- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இரண்டு இன்னிங்சிலும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததால் விராட் கோலி செய்த செயல் – இதுவரை நாம பாத்ததில்லை

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி கடைசியாக தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் தொடரில் விளையாடி இருந்தார். அதன் பின்னர் இந்திய மண்ணில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் அவருக்கு அவர் பங்கேற்கவில்லை. அந்த நேரத்தில் அவருக்கு இரண்டாவது குழந்தை பிறக்க இருந்ததால் தனது மனைவியுடன் இருக்க ஆசைப்பட்டு லண்டன் சென்றிருந்தார்.

பயிற்சியில் ஈடுபட்ட விராட் கோலி :

அதனை தொடர்ந்து கிட்டத்தட்ட 9 மாதங்களுக்குப் பிறகு அவருக்கு வங்கதேச அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் வாய்ப்பு கிடைத்தது. அதன்படி தற்போது நடைபெற்று வரும் வங்கதேசம் அணிக்கு எதிரான முதல் போட்டியில் விளையாடிய விராட் கோலி முதல் இன்னிங்சில் 6 ரன்களை மட்டுமே அடித்து ஏமாற்றம் அளித்தார்.

- Advertisement -

அதன்பின்னர் இரண்டாவது இன்னிங்சிலாவது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் இரண்டாவது இன்னிங்ஸ்சிலும் 17 ரன்களுடன் நடையை கட்டினார். இதன் காரணமாக தற்போது விராட் கோலியின் பேட்டிங் பார்ம் மீது பலருக்கும் கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில் இப்படி தனது பேட்டிங் பார்ம் சரிவதை கண்ட விராட் கோலி உடனடியாக அதனை சரி செய்ய வேண்டும் என்ற நோக்கில் பண்ட் மற்றும் சுப்மன் கில் ஆகியோர் பேட்டிங் செய்து கொண்டிருக்கையில் நேரடியாக வலைப்பயிற்சிக்கு த்ரோடவுன் ஸ்பெஷலிஸ்ட் உடன் சென்று தீவிர வலைப்பயிற்சி ஈடுபட்டார்.

- Advertisement -

பொதுவாகவே விராட் கோலி போட்டியின் போது இதுபோன்று வலைப்பயிற்சியில் ஈடுபட்டு இதுவரை நாம் பார்த்ததில்லை. ஆனால் இந்த வங்கதேச அணிக்கெதிரான இரண்டாவது போட்டியில் பெரியளவு ரன்களை குவிக்க வேண்டும் என்பதற்காகவே அவர் இப்படி உடனடியாக நெட்டிற்கு சென்று பிராக்டிஸ் செய்துள்ளார். இது குறித்த வீடியோவும் வெளியாகி அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.

இதையும் படிங்க : தோனி டெக்னிக் கொண்ட ரிஷப் பண்ட்.. சேவாக் வழியில் இந்தியா அங்கே அசத்துவதற்கு தேவை.. சஞ்சய் மஞ்ரேக்கர்

தற்போது தனது கரியரின் கடைசி கட்டத்தில் இருந்தாலும் இன்றளவும் விராட் கோலிக்கு கிரிக்கெட்டின் மீதுள்ள பசி இதன் மூலம் தெரிய வந்துள்ளதாகவும் சிலர் கூறி வருகின்றனர். போட்டியின் நான்காம் நாளான இன்று இந்திய அணியின் வெற்றிக்கு இன்னும் நான்கு விக்கெட் மட்டுமே தேவை என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -