பலவீனமே இல்லாத அவர மாதிரி பவுலர் இருப்பதற்கு இந்தியா அதிர்ஷ்டம் செஞ்சுருக்கணும்.. சஞ்சய் மஞ்ரேக்கர்

Sanjay Manjrekar 2
- Advertisement -

வங்கதேசத்துக்கு எதிராக சென்னையில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்து 376 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக அஸ்வின் 113 ஜடேஜா 86, ஜெய்ஸ்வால் 56 ரன்கள் எடுத்தனர். அதன் பின் பேட்டிங் செய்த வங்கதேசத்தை 149 ரன்களுக்கு சுருட்டிய இந்தியாவுக்கு அதிகபட்சமாக ஜஸ்ப்ரித் பும்ரா 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.

அதைத் தொடர்ந்து ஃபாலோ ஆன் கொடுக்காமல் விளையாடிய இந்திய அணி 287-4 ரன்கள் குவித்து இரண்டாவது இன்னிங்ஸை டிக்ளர் செய்தது. அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 109, சுப்மன் கில் 119* ரன்கள் எடுத்தனர். இறுதியில் 515 ரன்களை துரத்தும் வங்கதேசம் மூன்றாவது நாள் முடிவில் 158-4 ரன்களுடன் தோல்வியை தவிர்க்க போராடி வருகிறது.

- Advertisement -

பலவீனமில்லாத பும்ரா:

இந்நிலையில் எதிரணி, பிட்ச், கால சூழ்நிலை ஆகியவை யாராக எதுவாக இருந்தாலும் ஜஸ்ப்ரித் பும்ரா பலவீனம் இல்லாத பவுலராக செயல்படுவதாக முன்னாள் இந்திய வீரர் சஞ்சய் மஞ்ரேக்கர் பாராட்டியுள்ளார். அவரைக் கொண்டிருப்பதற்கு இந்திய அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும் என்று தெரிவிக்கும் சஞ்சய் மஞ்ரேக்கர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “அவருடைய வேரியசன், கூர்மையாக சிந்திக்கும் திறன் ஆகியவற்றைப் பற்றி நாம் அறிவோம்”

“தஸ்கின் அகமதுக்கு எதிராக அவர் பந்து வீசிய விதத்திலும் அர்த்தத்தை கண்டோம். இப்போட்டியில் தெரிந்த ஒரு விஷயம் என்னவென்றால் எதிரணி யாராக இருந்தாலும் ஆடுகளச் சூழ்நிலைகள் எதுவாக இருந்தாலும் அவர் பலவீனம் இல்லாத ஒரு பந்து வீச்சாளர். அது தான் மகத்துவத்தை மதிப்பிடுவதற்கான உண்மையான சிறந்த வழி”

- Advertisement -

இந்தியாவின் அதிர்ஷ்டம்:

“அவர் அணியில் இருப்பது இந்திய கிரிக்கெட்டுக்கு அதிர்ஷ்டம். இதைத் தவிர்த்து சாம்பியன் பவுலரான பும்ராவை பற்றி சொல்ல வேறு ஏதாவது இருக்கிறதா? அவர் தம்முடைய பலத்தையும் ஜீரோ பலவீனத்தையும் கொண்ட பவுலராக இருக்கிறார் என்பதை இன்று நான் உணர்ந்தேன். அதுவே மகத்துவத்திற்கான அளவுகோல் என்று கணிக்கிறேன்” எனக் கூறினார்.

இதையும் படிங்க: 270 ரன்ஸ் வைத்தே இங்கிலாந்தை முடித்து.. கிண்டலடித்த பென் ஸ்டோக்ஸ் முகத்தில் கரியை பூசிய ஆஸி

அவர் கூறுவது போல ஒவ்வொரு வருடமும் தன்னுடைய அனுபவத்தால் முன்னேறி வரும் ஜஸ்ப்ரித் பும்ரா தற்போது உச்சகட்ட செயல்பாடுகளை வெளிப்படுத்தி வருகிறார். குறிப்பாக 2024 டி20 உலகக் கோப்பையில் தொடர்நாயகன் விருது வென்ற அவர் 17 வருடங்கள் கழித்து இந்தியா சாம்பியன் பட்டம் வெல்ல உதவினார். அந்த வகையில் 3 வகையான கிரிக்கெட்டிலும் உலகின் தலைசிறந்த பவுலராக ஜஸ்ப்ரித் பும்ரா இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement