் அந்த போட்டியில் எங்களது அணி மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என பேட் கம்மின்ஸ் கூறியது குறிப்பிடத்தக்கது.



