தோனி டெக்னிக் கொண்ட ரிஷப் பண்ட்.. சேவாக் வழியில் இந்தியா அங்கே அசத்துவதற்கு தேவை.. சஞ்சய் மஞ்ரேக்கர்

Sanjay Manjrekar 3
- Advertisement -

சென்னையில் இந்தியா மற்றும் வங்கதேச கிரிக்கெட் அணிகள் மோதி வரும் முதல் டெஸ்ட் போட்டி இறுதிக்கட்டதை தொட்டுள்ளது. செப்டம்பர் 19ஆம் தேதி துவங்கிய அந்தப் முதலாவதாக பேட்டிங் செய்த இந்தியா 2 இன்னிங்சிலும் முறையே 376 மற்றும் 287-4 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. அதிகபட்சமாக 2 இன்னிங்சிலும் அஸ்வின் 113, ஜடேஜா 86, ஜெய்ஸ்வால் 56, கில் 119*, ரிஷப் பண்ட் 109 ரன்கள் குவித்தனர்.

அதைத் தொடர்ந்து களமிறங்கிய வங்கதேசம் முதல் இன்னிங்ஸில் 149 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இறுதியில் 515 ரன்களை துரத்தும் அந்த அணி மூன்றாவது நாள் முடிவில் 158-4 ரன்களுடன் தோல்வியை தவிர்க்க போராடி வருகிறது. முன்னதாக இப்போட்டியில் கார் விபத்தில் சந்தித்த காயத்திலிருந்து குணமடைந்த ரிஷப் பண்ட் 634 நாட்கள் கழித்து டெஸ்ட் கிரிக்கெட்டில் களமிறங்கினார்.

- Advertisement -

தோனி போன்ற டெக்னிக்:

அந்த வாய்ப்பில் தம்முடைய ஸ்டைலில் ஒற்றை கையில் சிக்ஸர்களை அடித்து பேக்வேர்ட் திசையில் பவுண்டரிகளை அடித்த அவர் சதமடித்து சூப்பர் கம்பேக் கொடுத்தார். இதையும் சேர்த்து டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் 6 சதங்கள் அடித்துள்ளார். அதனால் அதிக சதங்கள் அடித்த இந்திய விக்கெட் கீப்பர் என்ற தோனியின் சாதனையையும் ரிஷப் பண்ட் சமன் செய்தார்.

இந்நிலையில் ரிஷப் பண்ட் தோனியை போன்ற தடுப்பாட்ட டெக்னிக்கை கொண்டிருப்பதாக முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ரேக்கர் பாராட்டியுள்ளார். அதே சமயம் வீரேந்திர சேவாக் போல தம்முடைய அதிரடியான ஸ்டைலில் ரன்களை குவிக்கும் ரிஷப் பண்ட் நவம்பர் மாதம் ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெறும் டெஸ்ட் தொடரில் வெல்வதற்கு இந்தியாவுக்கு தேவை என்றும் மஞ்சரேக்கர் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

சேவாக் வழியில் ரிஷப் பண்ட்:

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “அவர் கொஞ்சம் அழகான தடுப்பாட்டை டெக்னிக்கை கொண்டுள்ளார். அது தோனியின் டெக்னிக் போன்றது. மக்கள் பெரும்பாலும் தோனியின் கேப்டன்ஷிப் மற்றும் அதிரடியாக விளையாடும் பேட்டிங் பவர் பற்றியே பேசுகின்றனர். ஆனால் அவருடைய தடுப்பாட்ட டெக்னிக் அழகானது. ரிஷப் பண்ட் அதையே கொண்டுள்ளார்”

இதையும் படிங்க: பலவீனமே இல்லாத அவர மாதிரி பவுலர் இருப்பதற்கு இந்தியா அதிர்ஷ்டம் செஞ்சுருக்கணும்.. சஞ்சய் மஞ்ரேக்கர்

“ரிஷப் பண்ட் சில நேரங்களில் தனது மூடுக்குத் தகுந்தார் போல் விளையாடுகிறார். அதே சமயம் சரியான பவுலர்களை தேர்ந்தெடுப்பதிலும் அவர் ஜாக்கிரதையாக இருக்கிறார். எனவே அவர் கொஞ்சம் வீரேந்திர சேவாக் போல தன்னுடைய சொந்த வழியில் ரன்களை அடிக்கக்கூடிய ஒரு வீரர். இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு செல்லும் போது தான் உண்மையில் அவர் நமக்குத் தேவை” என்று கூறினார்.

Advertisement