ஆசியக்கோப்பை 2023 : ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் உச்சம் தொடவுள்ள விராட் கோலி – சச்சினின் இடம் காலி

Sachin-and-Kohli
- Advertisement -

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் மற்றும் நேபாள் ஆகிய ஆறு அணிகள் பங்கேற்கும் ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரானது எதிர்வரும் ஆகஸ்ட் 30-ஆம் தேதி முதல் செப்டம்பர் 17-ம் தேதி வரை இலங்கை மற்றும் பாகிஸ்தான் நாடுகளில் நடைபெற இருக்கிறது. இந்த தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்துள்ள விராட் கோலி மாபெரும் சாதனை ஒன்றினை நிகழ்த்த காத்திருக்கிறார்.

எப்பொழுதுமே கிரிக்கெட்டில் சாதனைகளை உடைக்கும் வீரராக திகழ்ந்துவரும் விராட் கோலி ஏற்கனவே சர்வதேச கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளை தன் வசம் வைத்திருக்கும் வேளையில் தற்போது எதிர்வரும் இருக்கும் இந்த ஆசிய கோப்பை தொடரிலும் ஒரு புதிய உச்சத்தை தொட இருக்கிறார்.

- Advertisement -

அதன்படி ஆசிய கோப்பை தொடரில் விராட் கோலி மேலும் 102 ரன்களை அடிக்கும் பட்சத்தில் ஒருநாள் கிரிக்கெட்டில் 13,000 ரன்களை கடந்த வீரர்களின் பட்டியலில் ஐந்தாவது வீரராக இணையவுள்ளார். இந்த பட்டியலில் சச்சின் டெண்டுல்கர், ரிக்கி பாண்டிங், குமார் சங்கக்கார மற்றும் சனத் ஜெயசூர்யா ஆகியவருக்கு அடுத்து இவர் ஐந்தாவது இடத்தை பிடிக்க இருக்கிறார்.

இருப்பினும் அதிவேகமாக 13000 ரன்களை குவித்த சச்சின் டெண்டுல்கர் சாதனையை தகர்த்து விராட் கோலி முன்னேற இருக்கிறார். சர்வதேச ஒருநாள் போட்டிகளில் விராட் கோலி 13000 ரன்களை தொட இன்னும் அவருக்கு 102 ரன்கள் தேவைப்படும் வேளையில் கைவசம் இன்னும் 55 போட்டிகளை அவர் எடுத்துக் கொள்ளலாம்.

- Advertisement -

ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 13000 ரன்களை கடந்த வீரராக சச்சின் டெண்டுல்கர் 321 இன்னிங்ஸ்களில் அந்த சாதனையை நிகழ்த்தி இருந்தார். ஆனால் தற்போது விராட் கோலியிடம் 55 இன்னிங்ஸ்கள் எஞ்சியுள்ள வேளையில் வெகுவிரைவாக அவர் இந்த சாதனையை நிகழ்த்தி அதிவேகமாக 13000 ரன்களை அடித்த வீரர் என்ற பெருமையை பெற இருக்கிறார்.

இதையும் படிங்க : ஆசிய கோப்பை 2023 : தப்பு கணக்கு போடாதீங்க, இப்போ அவர் பழைய கிங் கோலியா வந்துட்டாரு – ஆஸி முன்னாள் வீரருக்கு அம்ப்ரோஸ் பதிலடி

அதோடு எதிர்வரும் 50 ஓவர் உலக கோப்பை தொடரிலும் அவரது பங்களிப்பு அவசியம் என்பதனால் இந்த தொடரில் இருந்தே விராட் கோலி தனது மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது குறிப்பிடப்பட்டது.

Advertisement