டி20 உலககோப்பை : 2 வரலாற்று சாதனைகளை படைக்க காத்திருக்கும் விராட் கோலி – வேறலெவல்ங்க இவரு

Virat-Kohli
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலக கோப்பையில் தற்போது இந்திய அணியின் முன்னாள் கேப்டனான விராட் கோலி ஒரு முழுநேர பேட்ஸ்மேனாக விளையாடி வருகிறார். சமீபத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரின் போது மீண்டும் ஃபார்மிற்க்கு திரும்பிய விராட் கோலி இந்த உலகக்கோப்பை தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தியுள்ளார்.

- Advertisement -

அதன்படி மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் 53 பந்துகளை சந்தித்து 82 ரன்கள் குவித்த விராட் கோலி, நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியிலும் 62 ரன்களை விளாசினார். இந்த இரண்டு போட்டிகளிலுமே ஆட்டம் இழக்காமல் களத்தில் இருந்த விராட் கோலி இரண்டு அரை சதங்களையும் அடித்துள்ளார்.

இதன் மூலம் நடைபெற்ற டி20 உலக கோப்பை தொடரில் மொத்தம் 144 ரன்களை குவித்திருக்கும் விராட் கோலி டி20 உலக கோப்பை வரலாற்றில் புதிய சாதனை ஒன்றையும் நிகழ்த்த காத்திருக்கிறார். அதன்படி இதுவரை டி20 உலக கோப்பை தொடரில் மட்டும் 23 போட்டியில் விளையாடியுள்ள அவர் 989 ரன்களை விலாசியுள்ளார்.

Virat Kohli 1

இதன் மூலம் டி20 உலக கோப்பை வரலாற்றில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற பட்டியலில் கிரிஸ் கெயிலை பின்னுக்கு தள்ளி தற்போது விராட் கோலி இரண்டாம் இடத்தில் உள்ளார். மேலும் இன்னும் அவர் 11 ரன்கள் அடிக்கும் பட்சத்தில் டி20 உலக கோப்பை போட்டிகளில் 1000 ரன்களை எடுத்த முதல் வீரர் என்ற சாதனையைப் படைப்பார்.

- Advertisement -

அதோடு மட்டுமின்றி ஒட்டுமொத்தமாக டி20 உலக கோப்பையில் ஆயிரம் ரன்கள் எடுத்த இரண்டாவது வீரர் என்ற சாதனையும் படைப்பார். முதல் இடத்தில் உள்ள இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் ஜெயவர்த்தனே 1016 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார்.

இதையும் படிங்க : இந்தியாவின் தயவுடன் 1992 மேஜிக் நிகழ்த்துமா பாகிஸ்தான்? செமி பைனல் செல்ல செய்ய வேண்டிய கால்குலேட்டர் முடிவுகள் இதோ

இன்னும் அவர் இந்த உலககோப்பை தொடரில் 27 ரன்கள் கூடுதலாக அடித்தால் டி20 உலக கோப்பையில் அதிக ரன்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் ஜெயவர்த்தனேவை பின்னுக்கு தள்ளி விராட் கோலி முதலிடத்திற்கு செல்வார் என்பது குறிப்பிடத்தக்கது. நிச்சயம் இந்த டி20 உலகக் கோப்பை தொடரிலேயே அவர் ஜெயவர்த்தனேவை தாண்டி மேலும் சில நூறு ரன்களை கடந்து செல்வார் என்று உறுதியாக நம்பலாம்.

Advertisement