இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் ஆஸ்திரேலியா 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. அந்தத் தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்ற நிலையில் 2வது போட்டி செப்டம்பர் 21ஆம் தேதி லீட்ஸ் நகரில் நடைபெற்றது. இந்திய நேரப்படி மதியம் 3.30 மணிக்கு துவங்கிய அப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
அதைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய அணிக்கு கடந்த போட்டியின் நாயகன் டிராவிஸ் ஹெட் 29 ரன்களில் அவுட்டானார். அதே போல மறுபுறம் தடுமாறிய மேத்தியூ ஷார்ட்டை 29 ரன்களில் அவுட்டாக்கிய மேத்தியூ போட்ஸ் அடுத்ததாக வந்த ஸ்டீவ் ஸ்மித்தை 6 ரன்களில் கிளீன் போல்ட்டாக்கினார். அதனால் 89-3 என தடுமாறிய ஆஸ்திரேலியாவுக்கு மறுபுறம் கேப்டன் மிட்சேல் மார்ஷ் நிதானமாக விளையாடினர்.
சொதப்பிய இங்கிலாந்து:
ஆனால் எதிர்ப்புறம் வந்த மார்னஸ் லபுஸ்ஷேனை 19 ரன்களில் அவுட்டாக்கிய பேத்தல் மறுபுறம் அரை சதமடித்த மார்ஷையும் 60 (59) ரன்களில் காலி செய்தார். அதைத்தொடர்ந்து விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி அதிரடியாக விளையாடினார். ஆனால் எதிர்ப்புறம் கிளன் மேக்ஸ்வெல் 7, ஆரோன் ஹார்டி 23, ஆடம் ஜாம்பா 3 ரன்களில் அவுட்டாகி கை கொடுக்க தவறினர்.
இறுதியில் முடிந்தளவுக்கு போராடிய அலெக்ஸ் கேரி 74 (67) ரன்கள் குவித்தும் ஆஸ்திரேலியா 44.4 ஓவரில் 270 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இங்கிலாந்துக்கு அதிகபட்சமாக பிரிடன் கார்ஸ் 3, அடில் ரசித் 2, மேத்தியூ போட்ஸ், ஜேக்கப் பேத்தல் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். அதைத்தொடர்ந்து 271 ரன்களை துரத்தியை இங்கிலாந்துக்கு பிலிப் சால்ட் 12, பென் டக்கெட் 32, வில் ஜேக்ஸ் 0, கேப்டன் ஹரி ப்ரூக் 4, லியாம் லிவிங்ஸ்டன் 0 என முக்கிய பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஆரம்பத்திலேயே அழுத்தத்தை உண்டாக்கினர்.
ஆஸ்திரேலியா வெற்றி’
அதனால் 65-5 என ஆரம்பத்திலேயே சரிந்த இங்கிலாந்துக்கு மிடில் ஆர்டரில் ஜேமி ஸ்மித் 49, ஜேக்கப் பேத்தல் 25, பிரைடன் கார்ஸ் 26, அடில் ரசித் 27 ரன்களில் போராடி அவுட்டானார்கள். இறுதியில் 40.2 ஓவரிலேயே இங்கிலாந்தை 202 ரன்களுக்கு சுருட்டிய ஆஸ்திரேலியா 68 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. அதனால் 2 – 0* (3) என்ற கணக்கில் ஆஸ்திரேலியா முன்னிலை வகிக்கிறது.
இதையும் படிங்க: ப்ரோ என்னோட பொருளை உடைச்சுறாதீங்கன்னு சொன்னேன்.. ரிஷப் பண்ட் செய்த சேட்டையை பகிர்ந்த சுப்மன் கில்
குறிப்பாக சென்ற வாரம் நடைபெற்ற டி20 தொடரின் கடைசி போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது. அதனால் 1 – 1 (3) என்ற கணக்கில் இரு அணிகளும் கோப்பையை பகிர்ந்து கொண்டன. அப்போது மழையால் ஆஸ்திரேலியா தப்பியதாக பென் ஸ்டோக்ஸ் கிண்டலடித்தார். தற்போது ஒருநாள் தொடரில் முன்னிலை பெற்றுள்ள ஆஸ்திரேலியா பென் ஸ்டோக்ஸ் முகத்தில் கரியை பூசியுள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு அதிகபட்சமாக ஸ்டார்க் 3, மேக்ஸ்வெல் 2, ஹேசல்வுட் 2, ஆரோன் ஹார்டி 2 விக்கெட்டுகளை சாய்த்தனர்.



