இந்தியாவின் தயவுடன் 1992 மேஜிக் நிகழ்த்துமா பாகிஸ்தான்? செமி பைனல் செல்ல செய்ய வேண்டிய கால்குலேட்டர் முடிவுகள் இதோ

VIrat Kohli IND vs PAK
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் எதிர்பாராத திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 2022 ஐசிசி டி20 உலக கோப்பையில் 2009க்குப்பின் 2வது கோப்பையை வெல்லும் முனைப்புடன் களமிறங்கிய பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் தன்னுடைய முதல் போட்டியிலேயே பரம எதிரியான இந்தியாவுக்கு எதிராக விராட் கோலி அபார ஆட்டத்தால் முக்கிய நேரங்களில் சொதப்பி கையில் வைத்திருந்த வெற்றியை கோட்டை விட்டு பரிதாபத் தோல்வியை சந்தித்தது. அதனால் நாக் அவுட் சுற்றுக்கு செல்ல வென்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கிய 2வது போட்டியில் வெறும் 131 ரன்களை துரத்த முடியாமல் 1 ரன் வித்தியாசத்தில் ஜிம்பாப்வேயிடம் அதிர்ச்சி தோல்வியை சந்தித்துள்ள அந்த அணி கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது.

Pakistan

- Advertisement -

அந்த அணியின் பந்து வீச்சு துறை 1% கூட குறை சொல்ல முடியாத அளவுக்கு சிறப்பாக இருக்கும் நிலையில் பேட்டிங் துறை தான் இந்த அடுத்தடுத்த தோல்விகளுக்கு முக்கிய காரணமாக அமைந்தது. குறிப்பாக தரமான வீரர்கள் இல்லாததால் மிடில் ஆர்டர் பலவீனமாக இருக்கிறது என்பதை தெரிந்தும் ஆணி வேராக கருதப்படும் கேப்டன் பாபர் அசாம் மற்றும் உலகின் நம்பர் ஒன் டி20 கிரிக்கெட் பேட்ஸ்மேன் முகமது ரிஸ்வான் ஆகியோர் தடவலான பேட்டிங்கை வெளிப்படுத்தி சொற்ப ரன்களில் அவுட்டாகி அடுத்தடுத்த தோல்விகளுக்கு காரணமாக அமைந்தனர்.

கால்குலேட்டர் முடிவுகள்:
சரி அவர்கள் தான் சொதப்பினார்கள் என்று பார்த்தால் 10க்கு 9 போட்டியில் சொதப்பி வரும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் கொஞ்சமும் முன்னேறாமல் மீண்டும் மீண்டும் பொறுப்பின்றி விளையாடுவது அந்நாட்டு ரசிகர்களை கடுப்பாக வைத்துள்ளது. மொத்தத்தில் மோசமான பேட்டிங் காரணமாக ஆரம்பத்திலேயே அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்துள்ள பாகிஸ்தான் அரை இறுதி சுற்றுக்கு செல்லுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

VIrat Kohli IND vs PAK.jpeg

இருப்பினும் கடந்த 1992ஆம் ஆண்டு இதே ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற்ற ஐசிசி உலகக் கோப்பையில் இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் ஆரம்பத்தில் சில தோல்விகளை சந்தித்தாலும் அதற்காக அசராமல் அதிலிருந்து கொதித்தெழுந்து அடுத்தடுத்த வெற்றிகளை பெற்று இறுதியில் கோப்பையையும் முத்தமிட்டு சரித்திரம் படைத்தது. எனவே அதே மேஜிக்கை இம்முறை பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் செய்யுமா என்பதே இந்த உலக கோப்பையில் அந்நாட்டு ரசிகர்களின் கடைசி எதிர்பார்ப்பாக உள்ளது. ஆனால் அதற்கு இந்தியாவின் தயவு தேவைப்படுகிறது.

- Advertisement -

1. ஆம் இந்த உலக கோப்பையில் தற்சமயத்தில் குரூப் 2 புள்ளி பட்டியலில் 4வது இடத்தில் தவிக்கும் பாகிஸ்தான் இனியும் அரை இறுதி சுற்றுக்கு செல்ல வேண்டுமானால் முதலில் வங்கதேசம், தென்னாபிரிக்கா, நெதர்லாந்து ஆகிய அணிகளுக்கு எதிரான தன்னுடைய எஞ்சிய 3 போட்டிகளில் வெல்வது கட்டாயமாகியுள்ளது. அதே சமயம் -0.050 என்ற மோசமான நிலையில் இருக்கும் அந்த அணியின் ரன்ரேட்டை உயர்த்துவதற்கு அந்த 3 வெற்றிகளும் பெரிதாக இருந்தால் இன்னும் உதவிகரமாக இருக்கும்.

Pak Shadab Khan

2. மேலும் தற்சமயத்தில் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் இந்தியா தன்னுடைய எஞ்சிய 3 போட்டிகளில் நிச்சயம் வென்றாக வேண்டும். இந்தியா 1 போட்டியில் தோற்றால் கூட தன்னுடைய 3 போட்டிகளில் பாகிஸ்தான் வென்றால் பயனளிக்காது.

3. அத்துடன் தன்னுடைய 2 போட்டிகளில் முடிவில் 3 புள்ளிகளுடன் 2வது இடத்தில் இருக்கும் தென்னாபிரிக்கா தன்னுடைய கடைசி 3 போட்டிகளில் குறைந்தது 2 தோல்விகளை சந்திக்க வேண்டும். அதே போல் 3வது இடத்தில் இருக்கும் ஜிம்பாப்வே தன்னுடைய கடைசி 3 போட்டிகளில் 2 போட்டிகளில் கண்டிப்பாக தோற்க வேண்டும்.

IND vs PAK Hardik Pandya Dinesh Kathik Rizwan

4. இவை அனைத்தும் மெடிக்கல் மிராக்கள் போல நடைபெற்றால் மட்டுமே பாகிஸ்தான் அரையிறுதிற்கு செல்லும் வாய்ப்புள்ளது. ஆனால் வரலாற்றில் ஆஸ்திரேலியா மண்ணில் இதுவரை ஒட்டுமொத்தமாக பங்கேற்ற 6 டி20 போட்டிகளில் 5 தோல்விகளை பதிவு செய்துள்ள பாகிஸ்தான் 1 வெற்றியை கூட பதிவு செய்ததில்லை என்பது இந்த உலகக் கோப்பையில் அந்த அணிக்கு அதிர்ஷ்டம் கை கொடுக்காது என்பதை ஆரம்பத்திலேயே உணர்த்துகிறது.

Advertisement